பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமை (சித்த மரு.) 39

படம் 3. லிஸ்ஸிமிஸ் பங்க்டேட்டா புத் தகடு மட்டும் உண்டு. கொம்புப் பொருளாலான தாடை உள்ளது. முகமுனையில் மென்மையான தசையாலான உதடு நீண்டு துதிக்கை போல உள்ளது. டிரையோனிக்ஸ் லெய்த்தி (Trionyx leithi) சிறப்பினம் இந்திய ஆறுகளில் வாழ்கிறது. ஆமைகள், ஊர் வன வகுப்பில் அனாப்சிடா (anapsida) துணைவரி சையில் கிலோனியா (chelonia) வரிசையில் படுத்தப்பட்டுள்ளன. காண்க, அனாப்சிடா, கடல் ஆமை. நூலோதி வகை ந.மு. கௌ. ஜெ. Ekambaranatha Ayyar, M., A Manual of Zoo- logy, S. Viswanathan Pvt.Ltd., Madras, 1986. ஆமை (சித்த மருத்துவம்) ஆமையின் ஓடு, கொழுப்பு, தோல், முட்டை, பித்த நீர், இரத்தம், மாமிசம் ஆகியவை சித்த மருத்துவ முறையில் நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஓடு. ஆமை ஓடு சிறப்பாகக் குழந்தைகளின் நோய்க்குத் தரும் குடிநீராகவும், கருக்காகவும். சுட்ட தூளாகவும், மாத்திரையாகவும் கையாளப்படு கின்றது. ஆமை ஓட்டோடு மிளகு, உத்தாமணிச் சாறு, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து உலர்த்திக் கருக்கி வைத்துக் கொண்டு, 520 மி.கி. வரை தேன் அல்லது தாய்ப்பாலில்கொடுக்க மாந்தம்,கணம். மாந்த பேதி முதலியன நீங்கும். ஆமை ஓட்டைச் சுட்ட தூள், சுட்ட வசம்பு, வெள்ளைப் பூண்டு, ஓமம், நுணா இலை, வேலிப் பருத்தி, பொடுதலை இலை, வெற்றிலைக் காம்பு, கிராம்பு ஆகியவை ஒவ் ஆமை (சித்த மரு.) 39 வொன்றும் 4.2 கிராம் எடுத்துச் சட்டியில் இட்டுக் கருக்கி முறையாகக் குடிநீர் செய்து காலை, மாலை இருவேளை மூன்று அல்லது ஐந்து நாள்கள் கொடுத் தால் மாந்த நோய்கள் நீங்கும். ஆமை ஓடு, அதி விடையம், அசமதாகம், வட்டத்திருப்பி, பாவுட்டை இலை, மிளகு, சுக்கு சமன் சேர்த்து வெந்நீர்விட்டு அரைத்துத் தாய்ப்பாலில் கொடுக்கப் பொருமல், கழிச்சல் குணமாகும். ஆமை ஓட்டை இடித்துப் பொடி செய்து நெருப்பில் தூவி அந்தப் புகையை ஆசனவாயில் பிடிக்க ஆசனக் கடுப்புத் தீரும். ஓட்டுத்தூய்மை. பூநீறு, கற்சுண்ணாம்பு சமஅளவு எடை சேர்த்து, அத்துடன் எண்மடங்கு நீர்விட்டுக் கலக்கிப் பின்னர் தெளியச் செய்து அவற்றுடன் ஆமை ஓட்டைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இட்டு, எண்ணெய்க் கசிவு நீங்கும் வரை எரித்து எடுத்துத் தூய நீரில் கழுவி எடுக்கத் தூய்மையாகும். ஆமை ஓட்டுச் சுட்ட தூள். தூய்மை செய்த ஆமை ஓட்டை ஆடாதொடை விழுதில் புதைத்துச் சீலை செய்து உலர்த்தி, கனப்புடமிட்டு எடுத்துப் பிறகு கற்றாழைச் சாறு, துத்தி இலைச்சாறு ஆகிய வற்றில் தனித்தனியாக அரைத்து வில்லை செய்து உலர்த்தி ஓட்டிலிட்டு, மேலோடு மூடிச் சந்துவாய் சீலை செய்து புடமிட்டு எடுக்கப் பஸ்பமாகும். இதனை 65 மி. கிராம் முதல் 130 மி. கிராம் வரை தாய்ப்பால் அல்லது பசுவின் பாலில் கொடுக்க, குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், கணம், மாந்த பேதி முதலியன நீங்கும். மாத்திரை. ஆமை ஓட்டின் மீது சுண்ணாம்புத் தடவி, துணியில் சுற்றி ஒரு புடமிட்டு எடுக்க வெளுக்கும். இதைக் கற்சுண்ணாம்புத் தெளிவுநீர் விட்டு அரைத்து வில்லை செய்து, உலர்த்திப் புட மிடப் பஸ்பமாகும். இப்பஸ்பத்துடன் 1 பங்கு பூரம் சேர்த்து முன்போல் அரைத்து உளுந்தளவு மாத்திரை செய்து தாய்ப்பால், பால், வெந்நீர் இவற்றில் ஏதே னும் ஒன்றுடன் கொடுக்க உப்பு மாந்தம், கணமாந் தம், பசியின்மை, அசீரணபேதி முதலிய நோய்கள் தீரும். கொழுப்பு. இதனை உருக்கி நெய்யாக்கி, 1. முதல் 2 தேக்கரண்டி வரை குடித்து வர, கண்ட மாலை, பாண்டு, நுரையீரலைப் பற்றிய நோய்கள் நீங்கும். 'ஊனாமை நெய் மூல மோட்டும்' என்பதால் மூலத் திற்கும் இதனைப் பயன்படுத்தலாம் என்று அறிய முடிகிறது. தோல். உலர்ந்த தோலைப் பொடி செய்து நெருப்பிலிட்டுப் புகைபிடித்தால் மூலம் நீங்கும். முட்டை. குழந்தைகளுக்கு வரும் கக்குவான், வலி முதலிய நோய்களுக்கு முட்டையைப் பொரித்துக் கொடுக்கும் வழக்கம் இன்றும் உண்டு. பித்தநீர். இதனை நசியமிட வலி நீங்குமென்றும்