பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதய இரத்தச் சுற்றோட்டம், பிறவிக் குறைபாடுகள் 109

செல்லும் இதயத் தசைச்சுவர் நாளத்தில் அளவைப் பொறுத்தே அறுவை சிகிச்சையின் வெற்றியும், நீண்ட கால உயிர் வாழ்வும் அமையும். இதய வலத் தமனி நுரையீரல் தமனியிலிருந்து பிரி தல், மிக அரிதான இந்தக் குறைபாட்டால் குழந்தைப் பருவத்தில் அறிகுறிகள் ஏற்படுவதில்லை. வயதான பிறகு இதயத் தசைச்சுவர் இரத்தமின்றி அழுக வாய்ப்பு அதிகம். நா. கங்கா நூலோதி. Guyton, A.C., Texr Book of Medi- cal Physiology, Sixth Edition, W.B. Saunders Co., Philadelphia, 1981. இதய இரத்தச் சுற்றோட்டப் பிறவிக் குறைபாடுகள் உயிருடன் பிறக்கும் நூற்றில் ஒரு குழந்தைக்கு, இதய இரத்தச் சுற்றோட்டப் பிறவிக் குறைபாடுகள் காணப்படும். தாய் தன் முதல் மூன்று மாதக்கர்ப்ப காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்தால், கருவிலும் அது தாவி இக்குறைபாடுகளை உண்டு பண்ணும். உதார ணமாக ருபல்லா (Rubella) நோயைக் கூறலாம் ஆரம்ப காலத்திலே இந்நோயைக் கண்டுபிடித்தால் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். ஆனால் பின்விளைவுகள் வந்த பின் அறுவை சிகிச்சை செய் தால் எதிர்பார்த்த அளவுக்குப் பலன் கிடைப்ப தில்லை. சில குழந்தைகளுக்கு இந்நோயின் அறிகுறிகள் இல்லாமலிருக்கலாம். குழந்தை பிறந்து சிலமாதங் களுக்குப் பிறகுதான் அறிகுறிகள் தென்படும். இரத் தம நுரையீரலுக்குச் செல்லாமல் வருவதால் இரத் தத்தில் ஆக்சிஜன் இருப்பதில்லை. ஆதலால் நீலம் பூரித்தல் (cyanosis) ஏற்படும். பிறந்த குழந்தையில் இரத்தக் குழாய்கள் இடம் மாறியிருத்தல் (transposi- tion of great vessels) இதற்கு முக்கிய காரணமாகும். பெருந்தமனி வலக்கீழறையிலிருந்தும் நுரையீரல் தமனி இடக் கீழறையிலிருந்தும் தொடங்கும். வளர்ந்த குழந்தைகளில், இதயக் கீழறை இடைச்சுவ ரில் பழுது ஏற்படுவதாலும் (VSD) நுரையீரல்தமனி இறுக்கத்தினாலும், நுரையீரல் இரத்தக் குழாய்களில் நோய் ஏற்படுவதாலும் நீலம் பூரித்தல் ஏற்படும். 1. திறந்த தமனி நாளம் (patent ductus arter- iosus ) இந்தப்பிறவிக் குறைபாடு முக்கியமாகப்பெண் ணினத்தில்தா ன் காணப்படும். குழந்தை தாயின் வயிற்றிலிருக்கும்போது, நுரையீரல்கள் வேலை செய் யத தொடங்கு முன் எல்லா இரத்தமும் தமனி நாள் ம் வழியாகப் பெருந்தமனிக்குச் செல்கிறது. இடக்காரை அடித்தமனி (subclavian artery) தொடங்குவதற்குச் இதய இரத்த சுற்றோட்டப் பிறவிக் குறைபாடுகள் BEA சற்றுக்கீழே இத்தமனி நாளம், பெருந்தமனியையும் நுரையீரல் தமனியையும் இணைக்கிறது. பொது வாகக் குழந்தை பிறந்தவுடன் இத்தமனிநாளம் அடைபட்டுவிடும். ஆனால் சிலசமயம் அடைபடா மல் திறந்த தமனி நாளமாக மாறிவிடுகிறது. பெருந் தமனியின் இரத்த அழுத்தம் நுரையீரல் தமனி இரத்த அழுத்தத்தைவிட அதிகமாயிருப்பதால் இரத்தம் ஒன்றாகக் கலக்கிறது. இது தமனிநாளத் துளையின் அளவைப் பொறுத்திருக்கிறது. இந்தத் தடுமாற்றம் (shunt) சிறியதாக இருந்தால் அறிகுறிகள் இருப் பதில்லை. ஆனால் நாளம் பெரியதாகியிருந்தால் குழந்தையின் வளர்ச்சி தடைப்படும். படம் 1. மகாதமனி துரையீர நுரையீரல் நிலையானத் கமனிநாளம் தமனி இதய ஒலி 2 தொடர்ந்து கேட்கும் சித்தொலிக இரைச்சல் நோயாளி மூச்சுவிடத் திணறுவான். இரண்டா வது L- விலா எலும்புக்கருகில் தொடர்ச்சியாக ஒரு முணுமுணுப்புக் (continuous murmur) கேட்கும். அதனுடன் அதிர்வும் இருக்கும். எக்ஸ்கதிர்ப் படத் தில் நுரையீரல் தமனி பெரியதாகத் தெரியும். பெருந்தமனியிலிருந்து நுரையீரல் தமனிக்கு இரத்தம் செல்லும்போது நுரையீரல் இரத்தப்படுகை சிதைய நேரிடும். நுரையீரல் இரத்த நாளங்களின் எதிர்ப்புச் சக்தி (resistance) கூடுவதால் நுரையீரல் தமனி அழுத்தம் அதிகரிக்கும். இதனால் நுரையீரல் தமனியிலிருந்து இரத்தம் பெருந்தமனிக்குச் செல் கிறது. இது காலிலும், விரல்களிலும் நீலநிறத்தை உண்டுபண்ணும். இதயமின் வரைபடத்தில் தய வல் மேவறை இயல்புமீறிய வளர்ச்சியடைந்து காணப்படும். மருத்துவம். அறுவை சிகிச்சை மூலம் நாளத்தை எடுத்துவிடலாம். நுரையீரல் இரத்தக் குழாய் எதிர்ப்புச் சக்தி கூடினாலோ இரத்தம் சேர்வது மாறுபட்டாலோ (reversed shunt) அறுவைசிகிச்சை செய்யக்கூடாது.