பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணை வாழ்வு 85

எனவே, உயிரினங்களுக்கிடையில் காணப்படும் இணை வாழ்வை அறிவியற்கண்கொண்டு நோக்கின் அவை இருவகைப்படும். முதலாவது உணவு, உறை விடம், இடம்பெயர்தல் போன்றவற்றில் ஒற்றுமை யும், கூட்டுறவால் ஒன்றுக்கொன்று பாதிப்பு இன்றி யும், சுற்றுச்சூழல் காரணமாய் ஒருசில நேரங்களில் பிரிந்தும், தனித்தும் வாழவல்ல இணை வாழ்வை விரும்பிவாழும் இணை வாழ்வு (facultative symbiosis ) என்று கூறலாம். இரண்டாவது - உணவு, உறை விடம் இடப்பெயர்ச்சி போன்றவை மட்டுமன்றி இரு வேறு உயிரினங்களும் ஒன்று மற்றொன்றைச் சார்ந் தும், ஒன்றின் உதவியின்றி மற்றொன்று வாழ முடி யாமலும் உள்ள கட்டாய இணை வாழ்வை, இன்றி யமையாத இணை வாழ்வு (obligatory symbiosis) என்று கூறலாம். விரும்பி வாழும் இணை வாழ்விகள். விரும்பி வாழும் இணை வாழ்விகளுக்குச் சான்றாக எண்ணி றைந்த விலங்கு, தாவரங்களின் இணை வாழ்வைக கூறலாம். துறவி நண்டும் (hermit - crab), கடல் சாமந்தி (sea - anemone) என்ற குழியுடலியும் கூடி வாழும் இணை வாழ்வுக்குச் சான்றாகக் கூறலாம். குழியுடலிக்கு நல்ல நிலையான இருப்பிடமும், உண வும் தேவை. இத்தேவை துறவிநண்டு வாழும் சங்கின் ஓட்டின் மேல் குழியுடலி ஒட்டிக் கொள்வதால் நிறை வேறுகிறது. நண்டிற்கு நல்ல பாதுகாப்பும், எளிய முறையில் உணவும் தேவை, குழியுடலியின் நச்சு முள்கள் பகைவர்களிடமிருந்து பாதுகாப்பையும், குழியுடலி உணவைப் பிடித்து உண்ணும் பொழுது தவறி விழும் உணவும் துறவி நண்டிற்குச் சிரமமின் றிக் கிடைப்பதால் இரண்டும் ஒன்றுக்கொன்று நன்மையடைகின்றன. மேலும் ஒன்றின் உதவியின்றி மற்றொன்று பிரிந்தும், தனித்தும் வாழ முடியும். இவ்வாறான இணை வாழவு, விரும்பி வாழும் இணை வாழ்வாகும். ை வாழ்வு 85 இவ்வுலகில் காணப்படும் நுண்ணுயிரிகளில் 90 விழுக்காடு நன்மை பயப்பனவாகும். இவற்றில் பெரும்பாலானவை விலங்கு, தாவர இனங்களுடன் கூடி வாழும் இணை வாழ்விகளாகும். நன்மை பயக் கும் பல்லாயிரம் நுண்ணுயிரிகள் மனிதனுடன் beneficial microbes) இணைந்து வாழ்கின்றன. சான் றாக, மலக்குடல் பகுதியில் வாழும் கிளாஸ்டிரிடியம் (clostridium) ஒரு வகைச் சீரண நீரைச் சுரக்கவல் லது. லாக்டோபசிலஸ் (lactobacillus ) நச்சு நுண் ணுயிரிகளை அழிக்க வல்லது. கேலிபாசிலஸ் (caliba- cillus) வைட்டமின்களை ஆக்கவல்லது. விரும்பி வாழும் இணை வாழ்விகளுக்குக் கால் நடைகளும் அவற்றுடன் காணும் ஒரு சில பறவை களும் நல்ல சான்றாகும். ஆடு, மாடு, எருமை போன்றவற்றுடன் வாழும் காக்கை, கொக்கு. நாரை, கரிச்சான் போன்ற பறவைகள் கால்நடை களின் மேல் வாழும் பேன், உண்ணி போன்ற ஒட்டுண்ணிகளைப் (parasite) பிடித்து உண்டு நன் மையடைவதுடன் கால்நடைகளை ஒட்டுண்ணித் தொல்லையிலிருந்தும் பாதுகாத்து உதவுகின்றன. மேலும் கால்நடைகளின் காது, மூக்கு, நாள்பட்ட புண் போன்றவற்றில் காணப்படும் அட்டைப்புழு நாடாப்புழு போன்ற ஒட்டுண்ணிகளை உண்டு ஒன்றுக்கொன்று நன்மையடைகின்றன. காட்டு விலங்குகளான வரிக்குதிரை, காட்டெருமை, காண் டாமிருகம் போன்றவற்றின் மேல் அமர்ந்து வாழும் ஒருவகை நச்சு ஈ தின்னும் பறவை (Tick bird) ஒட்டுண்ணிகளை உண்பதுடன் ஆபத்துக்காலங் களில், கூக்குரலிட்டும், கொத்தியும் தன் தோழர் களை எச்சரிக்கை செய்து எதிரிகளிடமிருந்து பாது காக்கின்றது. கடல் வாழ் உயிரிகளில் பவளப்பாறைச் சுற்றுச் சூழல் என்னும் அமைப்பை இணை வாழ்விகளின் உல்லாசம் எனலாம். இங்கு பல்வேறுபட்ட உயிரி னங்கள் ஒன்றற்கொன்று உதவியும், உதவி பெற்றும், அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வது ஓர் இனிய இணை வாழ்வாகும். பவளஉயிரி (coral) சிவப்புப்பாசி (corallina) பச்சைப்பாசிகள் (zooch- lorellae) மஞ்சள் பழுப்பு நிறப்பாசிகள் (Zooxan thellae) போன்றவற்றுடன், நண்டுகள். மெல்லு டலிகள், கடற்பூச்சிகள் புழுக்கள், முள்தோலிகள், மீன்கள் அனைத்தும் கூடி வாழ்வது இணைவாழ் வுக்குச் சிறந்த சான்றாகும். கடற்பாசிகளில் பச்சை பழுப்பு நிறப்பாசிகளின் இணை வாழ்வு ஒரு செல் உயிரி முதல் திமிங்கிலம் வரை பரந்து காணப்படு கின்றன. இதே போன்று நிலத்தில் வாழும் தாவ ரங்களின் மேல் நீலப்பாசிகளும், பல நுண்ணு யிரிகளும் இணைந்து வாழ்கின்றன. அடர்ந்த காடு களில் நெடிதுயர்ந்த மரங்களும் அவற்றின் தண்டு, வேர்ப்பகுதிகளில் பாசி வகைகள், பூஞ் சணம், காளான் வகைகள், கொடிகள், சிறுசெடிகள், கிளை,