பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையுறுப்புச்‌ சட்டகம்‌ 83

மட்டும் மூன்று) எலும்புமேடுகள் (trochanters) உள்ளன. இவை தசை ஒட்டுப்பரப்புக்களாகச் செயல்படுகின்றன. ஃபீமரின் வெளிநுனி இரண்டு முண்டுகளாக உள்ளது. இவை முழங்கால் பகுதி எலும்பாகிய ட்டிபியாவுடன் சேர்ந்து அசைகின்றன. பல விலங்குகளில், ஃபீமரின் மருங்கில் ஓர் அசை பரப்பு (articular facet) உள்ளது. மற்றொரு முழங் கால் எலும்பாகிய ஃபிபுலாவின் அண்மை முனை இப்பரப்பின்மேல் அசைகிறது. வாலுடைய இருவாழ்விகள் போன்ற நீரில் வாழும் விலங்குகளின் கால்கள் உடலின் நிலை வாட் டத்திற்கு நேர் செங்குத்தாக உடல் மருங்குகளில் நீட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால் நிலத்திலும் நீரிலும் காணப்படும் இருவாழ்விகள் தொடங்கி, மேம்பட்ட பிற விலங்குகளில் படுக்கைவாட்டிலுள்ள உடல், கால்களால் தாங்கப்படுகின்றது. இத்தகைய விலங்குகளில் முன்காலின் அடிக்காலும் பின்காலின் அடிக்காலும் முன்னோக்கி நிலைபெற்றுள்ளன. வாலிலா இருவாழ்விகளில் முன்காலின் முழங்காலில் ரேடியசும், அல்னாவும், பின்காலின் முழங்காலில் டிபியாவும், ஃபிபுலாவும் ஒன்றாக இணைந்துள்ளன. பின்கால்களில் டார்சல்கள் நீளமாக இருப்பதால் கணுக்கால் ஒரு தனிப்பகுதியாகக் காணப்படுகிறது. அதனால் இவற்றின் பின்கால்களில் நான்கு பகுதிகள் இருப்பன போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஊர் வனவற்றின் கால்களில் அடிக்கால் பகுதி முழங்கால் பகுதிகளுடன் அசையாமல், கணுக்கால் பகுதிகளுக் குள்ளேயே அசைகிறது. பறவைகளிலும், கணுக்கால் எலும்புகளுக்கிடையேயுள்ள அசைவுகள் காரண மாகத்தான் அடிக்கால் பகுதிகள் அசைகின்றன. பற வைகளின் சிறகுச் சட்டகம் பொது அமைப்பினின்று பெரிதும் மாறுபட்டுள்ளது. முன்கால்களே சிறகுகளாக மாறியுள்ளன; சிறகு களின் மேற்கால், முழங்கால் எலும்புகளில் மாற்றம் ஏதுமில்லை.அடிக்கால் பகுதிகளில் பெரும் மாற்றங் கள் உள்ளன. கார்ப்பல் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்துவிட்டதால், அவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனால் மெட்டாகார்ப்பல்களும் ஃபேலஞ்சுகளும் (விரல் எலும்புகள்) நீண்டு விட்டன. சிறகுகளில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது விரல்கள் மட்டுமே உள்ளன. கட்டைவிரலும் சுண்டு விரலும் இல்லை. கால்களிலும் டார்சல்களும், விரல் எலும்புகளும் இணைந்துள்ளன. கணுக்கால் இணைப்பு, டார்சல்களுக்கு இடையேயுள்ளது. அடிட்டார்சல்கள் (basal tarsals) டிபியாவுடன் ஒன்றி இணைந்துள்ளன. டிபியா மிகக்குறைவுற்று டார்ச்சுடன் இணைந்துள்ளதால் டிபியோட்டார் சஸ் முழங்கால் எலும்பாகவுள்ளது. டார்சல்கள் மெட்டாட்டார்சல்களுடன் இணைந்து டார்சோ மெட்டாட்டார்சல்களாக மாறியுள்ளன. கால்களில் அ.க.4-6அ ணையுறுப்புச் சட்டகம் 83 நான்கு விரல்கள் உள்ளன. முதல் விரலாகிய கட்டை விரல் இல்லை. இரண்டாவது விரலில் இரண்டு, மூன்றாவது விரலில் மூன்று, நான்காவது விரலில் நான்கு, ஐந்தாவது விரவில் ஐந்து என்ற வகையில் ஃபேலஞ்சுகள் உள்ளன. ஆனால் பெரும்பாலான பறவைகளில் மூன்று விரல்களும், நெருப்புக்கோழி போன்றவற்றில் இரண்டு விரல்களும் உள்ளன. 1. -00 7 தவளை முயல் குதிரை படம் 6. பின் கால் அசிட்டாபுலம் 2. தொடை எலும்பு 3. மெட்டாட்டார்சஸ் 5. விரல் எலும்பு பி. மூன்றாவது எலும்புமேடு 8. ட்டிபியா 9. ட்டார்சஸ் முழங்கால் சில் 7. ஃபிபுவா. பாலூட்டிகளிலும் கால்எலும்புகள் பலவகை மாற்றங்களுற்றுக் காணப்படுகின்றன. முதன்மைப் பாலூட்டிகளின் (primates) முழங்கைப்பகுதியில் ரேடியசின், நுனி அல்லாவின் நுனியின்மேல் உருண்டு உள்பக்கம் அமையும் தன்மை பெற்றுள்ளது. இவற்றின் கட்டைவிரல் அல்லது பெருவிரல் மற்ற நான்கு விரல்களுக்கும் எதிர்ப்புறமாக அமைவதால் இவற்றின் கைகள் பற்றும்ஆற்றல் பெறுகின்றன. வௌவால்களின் முன்காலில் இரண்டு முதல் ஐந்தாவது விரல்கள் வரை நான்கு விரல்களும் மெலிந்து நீண்டு இறக்கையைத் தாங்குகின்றன. இவ்விரல்களின் மெட்டாகார்பல்கள் அல்லது ஃபே லஞ்சுகள் மிக அதிகமாக நீண்டுள்ளன. இவற்றின் முதல் விரல்கள் வளர்ச்சியற்றுச் சிறியனவாகவுள் குளம்புடைய பாலூட்டிகள் சிலவற்றில் குறைவுற்றுள்ளது அல்லது ரேடியசுடன் ளன.