இதய உறை அகற்றல் 121
முடிகிறது. உதரவிதான நரம்புகள் கண்டுபிடிக்கப் பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இதய உறையின் கீழ் ஓர நார்களைக் கிழித்தல் மூலம் இதயத் தசை நார்கள் வெளிப்படுகின்றன. இதயத்தின் இட விளிம்பின் முன்பக்க இதய உறை கவனமாகக் கிழிக்கப்படுகிறது. சதையின் வெளிப்பக்கத்தில் இதய உறையை அகற்ற ஒரு தடம் காண வேண்டும். முதலில் ஓரத்தைச் சுற்றி ஒருசில செ.மீ. வலப் பகுதியும்,பிறகு ஒருசில செ.மீ. இடப் பகுதியும் பிரிக்கப்படும். இச் செய்கை உதர விதான நம்புகளிலிருந்து வெகுதொலைவில் செய்யப் படுகிறது. இதய நுனிப்பகுதி முன்பக்கமும் பின்பக்க மும் நன்கு விடுவிக்கப்படுகிறது. இட மேலறை கண் முன் காணப்படுகிறது. அதுவும் விடுவிக்கப்படும். பிறகு வலக் கீழறை முன்பக்கமாக விடுவிக்கப்படும். இதய வெளிப்பகுதிக்கும் இதய உறைக்கும் இடையே சுண்ணப்படிவுகள் பல சமயங்களில் காணப்படும். வெளிப்பகுதியான தடித்த இதய உறை எளிதில் சுவர் கொண்ட அகற்றப்பட்டுவிடும். மெல்லிய வல மேலறையை விடுவிக்கும்போது மிகுந்த கவனம் தேவை. ஒருசில சமயங்களில் முன்பக்கச் சுண்ணாம் புப் படிவ இதய உறை இதய மேலறைச் சுவரைத் துளையிட்டுக் காணப்படுகிறது. இதை அப்படியே விட்டுவிடுவது இதய விரிவடைதலைத் தடுப்பதில்லை; இந்நிலைக்கு வெளிப்பக்கம் நன்கு விடுவித்திருப்பது அவசியம்; இதயத்தின் அடிப்பாகத்தில் உள்ள பெரும் இரத்த நாளங்கள் வெட்டப்படுகின்றன. நுரையீரல் தமனி, பெருந்தமனி, மேற்பெருஞ்சிரை ஆகியவற் றைச் சுற்றி உள்ள இதய உறை துண்டித்து எடுக்கப் படுகிறது. வலப்புற ஓரம் உதரவிதான நரம்பு வரை உறை அகற்றப்படுகிறது. இதயத்தின் கீழ்ப் பகுதி முழுதும் விடுவிக்கப்படுகிறது. இச்செய்கையினால் உதரவிதானத் தசை நார்கள் வெளிக்கொணரப்படு கின்றன. கீழ்ப்பெருஞ்சிரைவெட்டப்படுகிறது. சில சமயம் கீழ்ப்பெருஞ்சிரையைச் சுற்றிச் சுண்ணாம்புப் படிவ இதய உறை காணப்படுகிறது. பொந்து இருக் கும் பகுதியில் உள்ள இதய மேற்பகுதிக் கூரையை அகற்ற பட்டாணிக் செய்ய வேண்டும் ஆவன குண்டின் துணி, (peanut pusher) இதயத்தையும் இதய உறையையும் பிரிக்கப் பயன்படுகிறது, ஏட் டின் முன் செல்லும் இதய உறை ஓரம் எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்படுகிறது. வல் மேலறை அல்லது வலக் கீழறைகளில் விபத்தினால் துளை ஏற் படின் இந்தத் துளையைத் திரும்பத் தையலிட்டுச் சரிக்கட்டி விடலாம். இதய மேல் பகுதியைத் தூக் கும்போது அப்பகுதியில் இருக்கும் இரத்த நாளங்கள் அறுபடின் விடுவிக்கப்பட்ட இதய உறை கொண்டு தையலிடப்படவேண்டும், தற்காலிகமாக விரலினால் அழுத்திப் பிடித்துவிட்டுப் பிறகு அந்த நாளத்தை முடிச்சிட்டுச் சரி செய்யலாம். இதய உறை அகற் றல் (pericardiectomy ) பெரிய வேயப்படாத பகுதியை இதய உறை அகற்றல் 121 உண்டாக்குகிறது. அப்பகுதியில் காசநோய் தாக் கப்பட்டிருப்பின் நிறைய கசிவு உண்டாகிறது. எனவே இது வடிகுழாய் மூலம் வடியும்படிச் செய் யப் படுகிறது. வடிகுழாய் வல நுரையீரல் உறையை மார்பின் மையப் பகுதிக்கருகில் கிழித்து அது வெளிக் கொணரப்படுகிறது. இக்குழாய் மார்புச் சுவரைத் தனித்துக் கிழித்து வெளிக்கொணரப்படுகிறது. இரண்டாவது காளான் போன்ற வடிகுழாய் நுரையீரல் உறைப்பொந்தின் அடிப்பகுதியில் வைக் கப்படுகின்றது. இதுவும் மார்புச் சுவரை தனித்துக் கிழித்தே வெளிக் கொணரப்படுகிறது. ஒவ்வொரு வடிகுழாயும் நீருக்கடியில் தனித்தனி மூன்று பாட்டில் கள் இணைப்புச் சாதனத்துடன் இணைக்கப்படும். இந்த இணைப்புச் சாதனம் திரும்பவும் அதனதன் உறிஞ்சு பம்புடன் இணைக்கப்படும். வல் அறுவைப் பகுதியில் இரத்தம் சேருவது தடுக்கப் படல் வேண்டும். தேங்கிய உறைந்த இரத்தம் அழுத்த வாய்ப்புண்டு; இதனால் அறுவை சிகிச்சை பயனற்றதாகி விடுகிறது. பிளக்கப்பட்ட மார் பெலும்புப் பகுதிகளைத் திரும்ப இணைக்க எண் 2 என்குக் கம்பி பயன்படுத்தப்படுகின்றது. தையல்கள் குருத்தெலும்புப் பகுதியில் எடுக்கப்படாமல் எலும் புப் பகுதியில் எடுக்கப்படல் வேண்டும். மார்பு பட்டையை பட்டு நூல் கொண்டு மையப் பகுதியில் திரும்பச் சேர்க்கப்படுகிறது. வயிற்று வெண்கோடு இணைக்கப்படுகிறது. முடிவில் தோல் இணைக்கப் படுகிறது. அறுவைக்குப் பிறகு உள்ள சிகிச்சை. தேவைக்கு அதிகமாக இரத்தம் செலுத்தக் கூடாது. அப்ப டிச் செய்யின் பாதுகாப்பற்ற விரிவடைந்த மெல்லிய இதயம் கசிவை அதிகப்படுத்துகிறது. முதல் 24 மணி நேரமும் வாய்வழி நீர் பருக அனுமதிக்க வேண்டும். குமட்டல் இருப்பின் 300 மி.லி. இளஞ்சூட்டுக் குழாய் நீர் குதம் வழியாகச் செலுத்தப்படுகிறது. நான்கு மணிக்கு ஒரு முறையாக ஆறு முறை செய்யப் படும். க முன்பே காச நோய் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதற்குண்டான சிகிச்சை 18 மாதங்களுக்குச் செய் யப்படும். உப்புக் குறைந்த உணவு, அறுவை சிகிச் சைக்கு முன் அளிக்கப்பட்டிருப்பதால் அறுவை சிகிச் சைக்குப் பிறகு நிறைய உப்புக்கொடுக்க வேண்டும். குறைந்தது ஒரு மாதத்திற்காவது உடற் பயிற்சி கூடாது. டிஜிட்டாலிஸ் தொடர்ந்து பல மாதங்க ளுக்குக் கொடுக்கவேண்டும். மூச்சிறைத்தல் தொடரு மாயின் இதயம் தேய்ந்திருக்கிறது அல்லது அறுவை சிகிச்சை சரியாகச் செய்யப்படவில்லை என்று பொருள். இந்நிலையில் உடற்பயிற்சியைப் மாதங்களுக்கு நிறுத்தி வைக்கவேண்டும். குறுகிய இதய உறை அகற்றலில் கூட அரிதாக நீண்ட நாள் களுக்குப் பிறகு முன்னேற்றம் காணப்படுவதுண்டு. பல