பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 இதய உறை அகற்றல்‌

120 இதய உறை அகற்றல் கிறது. ஆனால் இதன் மூலகாரணம் எதுவெனத் தெரியவில்லை. இதுவும் பாக்ட்டீரியா அழற்சி போன்றே பின் விளைவுகளை உண்டாக்குகிறது. மற்ற எலும்புருக்கி நோயினால் ஏற்படும் உள் ளுறை அழற்சி (tuberculous endocarditis), சிபிலிஸ் உள்ளுறை அழற்சி (syphilitic endocarditis), ரிக் கெட்ஸ் உள்ளுறை அழற்சி (rickettsial endocarditis ) வைரஸ் உள்ளுறை அழற்சி (virus endocarditis) முத லியவை மிகவும் அரியனவாகும். இந்நோய்கள் மற்ற உறுப்புகளைத் தாக்கும்போது இதய வால்வுகளை யும் தாக்கி இறுதியில் வால்வு இதழ்களைச் சிதைப் பதால் இதயத் தளர்ச்சி ஏற்படும். கோ. திலகவதி நூலோதி. Boyd. W., A Text Book of Pathology, Eighth Edition, Lea and Febiger, Philadelphia. இதய உறை அகற்றல் அறுவை சிகிச்சைக்காகத் தயார் நிலையில் உள்ள நோயாளியை மருத்துவமனையில் இரு வாரங்களுக்கு முன் சேர்க்கவேண்டும். அச் சமயம் புரதக் குறைவு, வைட்டமின் குறைவு முதலியன சரி செய்யப்படும். வயிற்றில் நீர்த் தேக்கம், நுரையீரல் உறையில் நீர்த் தேக்கம், காலில் நீர்த் தேக்கம் ஆகியவற்றைச் சோடி யம், நீர் ஆகியவற்றைக் குறைவாக உட்கொள்வத னால் நிவர்த்தி செய்யலாம். தூம்பு வடித்தல் முறை யும் பயனளிக்கும். தேவையான டிஜிட்டாலிஸ் ஏற்றம் (digitalisation) தேவை. காசநோய் உடனிருந்தால் அதற்குண்டான சிகிச்சையும் தேவைப்படும். செய்முறை. மைய அல்லது எலும்புவரிதல் (sternal splitting) கிழித்தல் மூலம் இதயத்தைக் காணலாம். குறுக்கு வெட்டு அல்லது நெஞ்செலும்புத் துண்டிப்பு மூலம் இவ்வறுவை சிகிச்சையைத் தொடங்கலாம். இக்கிழித்தல் வலப் பக்க முன்புறக் கக்கக் கோட்டி லிருந்து இடப் பக்க முன்புறக் கக்கக் கோடுவரையில் பரவியிருக்கிறது. மேலும் வலப்பக்கம் விலா எலும் பின் நாலாவது இடைப்பட்ட பகுதியிலும், இடப் எலும்பின் ஐந்தாவது இடைப்பட்ட பகுதியிலும் இக்கிழித்தல் செல்கிறது. அறுவை சிகிச் சையின்போது காணப்படும் நோயின் தோற்றத்தைப் பொறுத்து இதய உறை அகற்றல் அளவு மாறுபடு கிறது. மேலும், கிழித்தல் செல்லும் வழி வலப் பக்க தயத்தை அடைய உதவியாக இருக்க வேண்டும். அவசரகாலச் சிகிச்சையைக் கடைப்பிடிக்கவும் வசதி யாக இருக்க வேண்டும். பக்கம் விலா தோல் கிழித்தல் கழுத்துக் குழியிலிருந்து, கொப் பூழுக்கும் நெஞ்செலும்பின் நுனிக்கும் இடைப்பட்ட பகுதி வரை செல்லும். வயிற்றில் வெண்கோடு கிழிக் கப்படும். வயிற்று உறை, வயிற்று நீர்த் தேக்கம் படிவதற்காக மட்டும் ஒரு துளையிடப்படுகிறது. இரு பக்கமும் மார்புபட்டை (fascia) விடுவிக்கப்படுகிறது. முடிவில் இது நெஞ்செலும்பு இணைப்பை மூடப் பயன்படுகிறது. நெஞ்செலும்பின் மையம் செங்குத் தாக ஸ்ட்ரைக்கர் எழும்பு ரம்பம் உதவியால் துண் டிக்கப்படுகிறது. கனமான விரிவாங்கித் (retractor) துணையுடன் நெஞ்செலும்பின் பாதி வெளிப்பக்க மாகத் தள்ளப்படுகிறது. நுரையீரல் உறை, நுரை யீரல் ஆகியவை வெளிப்பக்கமாக இருபக்கமும் தள்ளப்படுகின்றன. இதய உறையின் வெளிப்பக்கம் முதலில் தெரியும்படிச் செய்யப்படுகிறது. மார்பின் மையப்பகுதி நார்களை (fibrosis) வெட்டல் மூலம் நெஞ்செலும்பின் மையம் வழி கிழித்தல் தய உறை அகற்ற கிழித்தல் மைய அல்லது எலும்புவரிதல் கிழித்தல்