இதய அறுவை மருத்துவம் 95
காசநோய் வெளியுறை அழற்சி அடிக்கடிக் காணக்கூடிய ஒன்று.இது நுரையீரல் காசநோயி லிருத்து பரவி வரக்கூடியது. இதன் விளைவாக நீண்டகால இதய வெளியுறை நெருக்க நோய் ஏற் படுகிறது. இவ்வகை நோய்க்குக் காசநோய் மருத்து வச் சிகிச்சையுடன் கார்ட்டிகோஸ்ட்டீராய்டு மருந்தை யும் சேர்த்து அளிக்க வேண்டும். அ. ஜெகதீசன் நூலோதி. Nelson, W. E., Nelson Text Book of Pediatrics, Eleventh Edition, W. B. Saunders Company, Philadelphia, 1979; Harrison's Principles of Internal Medicine, Tenth Edition, McGraw-Hill Bcok Company. 1984. இதய அறுவை மருத்துவம் இதய நோய் மருத்துவத்தில் அறுவை மருத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான பிறவி இதய நோய்களையும் (congenital heart diseases ) மூட்டுவலி (rheumatic) மற்றும் இதய இரத்தத் தமனி நோய்களையும் (coronary artery diseases) அறுவை மருத்துவத்தால் தீர்க்க முடியும். இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்தப் பல புதிய உத்திகளும் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டதன் பயனாக இதய அறுவை யில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதய அறுவைகளை மூன்று வகைப்படுத்தலாம். இதயத்தின் வெளியே செய்யப்படும் அறுவை. இதயத் தின் வெளிப்புறம் அமைந்துள்ள பெரிய இரத்தக் குழாய்களிலோ இதய மேல் உறையிலோ அறுவை சிகிச்சை (extra cardiac operation) செய்யப்படுகிறது. இதில் இதய அறைகள் (chambers) நேரடியாகப் பாதிக்கப்படாமையால் இதயத்தின் வேலை செய்யும் திறனும் பாதுகாக்கப்படுகிறது. இதயத்தைத் திறக்காமல் செய்யும் அறுவை. இதயத் தின் உள்ளே, ஆனால் நேரடிப் பார்வையின் கீழ் அல்லாமல், கை விரல்களினாலோ, சிறு கருவிகளைச் செலுத்தியோ தொடு உணர்ச்சியின் உதவியால் இவ்வித அறுவைகள் செய்யப்படுகின்றன. இம்முறை யில் இதயத்தின் உட்புறத்தோடு நேரடித் தொடர்பு இருப்பதால் இதயத்தின் செயல்திறன் பாதிக்கப்படு கிறது. திறந்த இதயத்தில் அறுவை. இது திறந்த அசை வில்லாத இதயத்தில் நேரடிப் பார்வையில் செய்யப் படும் அறுவையாகும். மாற்று இதய நுரையீரல் கருவி (extra corporeal circulation). இது ஆக்சிஜன் ஊட்டும் கருவியும் இதய அறுவை மருத்துவம் 95 (oxygenator), இரத்த இறைப்பானும் (pump) கொண்டதாகும். பெருஞ்சிரைகளில் இருந்து தூய்மை யற்ற இரத்தம் ஆக்சிஜன் ஊட்டும் கருவியின் ஊடே செலுத்தப்பட்டு, தூய்மையாக்கப்பட்டுப் பெருந்தமனி அல்லது கால் தமனியினுள்ளே இறைக்கப் படுகிறது. இக்கருவியின் உதவியால் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் பாதுகாப்பாக இதயத்தில் அறுவை செய்து சிக்கலான பல இதய நோய்களைச் சரி செய்ய இயலும். இது சரிவர வேலை செய்ய ஹெப் பாரின் (heparin) என்ற மருந்தும் அதற்கு எதிர் மருந் தான புரோட்டமின் சல்ஃபேட்டும் (protamine sulphate) தேவைப்படும். மேலும் மாற்று இதய நுரை யீரல் கருவியினால் உடலை 15-18°C வெப்பத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். இதனால் வெகு நேரம் உடல் பாதிப்பின்றி இதய அறுவை செய்ய இயலும் பொட்டாசியம் கொண்ட சில மருந்துக் கலவைகள் மூவம் இதயத்தைச் சிறிது நேரம் செயலிழக்கச் (cardioplegia) செய்ய இயலும். அறுவை மருத்துவத்தால் நலமாகும் நோய்கள் இதய மேலுறை நோய்கள் இதய இறுக்கம் (cardiac tamponade). நீர் அல்லது இரத்தம் இதய மேலுறையின் இரு படிவங்களுக்கு இடையில் வெகு விரைவில் சேர்வதால் இதயம் இறுக் கப்பட்டு இரத்த ஓட்டம் குறைந்து நின்று விடும். இதை ஊசி மூலம் உறிஞ்சி அல்லது அறுவை மூலம் சரி செய்து உயிர் பிழைக்க வைக்கலாம். இதய மேலுறை அழற்சி (pericarditis). இது நாள்பட்ட வகைக் காசநோய், மூட்டு நோய், அடி படுவது, இரத்த ஒழுக்கு ஆகியவற்றால் ஏற்படுகிறது. அறுவை மூலம் மேல்தோலை நீக்கினால் குணம் உண்டாகும். பிறப்பிலே வரும் இதய நோய்கள் சுருங்காத கருத்தமனிக் குழாய் (patent ductus arteriosus). இந்த நோய் தனியாகவோ மற்ற இதய மாறுபாடுகளுடனோ ஏற்படுகிறது. இந்தக் குழாய் கருவில் பெருந் தமனியையும் (aorta) இடப்புற நுரை யீரல் தமனியையும் (left pulmonary artery) இணைக் கும். இது பிறப்பின் போது சுருங்கி விடவேண்டும். அவ்வாறு சுருங்காத நிலையில் இந்நோய் ஏற்படு ஆக்ஸிஜன் ஏற்றப்பட்ட தூய்மையான இரத் கிறது. ஆ தம் பெருமளவில் பெருந்தமனியிலிருந்து இட நுரை யீரல் தமனிக்குச் செல்வதால் நுரையீரலுக்கு அள வுக்கு அதிகமாக இரத்த ஓட்டம் ஏற்படுகிறது. இடக் கீழறையின் வேலை அதிகமாகிறது. சிலருக்கு மூச்சுத் திணறலும், உடல் வளர்ச்சிக் குறைவும் இருக்கும். பெரும்பாலும் எந்தத் தொல்லையும் இல்லாமல் இருக்கும். நோய்க்குறிகள். தொடர்ச்சியாகக் கேட்கும் முணு முணுப்பும் (continuous murmur), வீழ் நாடியும்