பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ஆய்வுக்கலங்கள்‌

42 ஆய்வுக்கலங்கள் படுகிறது. மணமுள்ள கனி உண்பதற்கும், இதிலி ருந்து கிடைக்கும் பசை போன்ற பொருள் புண், வெடிப்பு ஆகியவைகளுக்கு மருந்தாகவும் படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் சாறு சிறந்த செரிப்பானாகும். ஆனால் விதைகள் நச்சுத் தன்மை கொண்டவை. இலைகளை வயிற்றுப் புண்ணுக்கு மருந்தாகக் கொடுக்கிறார்கள். இவற்றில் 10% டானின் (tannin) உள்ளது. இலைகள் பீடி சுற்றப் பயன்படுகின்றன. ஆய்மா மரத்தின் கட்டை, கம் பங்கள் உத்தரங்கள், பலகைகள், மரக்கலங்கள், துடுப்புகள், வண்டிச் சக்கரங்கள், வேளாண் கருவி கள், பெட்டிகள், இருப்புப் பாதைகளின் குறுக்குப் பலகைகள் ஆகியவற்றிற்குப் பயன்படுகின்றது. குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கட்டையின் மையப் பகுதி இளஞ்சிவப்பு அல்லது கருஞ்சிவப்பு நிறத்திலும் அதன் சுற்றுப் பகுதி வெளிர் நிறத் திலும் காணப்படும். மரம் நீண்ட நாள் உழைக் கும் தன்மை கொண்டது. இழைத்தால் வழு வழுப்பை அடைகின்றது. மிக விரைவில் விரிசல்கள் தோன்றுவதாலும். ஓரங்கள் பிளந்துகொள்வ தாலும் கட்டையைப் பதப்படுத்துவது எளிதன்று. காற்றுப் பதப்படுத்துதல் (air seasoning) துளையில் உலர்த்திப் பதப்படுத்துதல் (kiln drying) ஆகிய இருமுறைகள் இருந்தபோதிலும், இவற்றில் எது சிறந்தது என்பதில் கருத்து வேறுபாடு இருந்து வரு கின்றது. கட்டைகளைச் சுற்றி வளையங்கள் இடுவ தாலும் (gridling), உலர்வதை விரைவுப்படுத்து வதாலும், கவனமாக அடுக்கி வைப்பதாலும் இவற் றைப் பல ஆண்டுகள் வரையில் கெட்டுப் போகா மல் பாதுகாக்கலாம். நூலோதி எ.ஜாகீர் உசேன் 1. Beddome, R.H., The Flora Sylvatica for Southern India., 1872. 2.Brandis, D., Indian Trees, Constable & Co., Ltd. London, 1921. 3. Clarke C.B., Hook., F. Fl. Br. Ind., 1979 4. Gamble, J.S., Fl. Pres. Madras., Adlard & Son Ltd., London, 1919. 5. Gamble, J.S., A Manual of Indian Timbers, Sampson Law & Marston & Co., London, 1972. 6. Pearson, R.S., Brown, H.B., Commercial Tim- bers of India, 1932. 7. The Wealth of India, CSIR Publication, New Delhi, 1984. ஆய்வுக்கலங்கள் புதிய கண்டுபிடிப்புக்களுக்கும், அறிவியலுடன் இணைந்த சமுதாய வளர்ச்சிக்கும் ஆய்வு இன்றி யமையாதது. மக்கள் பெருக்கத்தால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளை ஈடுசெய்தல் உணவுப்பொருள் உற்பத்தியைப் பெருக்குதல், கனிம எண்ணெயின் எதிர்பாராத விலை உயர்வைக் கட்டுப்படுத்தல், அணுக்கதிர்வீச்சுக் கழிவுப் பொருள்களைக் கொட்டும் ஆழ்கிடங்குகளைக் காணல் முதலிய தவிர்க்க முடி யாத தேவைகளின் பொருட்டு அனைத்து நாடுகளும் கடற்பகுதிகளை ஆய்வு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.பழங்காலத்தில் மக்கள் சிறிய கலங்களை மீன்பிடிக்கப் பயன்படுத்தி வந்தனர். அவை படி நிலை வளர்ச்சியில் உருவில் பெரியனவாகி வணிகக் கலங்களாகவும், பயணக்கலங்களாகவும், போர்க் கலங்களாகவும் உருவெடுத்தன. புதிய நிலப்பரப்பைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்ட தேட்ட வல்லுநர்களது அன்றாடப் பட்டறிவுக் குறிப்புகள், இவ்வாய்வுக் கலங்களை (research vessels) உ உருவாக்குவதற்கு அடிகோலின. கடல் நீரில் வாழும் பல உயிரினங்களை அறியவும் பிடிக்கவும் கடற்பரப்பில் காணப்படும் பல்வகைப் படிவுப்பாறைகளைப் பற்றி அறியவும், தொடர்ந்து அம்முயற்சியில் ஈடுபட்ட சில வல்லுநர்களால் எடுக்கப்பட்ட முயற்சிகள் இவ்வாய்வுக் கலங் களின் தேவைக்கு உயிரூட்டின. மனித இனத்தின் தேவையை நிறைவேற்ற, அவர்களுடைய பண்டங் களை மாற்றிக்கொள்ளும் முயற்சி வலுப்பெற்ற தால், புதிய கடற்பாதையும் அதற்கேற்பக் காலத்தி னைக் கணிக்கும் முயற்சியும், அதற்கேற்பப் பெரிய கலங்களை அமைத்திடும் அவாவும் இவ்வாய்வுக் கலங்களை உ உருவாகி க்க வழிவகுத்தன. ஆய்வுக்கலங்கள் கடல் ஆய்வுக்கு இன்றியமை யாதவையாகி விட்டன. கடல் ஆய்வுக்கழகங்களுக்கு இவை இன்றியமையாதவை என்பதை, இவற்றின் செலவில் பெரும்பகுதியை இலை ஈர்த்துக் கொள் வதும், இவ்வாய்வுக் கலங்களை ஒழுங்காகச் சிக் கனமாகப் பயன்படுத்தும் வழிமுறைகளை இந் நாளில் பல நாடுகள் திட்டமிட்டு வருவதும் எடுத்துக்காட்டும். கடல் ஆய்வுக்கெனப் பயன்படுத் தப்படும் ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்ட சிறிய படகுகளும், அளவாய்வுக் கலங்களும் (survey vessels) ஆழ்துளையிடும் கலங்களும் (drilling vessels) இவ் வாய்வுக் கலங்களைச் சார்ந்தனவாகக் கருதப்படு கின்றன. உலகிலேயே பெரிய ஆய்வுக்கப்பல், சோவி யத்து நாட்டின் விண்வெளிவீரர் யூரி ககாரின் (Cosmonaut Yuri Gagarin) என்னும் கலமேயாகும். இதன் நீர்ப்பெயர்ச்சி எடை 45,000 டன்களாகும்.