பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 இதய ஆய்வு

100 இதய ஆய்வு படம் 2. பின்னர் (மார்புப்பட்டை) விலா எலும்பின் அடுத்த பகுதியை ஆய்வு செய்ய வேண்டும். பொது வாக எந்தவிதத் துடிப்பசைவும் இருக்காது. வலப் புற இதயக் கீழறை விரிவடைந்து காணப்பட்டால், இவ்விடத்தில் விரல்களைத் தூக்கிவிடும் துடிப்பை உணரலாம். சிலிர்ப்பு. இதய வால்வுக் குறுக்கத்தினால் இரத்த ஓட்டம் சிறிது தடைப்படும். இத்தடையின் போது அங்கே காணப்படும் இரத்த அழுத்தத்தாலும், இரத்த ஓட்ட வேகத்தாலும், இரத்தம் வால்வுகளின் அருகே சென்றவுடன், ஒலியலைகளை உண்டாக்கும். இதற்கு முணுமுணுப்பு எனப் பெயர். கையால் தொட்டுப் பார்த்தால் இம்முணுமுணுப்பைப் பூனை பிறாண்டுகிற மாதிரி உணரலாம். இதுவே சிலிர்ப்பு (thrill) எனப்படும். காலத்திற்குத் தகுந்தவாறு, இது இறுக்கச் சிலிர்ப்பு, தளர்ச்சிச் சிலிர்ப்பு அல்லது இரண்டும் சேர்ந்த நிலைச் சிலிர்ப்பு என உணர லாம். இச்சிலிர்ப்பு, கையால் உணரப்பட்டால் இதய நோய் நிச்சயமாக உண்டு என அறியலாம். இதய வால்வுக் குறுக்க நோய்களில் சிலிர்ப்புக் காணப் படும். இரு கைவிரல்கள் மூலம் தட்டிப் பார்த்து ஆய்வு செய்தல். இதயம் இரண்டு மேலுறைகளைக் கொண்டு இருக்கிறது. மேலும் இதயத்திற்கு நான்கு விளிம்பு வரை உண்டு. அவை முறையே பல மேற்பக்க விளிம்பு வரை, வல விளிம்பு, இட மேற்பக்க விளிம்பு வரை, இட விளிம்பு ஆகியவையாகும். படத்தில் உள்ளவாறு இரு கை விரல்களினால் அடித்துப் பார்த்து இந்த நான்கு விளிம்பு வரைகளை ஆய்வு செய்ய வேண்டும். இதய மேலுறை இடையே நீர், சீழ், இரத்தம் இருந்தாலும், பெருந்தமனிப் பெருவீக்கம் . படம் 3. படம் 4. இருந்தாலும், இதய அறைகள் பெருத்துப்போய் இருந்தாலும் இந்த ஆய்வு மூலம் அறிய முடியும். இதய ஒலிகளைக் கேட்டறிதல். இதய ஒலிகளை இதயத் துடிப்பளவி (stethoscope) மூலம் மிகவும் கவனமாக ஆய்வு செய்தல் வேண்டும். இயல்பாக முதல் ஒலி, இரண்டாம் ஒலி ஆதியவை சரியாகக் கேட்கும். இதயத்துடிப்பளவியை முதலில் கீழ் உச்சி முனைப் பகுதியிலும் (mitral area) அடுத்து,மூவி தழ்ப் பகுதி, பெருந்தமனிப் பகுதி, நுரையீரல் பகுதி ஆகிய இடத்திலும், வைத்துக் கேட்க வேண்டும். முதலாம் ஒலி கீழ் உச்சி முனைப்பகுதியில் நன்றாக வும். இரண்டாம் ஒலி பெருந்தமனி நுரையீரல் பகுதிகளில் நன்றாகவும் கேட்கும். பொதுவாக, இரு ஒலிகளிலும் துடிப்பு, சீராகக் கேட்கும். இடையில்