பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதய இரத்தக் குழாய், பிறவிக் கோளாறுகள் 109

பதற்கு இம்மருந்துகள் மிகவும் அவசியமானலையா கக் கருதப்படும். மேலும், இதய இயக்க அயர்வு நோயாளிகளுக்கு ஆக்சிஜன், தியோ பிலின் மருந்துகள், தூக்க மருந்து கள் முதலியன மிகவும் தேவைப்படும். பொதுவாக இதய இயக்க அயர்வு நோயாளிகள் வாழ்நாள் முழுதும் டிஜாக்சின் நீர் போகும் மாத்திரை உட்கொள்ளுவது, இதய இயக்க அயர்வு நீங்கி நல் வாழ்வு வாழச் சாலச் சிறந்த வழியாகும். - த.வே.பாபாகிருஷ்ணன் நூலோதி. Braunwald, E., Harrison's Principles of Internal Medicine, Eleventh Edition, McGraw- Hill Book Company, London, 1987; Shafer, K.E., Treatment of Heart Failure, Twentififth Edition, Manual of Medical Therapeutics, 1986. இதய இரத்தக் குழாய் - பிறவிக் கோளாறுகள் இதய இடத்தமனி (left coronary artery), இதய இடச் சிரை முண்டிலிருந்து (left coronary sinus) தொடங்கு கிறது. சில மனிதர்களுக்கு இந்தத் தமனி தொடங்கிய வுடன் இரண்டாகப் பிரியக்கூடும். சிலருக்கு இதய இடச்சிரை முண்டு இரண்டு துவாரங்களுடன் இருக் கலாம். முன்புறம் இறங்கும் தமனி (anterior descending artery) இரண்டாகப் பிரிந்து இதயத் தடுப்புச் சுவர் கிளைத் தமனிகள் (septal branches), இதய மேற் பரப்புக்கிளைத் தமனிகள் (surface branches) ஆகிய வையாக மாறுகின்றன. மேற்பரப்புக் கிளைத் தமனி கள் ஒன்றுக்கு மேலாக இருக்கலாம். இவற்றில் சில முதல் தடுப்புச் சுவர், கிளைத் தமனிக்கு அண்மை யாக (proximal) அல்லது சேய்மையாகத் (distal} தொடங்கக் கூடும். இதயச் சுற்றுத் தமனி (circumflex artery) இடக் கீழறையின் வெளிப்புறமாகப் பல கிளைகளாகப் பிரி கிறது. இவை பொதுவாக நான்கு இருக்கும். அதற்கு மேற்பட்ட கிளைகளும் இருக்கலாம். அவற்றில் ஒன்றி ரண்டு தாய்த் தமனியைவிடப் பெரிதாக இருக்கலாம். இதய வலத்தமனி. பெரும்பான்மையானவர்களிடம் இது பின்புறம் இறங்கும் தமனியாகத் (posterior descending) தொடர்கிறது. சிலருக்கு இது கிளைக ளாகப் பிரிந்து, பின்புறம் இறங்கும் தமனி தனியாக வும் இருக்கலாம். மாறுபாடான கிளைத்தமனிகள் சிரை முட்டு மேலறைக் கிளை (sino-atrial node) பெரும்பாலும் இது இதய வலத் தமனியிலிருந்து இதய இரத்தக் குழாய் - பிறவிக் கோளாறுகள் 109 பிரிகிறது. கூடும். இதயச் சுற்றுத் தமனியிலிருந்தும் வரக் கூம்புத் தமனி (conus branches). இது இதய வலத் தமனியிலிருந்து பிரிந்து வலக் கீழறைக்கு இரத்தம் அளிக்கிறது. பெருந்தமனியின் வலச்சிரை முண்டி லிருந்து (right aortic sinus ) இது பிரியலாம். வல மேலறைச் சுற்றுத் தமனி (right atrial circum flex artery). இது வலத் தமனியிலிருந்து வருகிறது. வலக் கீழறைக் கிளை. இது வல இதயத் தமனி யின் கீழ்ப்பகுதியிலிருந்து வருகிறது. சிலருக்கு முன் புறம் இறங்கும் தமனியிலிருந்தும் பிரியலாம். வல் இதயத் தமனி ஆக்கிரமிப்பு. (coronary dominence). டக் கீழறைக்கு ஏற்படும் இரத்த ஓட்ட அளவு, இதயச் சுற்றுத் தமனிகளின் அளவையும் எண்ணிக்கையையும் பொறுத்தே இருக்கும். வல் அல்லது இட இதயத் தமனி, இடக் கீழறைக்கு இரத்தம் அளிப்பதில் ஓங்கி நிற்கிறது. இரண்டு இதயத் தமனிகளும் சம அளவு இரத்தத்தை அளித துச் சமநிலைப்பட்ட ஆக்கிரமிப்பைப் பெறும். இவற்றுக்கு இடையில் பலவகைப்பட்ட நிலைகள் இருக்கலாம். ஆனால் 85 விழுக்காடு மக்களிடம் வல் தயத் தமனியின் ஆக்கிரமிப்பே இருக்கும். தயத் தமனிகளில் குறுக்கமும் (stenosis) அடைப்பும் ஏற்படக்கூடும். இட தயத் தமனிக் குறுக்கத்தால், மூன்புறக் கீழிறங்கும் தமனிக்கும் இதயச் சுற்றுத் தமனிகளுக்கும் இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. முன் கீழிறங்கும் தமனியில் (arterior descending artery) ஏற்படும் குறுக்கம் ஓரிடத்திலோ பரவ லாகவோ இருக்கலாம். ஆனால் தமனிகள் தொடங் கும் இடத்தில் குறுக்கம் ஏற்படக்கூடும். இதயச் சுற்றுத் தமனிக் குறுக்கம் ஓரிடத்தில் அல்லது இடங்களில் இருக்கலாம் மேலறை கீழறைக் கிளை கள், அல்லது விளிம்புக் கிளைத தமனிகளில் (marginal branches) அதிகமாக ஏற்படுகிறது. ருய வலத் தமனிக் குறுக்கம் பொதுவாக அதிக மாக ஏற்படுகிறது. இத்தமனியின் தொடக்கத்திற்கும் தயத்தின் ஓரத்திற்கும் இடையில் குறுக்கம் ஏற் படுகிறது. இக்குறுக்கம் ஒன்றாகவோ பலவாகவோ, ஓரிடத்திலோ, பரவலாகவோ இருக்கக்கூடும். குறுக் கத்திற்குத் தகுந்தபடிக் கிளைத் தமனிகள் இரத்த ஓட்டத்தை ஏற்றுக் கொள்கின்றன. இதயத் தமனி எதிர்நிறப் படங்களை (coronary arterio graphy ) ஆயும்போது இவற்றை மனத்தில் கொள்ளவேண்டும். இதயத் தமனிக் கடப்பு (bye pass) அறுவை சிகிச்சை செய்யும்போது இவற்றின் முக்கியத்துவம் தெரியும். இதயத் தமனி-சிரை இணைப்பு (coronary arterio venous fistula), இது, அதிகம் ஏற்படாத ஒருவகைக்