இதய இயக்க அயர்வு 107
பொது விளைவுகள். உடலில் சோர்வு, சோர்வு, சக்தி யின்மை, எடைக் குறைவு, குறைவான இதய வெளிப் பாட்டினால் உண்டாகும் பசியின்மை, வாந்தி வரும் முன்நிலை, வயிற்றுவலி, உப்புசம் போன்ற விளைவு களைக் காணலாம். அறிகுறிகள் கை, முகம், கால்களில் வீக்கம். சாதாரணமாக இரண்டு கால்களிலும், அல்லது கணுக்கால் பகுதி யிலும் வீக்கம் நீர் சேர்வதால் ஏற்படும். ஒருவிரல் கொண்டு அழுத்தினால் குழிவிழும். படுக்கையில் இருப்பவர்களுக்குக் கீழ்ப்புற முதுகுப் பாகம் வீக்க மாகக் காணப்படும். கை, முகம் இவற்றில் நீண்ட நாள் சென்ற இதய இயக்க அயர்வில்தான் இது காணப்படும். உதடு, நகங்களில் நீலம் பூத்துக் காணப்படும். நாடித்துடிப்பு. கைந்நாடித் துடிப்பு மிக அதிக மாக இருக்கும். இதய வெளிப்பாடு குறைவதால், நாடி அழுத்தம் (pulse pressure) குறைவாகக் காணப் படும். மிகை இரத்த அழுத்தம், மாரடைப்பு நோய், கார்டியோ மயோபதி போன்ற நோய்களில் ஆல் டரான்ஸ் துடிப்பைக் காணலாம். சிரையழுத்தம். இதய இயக்க அயர்வில் மத்தியச் சிரை அழுத்தம் மிக அதிகமாக இருக்கும். வலக் கழுத்துப் புறமுள்ள உள்ஜூகுலர் சிரைத் துடிப்பைக் கவனித்தால், அதிக அளவு உயரமாவதையும், பல சிரை அலைகளையும் காணலாம். இப்படியிருப்பின் மத்திய சிரை அழுத்தம் மிக அதிகமாக இருப்ப தாக உணரலாம். பெருத்த, வீக்கமுள்ள கல்லீரல். வலியுடன் கூடிய வீக்கமுள்ள பெருத்த கல்லீரல் இதய இயக்க அயர் வின் முக்கியமான அறிகுறியாகும்.மத்திய சிரையழுத் தம் அதிகமாகவிருப்பதால், சில சமயம், துடிப்புடன் கூடிய கல்லீரலாகக் காணப்படும். மத்திய சிரை யழுத்தம் அதிகமாகவும், நீண்டநாள் சென்ற நிலை யாகவும் இருந்தால் சில சமயம் மண்ணீரல் (spleen) கூடப் பெருத்துக் காணப்படும். வயிற்றில் நீர் சுரத்தல் (ascits). சில நோய்களில் வயிற்றில் நீர் சுரப்பதால், வயிறு பெருத்த நிலை யைக் காணலாம். மூவிதழ் வால்வு, இதய மேலுறை யின் இடையே நீர்இருந்து அழுத்தம் தரும் நோய் களில் வயிற்றில் நீரைக் காணலாம். முதுகுப்புறக் கீழ் நுரையீரல் பகுதியில் ரால்ஸ் (basal rales). காதுகுழல் ஒலிவாங்கி மூலம், முதுகுப் புறக் கீழ் நுரையீரல் பகுதியைக் கேட்டால், மிக மென்மை ஒலி கொண்ட 'ரால்ஸ்' ஒலியைக் கேட்டறி யலாம். நுரையீரல் தந்துகிகளிலுள்ள அதிக அழுத் தமும் திரையில் அதிக அழுத்தமும் திசுக்களில் நீர் இதய இயக்க அயர்வு 107 சேர்ந்து வீக்கமாக ஏற்பட, இந்த ரால்ஸ் ஒலி உண்டாகிறது. எல்லாப் பகுதி நுரையீரல் வீக்கம் ஏற்பட்டால், ரால்ஸ் ஒலி இரண்டு நுரையீரல் பகுதி யிலும் கேட்கும். நுரையீரல் மேலுறையிடையே நீர் சுரத்தல் (hydro- thorax). இதய இயக்க அயர்வில், மத்தியச் சிரை மற்றும் நுரையீரல் சிரை அழுத்தம் அதிகமாகவிருக் கும். இதனால் நுரையீரல் மேலுறைத் தந்துகிகளின் அழுத்தம் அதிகமாகக் காணப்படும். மேலுறைக ளிடையே நீர் சுரக்கும். சாதாரணமாக வல நுரை யீரல் மேலுறைகளிடையேதான் நீர்ச் சுரப்புக் காணப்படும். மஞ்சள் காமாலை. நாள்சென்ற இதய இயக்க அயர்வு நோயாளிகளிடம் தான் மஞ்சள்காமாலை காணப்படும். கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு, இயக்க நிலை குறைவதால் கல்லீரலிலுள்ள உட்பகுதியி லுள்ள திசுக்கள் முடிவடைந்து மஞ்சள்காமாலையை விளைவிக்கும். மற்ற அறிகுறிகள். கை, கால்கள் வெளுப்பாக வும், வேர்வையுடன் கூடிய சில்லிப்பாகவும் இருக் கும். கழிக்கும் சிறுநீரளவு குறைந்து காணப் படும். நீர் ஆய்வில் புரதமும், அதிக ஸ்பெசிபிக்கிரா விட்டியும் குறைந்த சோடியமும் இருக்கும். சிகிச்சை முறைகள். இதய இயக்க அயர்விற்கான சிகிச்சை முறைகளை இதய இயக்க அயர்வுக்கான முன்னோடி நிலையைக் கண்டறிந்து நீக்கல், காரணங்களைக் கண்டறிந்து நீக்கல், இதய இயக்க அயர்வைக் கட்டுப்படுத்தல் என மூன்று வகை களாகப் பிரித்துக் கையாள வேண்டும். முன்னோடிக் காரணங்களை நீக்கல். நுரையீரல் உள்ளெரிகை, இரத்தச்சோகை, தைராய்டு சுரப்பு நீர் அதிகநிலை, கர்ப்பநிலை மிகை இரத்த அழுத் தம், இசைவற்ற துடிப்பு மற்றும் குறைவான துடிப்பு, உப்பு மிகுந்த உணவு, அதிக வெப்பநிலை, மாரடைப்பு நோய் போன்ற முன்னோடிக் காரணங் களைக் கண்டறிந்து மருத்துவச் சிகிச்சையளிக்க வேண்டும். முடிந்த அளவு இவற்றை நீக்க முயற்சி செய்ய வேண்டும். காரணங்களைக் கண்டறிந்து நீக்கல். ஈரிதழ் வால்வு, மூவிதழ் வால்வுக்குறுக்கம், பெருந்தமனி வால்வுக்குறுக்கம், நுரையீரல் வால்வுக்குறுக்கம், இதய மேலறைச் சுவர்க் குறைபாடு, இதயக் கீழறைச் சுவர்க் குறைபாடு, பெருந்தமனிக் குறுக்கம், பி.டி.எ. போன்ற இதய நோய்கள் இதய இயக்க அயர்வின் காரணங்களாகும். இவற்றை அறுவை மூலம் சிகிச்சை செய்தால், இதய இயக்க அயர்வு வருவது தடுக்கப்படும்.