பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதய இடைச்சுவர்க்‌ குறைபாடுகள்‌ 103

ஆகியவை ஏற்படுகின்றன. பின்னாட்களில் புப்புச் உயர் அழுத்த நிலை ஏற்படும் காலத்தில் இரத்தம் வலத்திலிருந்து இடத்திற்குத் திசை மாற்றப்படலாம். இதயமேலறை இடைத்துளை நோய் பெண்பா லாரிடம் அதிகமாகக் காணப்படுகிறது. அவர்கள் அடிக்கடி சளி, இருமல் போன்ற நுரையீரல் தொந் தரவுகளுக்கன்றி, வேறு நோய்க் குறிகளுடனும் மருத் துவரை அணுகுவதில்லை. பெரும்பாலும் இக்குறை பாடு தற்செயலாக மருத்துவரால் கண்டறியப்படு கிறது. விரல்கள் மெலிந்து, நீண்டு, சிலந்திக் கால்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். கடின அண்ணக் கூடு உயர்ந்து காணப்படலாம். நடு நெஞ்செலும்பு முன் துருத்தியும், நெஞ்சறையின் கீழ்ப்பகுதி குழி வாகவும் தோன்றும். இதயம் அளவுக்கதிகமாகப் பெருக்கும்பொழுது இடப்புற நெஞ்சுப் பகுதியில் மிகையான துடிப்பும் உணரப்படுகிறது. மிருதுவான நடு இறுக்க முணுமுணுப்பு இடப்புற இரண்டாம் விலா இடைவெளியில் தோன்றலாம். புப்புசத் தம் னிக்களத்தில் இரண்டாம் இதய ஒலியின் இரு பகுதி களும் நிலைத்த அகன்ற இடைவெளியுடன் வலித்து ஒலிக்கின்றன. உட்சுவாசம், வெளிச்சுவாசம் ஆகிய இரண்டு காலங்களிலும் ஒலியின் தன்மை வேறுபடா மல் நிலைத்த பிரிவுடன் ஒலிப்பது இக்குறைபாட்டின் சிறப்பம்சமாகும். முதலாம் வகை இடைத்துளை பத்து விழுக்காடே காணப்பட்டாலும், இரண்டாம் வகை யைவிடச் சற்று அதிகத் துன்பத்தை அளிக்கவல்லது. இளமைப் பருவத்தில் உடல் வளர்ச்சி தடைப்படு கிறது. அடிக்கடி நுரையீரல் தொற்றுக்களும், இதய அயர்வும் தோன்றுகின்றன. நுண்கதிர்ப் படத்தில் வல மேலறையும் புப்புசத் தமனியும் விரிந்து காணப்படும். நுரையீரலுக்கு மிகுந்த இரத்தம் செலுத்தப்படுவதால் புப்புசத் தமனி யின் கிளைகள் சுருங்கி விரிந்து நாட்டியமாடுவதைப் போன்ற தோற்றம் நுண்கதிர் நோக்கியில் தோன்றும். இது ஹைலார் நாட்டியம் (Hilar dance) என அழைக் கப் படுகிறது. கதீட்டர் ஆய்வின்பொழுது கதீட்டரை வல மேலறையிலிருந்து இட மேலறைக்கு எளிதில் செலுத்த இயலும். ஆக்சிஜன் செறிவு வல மேல்றை யில் மேற்பெருஞ்சிரையை விட 15 விழுக்காடு மிகுந்து காணப்படல் வேண்டும். புப்புச் மண்டவ இரத்தவோட்ட விகிதம் 2:1 இலிருந்து 4:1 வரை துளையின் விட்டத்திற்கேற்ப வேறுபடலாம். இதய மின்னலைப் பதிவில் "ISR" மாதிரி வலப்புற நெஞ்சு மின்வாய், avR மின் வாய்களில் காணலாம். தேக்க இதய அயர்விற்கு டிஜிடாலிஸ் (digitalis) போன்ற மருந்துகள் அளிக்க வேண்டும். முடக்கு வாதக்காய்ச்சல் ஏற்படா வண்ணம் குழந்தைகளைப் பாதுகாத்தல் வேண்டும். செயற்கை இதய நுரையீரல் கருவியின் துணை கொண்டு அறுவை சிகிச்சை செய் தல் வேண்டும். குழந்தைப் பருவத்தில் புப்புச உயர் இதய இடைச்சுவர்க் குறைபாடுகள் 103 அழுத்த நிலை தோன்றுவதற்கு முன்னர்ச் செய்யப் படும் அறுவை சிகிச்சை முழு வெற்றியளிக்கிறது. காலம் தாழ்த்துச் செய்யும் அறுவை சிகிச்சை ஓரளவே பயனளிக்கிறது. மிகச் சிறிய மேலறை இடைத்துளை உள்ளவர்கள் சிரமமேதுமின்றி இயல்பான ஆயு ளுடன் வாழ்கிறார்கள். பெரிய இடைத்துளை உள்ள வர்கள் இரு வகையில் துன்புறுகிறார்கள். மிகுந்த அளவு இரத்தம் வலப்புற அறைகளை விரிவிப்பதால் இளமைப் பருவத்தில் தேக்க இதய அயர்வு தோன்று கிறது. இரண்டாவதாக, நுரையீரலுக்கு மிகுந்த இரத்தம் பாய்வதால் படிப்படியாகப் புப்புசத் தடை தோன்றி நீலம் பாரிப்பு, மூச்சுத்திணறல், மேலறைக் குறுந்துடிப்பு போன்றவை ஏற்படுகின்றன. . கீழறை இடைத்துனை. இதயப் பிறவிக் குறைபாடு களில் இந்நோய் இருபத்தைந்து விழுக்காடு தனித் தும், ஐம்பது விழுக்காடு இதர குறைபாடுகளுடன் இணைந்தும் தோன்றுகிறது. இக்குறை ஸ்ட்டென சன் (Stenson) என்பவரால் 1638 ஆம் ஆண்டி லேயே மருத்துவர்களுக்கு விளக்கப்பட்டது. பின்னர் இது பிறவியிலேயே அல்லாமல் பின்னாட்களில் இடைச்சுவர் அழற்சியினாலும் ஏற்படக் கூடும் எனத் தெளிவுபடுத்தப்பட்டது. குழவிப் பருவத்தில் தோன் றும் இதய அயர்விற்கு இந்நோய் ஒரு முக்கிய காரண மாகும். கீழறை இடைச்சுவரின் மேல் பகுதி சவ்வி னாலும் கீழ்ப்பகுதி தசையினாலும் ஆனது, இடைத் துளை அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து அதைச் சவ்வுக் கீழறை இடத்துளை, தசைக்கீழறை இடை டத்துளை என இரு வகையாகப் பிரிக்கலாம். இக்குறைபாடு ஒரே துளையாக அல்லது சல்லடை போன்று சிறு சிறு கண்களாக இருக்கலாம். பெரும் பான்மையான கீழறையின் இடைத் துளை, புப்புச் வால்விற்குக் கீழும், மூவிதழ் வால்விற்கு மேலும், பெருந்தமனி வால்விற்குக் கீழும் அமைந்திருக்கும். துளையின் அருகில் உள்ள இதயக் கடத்தி மண்டலம் பாதிக்கப்பட்டால் பிறவி இதய அடைப்பு (congenital heart block) இணைந்து காணலாம். இடைத்துளைக் கீழறை ஏனைய பிறவிக் குறை பாடுகளு டன் இணைந்து காணப்படலாம். நோயின் அறிகுறிகளும், அதன் போக்கும், இணைந்து காணப் படும் குறைகளுக்கேற்ப வேறுபடலாம். பொது வாக புப்புசத் தமனிக் குறுக்கம், பெருந்தமனி ஒழுக்கு, மேலறை இடைத்துளை, திறந்த டக்டஸ் தமனி பெருந்தமனி நசுக்கம் போன்ற பிறவிக் குறைகள் இணைந்து காணப்படுகின்றன. அரிதாக வல, இட மேலறைகள் இரண்டுமே பொதுவான கீழறையில் திறக்கலாம். கீழறைகளை வல இடம் என இரண்டாகப் பிரிக்கும் இடைச்சுவர், பிறவியில் முற்றிலும் வடிவமைக்கப்படாததால் இக்குறை தோன்றுகிறது. இல வேளைகளில் ஆய்வுகளால் பெரிய கீழறை இடைத்துளையையும் ஒரே பொது