பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 இணைவு இனப்பெருக்கம்‌

88 ணைவு இனப்பெருக்கம் இணைவு இனப்பெருக்கம் இனப்பெருக்கத்தின் போது இரு உயிரிகள் ஒன்றோ டொன்று தற்காலிகமாகச் சேர்ந்து அவற்றின் நியூக் ளியப்பொருள்களைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச் சியை இணைவு இனப்பெருக்கம் (conjugation) என் றும், இந்த இரு உயிரிகளை இனப்பெருக்க இணை விகள் (conjugants) என்றும் கூறுவர். இத்தகைய ணைவு இனப்பெருக்கமுறை முதலுயிரிகள் (proto- zoans), பாக்டீரியாக்கள் (bacteria) ஆகிய உயிரினங் களில் நடைபெறுகின்றன. இணைவு இனப்பெருக் கத்தில் பங்குகொள்ளும் இணைவிகள் பெரும்பாலும் சம அளவுத் தோற்றத்தைப் பெற்றிருக்கும். (எ.கா). பாக்ட்டீரியம். பாரமசியம் (paramacium). ஆனால் வார்ட்டிசெல்லா (vorticella) என்னும் உயிரியில், ஓர் இணைவி பெரியதாகவும் மற்றது சிறியதாகவும் இருக்கும். பாரமீசியத்தில் ஆண், பெண் என்ற பால் வேறு பாடு இல்லை; எனினும் இதில் பால்வழி இனப் பெருக்க முறையின் தொடக்கநிலையைக் காணலாம். இணைவு இனப்பெருக்கத்தில் ஈடுபடவுள்ள இரண்டு பாரமீசியங்கள் தங்களுடைய வாய் வரிப்பள்ளங்கள் (oral groove), ஒன்றுக்கு எதிராய் ஒன்று பொருந்தும் முறையில் இணைகின்றன. பிறகு இவற்றின் செல் தொண்டைகள் (cytopharynx) சிதைந்து அவ்விடத் தில் இரண்டு இணைவிகளின் செல்பிளாசத்திற்கும் தொடர்பு ஏற்படுகிறது. இதனால் இரண்டு இணை விகளுக்குமிடையே ஓர் அகப்பிளாசப் பாலம் (endo- plasmic bridge) ஏற்படுகிறது. ஒவ்வொரு பாரமீசி யத்திலும் பெரிய நியூக்ளியஸ் (macronucleus), சிறிய நியூக்ளியஸ் (micronucleus) ஆகிய இரண்டு நியூகளி யசுகள் உள்ளன. சிறிய நியூக்ளியஸ் குன்றல்பிரிவு (meiosis) முறையினால் இரண்டு முறை பிரிந்து ஒற் றைப்படைக் குரோமோசோமுள்ள நான்கு நியூக்ளி யசுகள் உண்டாகின்றன. எஞ்சிய நியூக்ளியசுகள் உருக்குலைந்து செல்பிளாசத்துடன் கலந்துவிடுகின் றன. எஞ்சிய ஒரு நியூக்ளியசு மறைமுகப்பகுப்பு (mitosis) முறையினால் இரண்டாகப் பிரிவதால் பெரியதும் சிறியதுமான இரண்டு நியூக்ளியசுகள் உண்டாகின்றன. இவற்றில் பெரிய நியூக்ளியசுக்கு நிலையான முன்னோடி நியூக்ளியசு (stationary pro- nucleus) என்றும் சிறிய நியூக்ளியசுக்கு முனைப்பான அல்லது நகரும் முன்னோடி நியூக்ளியசு (active or migratory pronucleus) என்றும் பெயர். ஓர் இணை வியிலிருக்கும் நகரும் முன்னோடி நியூக்ளியசு, பாலத் தின் வழியே மற்றோர் இணைவியை அடைந்து அதி லிருக்கும் நிலையான முன்னோடி நியூக்ளிய சுடன் இணைய இணைந்த நியூக்ளியசு (conju- gated nucleus) உண்டாகிறது. இந்த இணைந்த நியூக்ளியச இரட்டைப்படை குரோமோசோம் எண் ணிக்கை கொண்டுள்ளது. இச்செயல்கள் நிகழும் போது இணைவிகளிலுள்ள பெரிய நியூக்ளியசுகள் சிதைவுற்றுச் செல்பிளாசத்துடன் கலந்துவிடுகின்றன. இந்த இணைவு முறையில் பெரிய நியூக்ளியஸ் எந்தப் பங்கும் ஏற்பதில்லை. இதன்பிறகு இரண்டு இணைவிகளும் தனித்தனியே பிரிந்து விடுகின்றன. இவ்வாறுபிரிந்த இணைவிகளுக்குப் பிரிந்தஇணை விகள் (ex-conjugants) என்று பெயர். ஒவ்வொரு பிரிந்த இணைவியிலும் உள்ள ணைந்த நியூக்ளியசும் மூன்று முறை பிரிந்து எட்டு நியூக்ளியசுகளாகின்றன. இவற்றுள் நான்கு நியூக்ளிய சுகள் பெரியனவாக வளர்ந்து தங்கள் சந்ததிகளின் பெரிய நியூக்ளியசுகளாகின்றன. மற்ற நான்கு நியூக்ளியசுகளில் மூன்று அழிய, எஞ்சிய ஒரு நியூக்ளி யஸ் மறைமுகப்பகுப்பு முறையினால் இரண்டாகப் பிரிகிறது. அதே சமயம் பிரிந்த இணைவிகள் உடல் குறுக்குவாட்டத்தில் இரண்டாகப் பிளவுறுகிறது. இவ்வாறு இரண்டாகப் பிளவுறும்போது ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறிய நியூக்ளியசும் இரண்டு பெரிய நியூக்ளியசுகளும் செல்கின்றன. அடுத்து ஒவ்வொன் றிலும் சிறிய நியூக்ளியஸ் மட்டும் மீண்டும் ஒருமுறை மறைமுகப் பிரிவு முறையினால் இரண்டாகிறது. இந்தப் பிரிவின்போது உயிரியின் உடலும் இரண் டாகப் பிரிந்து இரண்டு சேய் உயிரிகள் தோன்று கின்றன. இதன் விளைவால் ஒவ்வொரு சேய் உயிரிக் கும் ஒரு பெரிய நியூக்ளியசும் ஒரு சிறிய நியூக்ளியசும் செல்கின்றன. ஒவ்வோர் இணைலியும் இணைவு இனப்பெருக்கத்தின் முடிவில் நான்கு சேய்ப் பாரமீசி யங்களை (daughter paramecia) உண்டாக்குகின்றது. ஆகவே இணைவு இனப்பெருக்கத்தில் கூடும் இரண்டு பாரமீசியங்களிலிருந்து எட்டு சேய்ப் பாரமீசியங்கள் உண்டாகின்றன. இவை, வளர்ந்து பெரியனவாகி அவற்றின்தாய் பாரமீசியங்களைப் போலவே வாழ்க் கையைத் தொடருகின்றன. பாரமீசியத்தில் பெரும்பாலும் இருசமப்பிளவு முறையிலேயே (binary fission) தொடர்ந்து இனப் பெருக்கம் நடைபெறுகிறது. இதனால் இவற்றின் உருவ அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு உருவம் சிறுத்து விடுவதுடன், வீரியத்தை இழந்து உடற்செயலியலிலும் (physiology) குறைவு ஏற்படுகின்றது. இவ்வகை இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெற்றால் இவ் வினமே நசிந்து போகக்கூடுமாகையால், இவை இதைத் தடுக்க இணைவு இனப்பெருக்க முறையை இடையிடையே மேற்கொள்ளுகின்றன. இணைவு இனப்பெருக்க முறையில் ஈடுபடும் இணைவிகள் அவற்றின் மரபுப்பொருளை ஒன்றுக்கொன்று பரி மாறிக்கொள்வதால் இழந்த வீரியத்தை மீண்டும் பெறுகின்றன. இதுவே இணைவு இனப்பெருக்க முறையின் முக்கியத்துவமாகும்.