இதய ஆய்வு 101
-R. சில நொடி இடைவெளியிருக்கும். இதனை லப்- டப் (lub-dub) என அழைக்கலாம். முதலாம் இதய ஒலி. ஈரிதழ் வால்வு, மூவிதழ் வால்வு மூடுவதனால் ஏற்படும் ஒலி முதலாம் ஒலி யாகும். முதலாம் ஒலி கீழ் உச்சி முனைப் பகுதி. மூவிதழ்ப்பகுதி என்னும் இரு பகுதிகளையும் கொண் டது. கீழ் உச்சி முனைப் பகுதியில் நன்றாகக் கேட்கும். பிரிந்த முதலாம் ஒலி (split I sound), இதயக் கீழறைகளின் அதிவேகத் துடிப்பிலும், இசை வற்ற உதறல் நிலையிலும், A. V . பிளாக் நிலை யிலும் முதலாம் ஒலி பிரித்துக் காணப்படும். அதிகச் சத்த முதலாம் ஒலி ( loud Ist sound )குழந்தைகளிட மும், அதிகவேகத் துடிப்பின்போதும், ஈரிதழ் வால் வுக் குறுக்கு நிலையிலும் முதலாம் ஒலி அதிகச் சத்த முடன் கேட்கும். குறைந்த சத்த முதலாம் ஒலி (soft Ist sound) உச்சி முனை எதிர்க்களித்தல், மூவிதழ் எதிர்ககளித்தல் ஆகியவற்றில் குறைந்த முதலாம் ஒலியாகக் கேட்கும். பெருந்தமணியும் நுரையீரல் தமனித் தொடக்கத் திலுள்ள அரைவட்ட வால்வுகளும் மூடும்போது ஏற்படும் ஒலி இரண்டாம் இதய ஒலியாகும். இது பெருந்தமனி, நுரையீரல் என்ற இரு பகுதிகளையும் கொண்டது. இதய மேலுறைச் சுவர்க்குறைபாடு (ASD) நுரையீரல் வால்வுக்குறுக்கம், இதயக் கீழறைச் சுவர்க் குறைபாடு (VSD) ஆகியவற்றில் பிரிந்து காணம் படும். இதய ஆய்வு 101 அதிகச் சத்த இரண்டாம் ஒலி (P,), நுரையீரல் தமனியின் மிகு இரத்த அழுத்த நிலையில் காணப் படும். அதிகச் சத்த இரண்டாம் ஒலி (A,), அதிக இரத்த அழுத்தம், அயோர்ட்டைட்டிஸ் (aortitis), அயோர்டிக் அனுரிஸம் (aortic aneurysm) ஆகியவற் றில் உணரப்படும். இதய மூன்றாம் ஒலி. இரத்த ஒட்டத்தின் போது, இதயக் கீழறைகளில் அதி வேகமாக இரத்தம் செல் லும்போது, மூன்றாம் ஒலி உண்டாகும். மிக அதிக இதய வெளிப்பாட்டின்போதும் கீழறைகளின் அயர் வின் போதும்தான் மூன்றாம் ஒலி கேட்கும். இதய அயர்வுக்கான மருத்துவத்திற்குப் பின், மூன்றாம் ஒலி மறைந்துவிடும். இதய நான்காம் ஒலி. இதயக் கீழறைகளில் இரத்தம் அதிவேகமாகச் செல்லும்போது நான்காம் ஒலி கேட்கும். இந்நிலையில் இதய மேலறைகளின் துடிப் பும், நன்கு செயல்படும் நிலையில் இருக்கும். பொது வாக மாரடைப்பு நோய், மிகை இரத்த அழுத்தம். இதயத் தமனி நோய் ஆகிய நோய் உள்ளவர்களிடம் காணப்படும். இதய மேலறை இசைவற்ற உதறலின் போது நான்காம் ஒலி இராது. நோயற்றவர்களிடம் நான்காம் ஒலி கேட்பதில்லை. முணுமுணுப்பு. இதய வால்வுகள் பழுதடைவதா லோ, தமனிச் சிரை இணைப்பாலோ, இரத்த ஓட்டம் சிறிது தடைப்படும். அந்தத் தடையினால் முணு முணுப்புக் கேட்கும். இதைக் காலத்திற்குத் தகுந்த வாறு, கீழ்க்காணுமாறு பிரிக்கிறார்கள். இவற்றை முக்கியமாக ஆய்வு செய்வதன் மூலம் தான் இதய நோய் வகையைக் கண்டறிய முடியும். 1. இறுக்கமுன் முணுமுணுப்பு - ஈரிதழ் வால்வுக் குறுக்கம். இறுக்கப்பின் முணுமுணுப்பு பெருந்தமனி வால்வுக் குறுக்கம், இறுக்க நுரையீரல் இதய மேலறைச் சுவர்க் குறைபாடு, முன்னும் பின்னும் முணுமுணுப்பு இதயக் கீழறைச் சுவர்க் குறைபாடு 2.தளர்ச்சி முணுமுணுப்பு - தளர்ச்சி உடன் 3. தளர்ச்சி முணுமுணுப்பு முணுமுணுப்பு - தளர்ச்சி உடன் முணுமுணுப்பு - பெருந்தமனி எதிர்க் களித்தல் தளர்ச்சி இறுக்க இடை முணுமுணுப்பு ஈரிதழ் வால்வுக் குறுக்கம் மூவிதழ் வால்வுக் குறுக்கம். இடைவிடா முணுமுணுப்பு - பி.டி. 4. ஏ.பி. விண்டோ-பேடண்ட் டக்டஸ் ஆர்டீரியோசஸ்