இணைவுப்பட்டியல் 89
- ெ
இணைவுப்பட்டியல் 89 ee 00 .. . பாரமீசியத்தில் இணைவு இனப்பெருக்கம் 1. இணைவிகள் 2. பெரிய நியூக்ளியஸ் 3. சிறிய நியூக்ளியஸ் 4. நகரும் முன்னோடி நியூக்ளியஸ் 5. நிலையான முன்னோடி நியூக்ளியஸ் 8. பிரிந்த ணைவிகள் 7. இணைந்த நியூக்ளியஸ் சானிபார்ன், டி. எம் (Sonneborn, T. M.) என்ற மரபியல் வல்லுநர் பாரமீசியம் அரிலியா (paramecium aurelia) என்னும் உயிரியில் இணைவு இனப்பெருக் கம் நடைபெறும்போது, நியூக்ளியசுகளை மட்டும் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்ளாமல் சில சமயங் களில் தங்களுடைய செல்பிளாசத்தில் உள்ள கப்பாப் பொருள்களைத் (kappa particles) தமக்குள் பரிமாறிக் கொள்வதாகக் கண்டுள்ளார். இத்தகைய செல்பிளா சப் பரிமாற்றம் குறுகிய காலத்தில் நிகழும் இணைவு இனப்பெருக்கத்தின்போது நடப்பதில்லை. ஆனால் இணைவிகளின் இணைவு நேரம் அதிகமாக இருக்கும் போது மட்டுமே, மேற்கூறிய செல்பிளாசப் பரிமாற்ற மும் கப்பாப்பொருள் பரிமாற்றமும் நிகழ்வனவாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இணைவு இனப்பெருக்க முறை பாக்ட்டீரியங்களிலும் காணப்படுகிறது. தற்போது இந்த இணைவு இனப்பெருக்க முறையை அடிப்படையாகக்கொண்டு மரபுவழிப் பொறியியல் (genetic engineering) மூலம் உயிரினங் களிலுள்ள நோயைப் போக்கும் ஆய்வில், உலகின் பல பகுதிகளிலுமுள்ள அறிவியலறிஞர்கள் ஈடுபட் டுள்ளனர். இரா. பக்தவச்சலம் நூலோதி. முருகேசன்,ஆர்., முதுகெலும்பற்றவை, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், மறுபதிப்பு, சென்னை 1976; Ekambaranatha Ayyar, M., A Manual of Zoology, Vol. 1., S. Viswanathan Pvt Ltd., Madras, 1982; Gardner, E.J., Principles of Genetics, Wiley Eastern Private Limited, New Delhi, 1968. இணைவுப்பட்டியல் புள்ளியியலில், திரட்டப்படும் புள்ளிவிவரங்கள் அளவுக்கு ஏற்றவாறு அல்லது பண்புகளுக்கு ஏற்ற