பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையுறுப்புச்‌ சட்டகம்‌ 81

இணையுறுப்புச் சட்டகம் 81 பெற்றுள்ளது. இருவாழ்விகள், பனிக்குடமுடையவை (amniotes) ஆகியவற்றில் இடுப்பு வளையத்தின் ஒவ் வொரு பக்கத்திலும் அசிட்டாபுலம் (acetabulum) என்னும் அசைவுக்குழிக்கு மேற்பக்கத்தில் இலியக் பகுதியும், (iliac part) கீழ்ப்பக்கத்தில் இஷிய-ப்யூபியப் பகுதியும் (ischio-pubic part) உள்ளன. கீழ்ப்பாகத் தின் முன்பகுதியை ப்யூபியப் பகுதி (pubic part) எனவும், பின் பகுதியை இஷியப்பகுதி (ischiatic part) எனவும் பிரித்துக்கூறலாம். எலும்பாக்கம் நடைபெறும்போது இப்பகுதிகளில் இலியம், இஷியம், ப்யூபிஸ் என்னும் மூன்று எலும்புகள் சேர்ந்துள்ள இடுப்பு வளையம் உண்டாகிறது. இலியம் முது கெலும்புடன் அசையாத வகையில் உறுதியாக இணைக்கப்பட்டுள்ளது. பனிக்குடம் உடைய முது கெலும்பிகளில் இஷியம், ப்யூபிஸ் ஆகிய இரண்டிற்கு மிடையே அப்ட்டுரேட்டர் துளை (obturator foramen எனப்படும் ஓர் இடைவெளியுள்ளது. மூன்று எலும்பு களும் அசிட்டாபுலக் குழியில் கூடுகின்றன. இரண்டு பக்கத்து ப்யூபிசுகளும் சேருமிடத்தில் முன்பகுதியில் எப்பி ப்யூபிசும் (epi pubis), இரண்டு பக்கத்து இஷியங்களும் சேருமிடத்தின் பின்பகுதியில் ஹைப் போஇஷியமும் (hypoischium) குருத்தெலும்புகளாகத் தோன்றுகின்றன. பறவைகளில் இடுப்பு வளையமும் இடுப்பெலும்பும் இணைந்து கூட்டுஇடுப்பெலும்பு (synsacrum ) தோன்றியுள்ளது. இலியமும் இஷியமும் நீண்டு தட்டையான அமைப்புப் பெற்று முதுகெலும் பின் இடுப்பெலும்புடன் முழுமையாக இணைந் துள்ளன. ஒரு மெல்லிய குச்சிபோலவுள்ள ப்யூபிஸ் பின்பக்கம் நோக்கி நீட்டிக்கொண்டிருக்கிறது. படுக்கை வாட்டத்திலுள்ள பறவையின் உடலை இரண்டு கால்களால் மட்டும் தாங்குவதற்கு ஏற்ற வகையில் பறவைகளின் இடுப்பெலும்பு அமைந் துள்ளது. சில பாலூட்டிகளின் வளர்கருநிலையிலும், வேறு சிலவற்றின் இளம்பருவம் வரையிலும் அசிட் டாபுல எலும்பு ஒன்று அசிட்டாபுலக் குழிவுப் பகுதி யில் காணப்படுகிறது. தோள் வளையத்திற்கும் இடுப்பு வளையத்திற்கு மிடையே அமைப்பொற்றுமை காணப்படுகிறது. இலியமும், தோள்பட்டையும், கோரக்காய்டும், ப்யூபிசும், முன்கோரக்காய்டும் ஒன்றுக்கொன்று ஒப் பானவை எனக் கருதப்படுகிறது. . துடுப்புகள். குருத்தெலும்பு மீன்களின் தோள் துடுப்புகள் பல குருத்தெலும்புகளால் வலுவூட்டப் பட்டுள்ளன. துடுப்பின் அடிப்பகுதியில் முன்டெரி ஜியம் (propterygium) இடைடெரிஜியம் (mesoptery- gium). பின்டெரிஜியம் (metapterygium) என மூன்று அடிக்குருத்தெலும்புகள் (basal cartilages) உள்ளன. இவை கிளினாய்டு பகுதியின் மேற்பரப்பில் அசையும் வகையில் இணைந்துள்ளன. இவற்றை அடுத்துப் பல ஆரைகள் (rays) வரிசையாக அமைந்துள்ளன. அ.க.4-6 சுறா 3. பறவை முயல் v. 2 படம் 4. இடுப்பு வளையம் 2 தீவளை 1. இடுப்பு வளையம் 2. இலியம் 3. அசிட்டாபுலம் 4. பியூபிஸ் 5. அப்ட்டுரேட்டர் துளை ஆரைகளை அடுத்துக் கொம்பாரைகள் (ceratotri- chin) வரிசையாக உள்ளன. இடுப்புத்துடுப்பில்