பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இதய உறை அழற்சி

122 இதய உறை அழற்சி இதயம் வீரியத் துடிப்பால் மீதமுள்ள இதய உறை அழுத்தத்திலிருந்து விடுபடுவதே இதற்குக் காரண மாகும் ஒரு சாரார் கீழறைகளை விடுவித்தலே போது மானது என்று கூறுகின்றனர். ஆனால் இத்தகைய செயல் பல அறுவை சிகிச்சைகளில் முடிவடைவதாகப் பிறர் கூறுகின்றனர். கோ.குழந்தைவேலு நூலோதி. Gibbon Jr., J. H., Surgery of the Chest, Vol-2, Fourth Edition, W. B. Saunders Company, Philadelphia, 1966. இதய உறை அழற்சி இதயத்தின் (வெளி) உறை (pericardium) (மெல்லிய) இரட்டை மடிப்புக் கொண்ட பை போல் இதயத் தைச் சுற்றி மூடி இருக்கும். இந்த இரட்டை மடிப்பி னுள் வழவழப்பான பாய்மம் (pericardial fluid) சிறிதளவு இருப்பதால், இதயம் எளிதாகச் சுருங்கி விரிகிறது. ஆனால் இதய உறை அழற்சியினால் (pericarditis) தாக்கப்படும்பொழுது இந்த வழவழப் பான பாய்மத்தின் தன்மையும், அளவும் வேறுபட்டு. இதயம் எளிதாகச் சுருங்கி, விரிவது தடைப்படுகிறது. இதய உறை அழற்சி, பாய்மத்தின் தன்மையைப் பொறுத்துப் பலவகைப்படும். அவை நீர் போன்ற பாய்மத் தன்மையுடைய இதய உறை அழற்சி (Serous pericarditis), நார்ச்சத்து நிறைந்த பாய்மத் தன்மை யுடைய இதய உறை அழற்சி (f:brinous pericarditis). சீழ் நிறைந்த இதய உறை அழற்சி (purulent peri- carditis), இரத்தம் நிறைந்த இதய உறை அழற்சி haemorrhagic pericarditis) முதலியனவாகும். மேலும், இதய உறை அழற்சி பல கிருமிகளின் தாக்குதலினா லும் ஏற்படலாம். முக்கியமாகக் காச நோய்க் கிருமி நிமோகாக்கஸ், ஸ்ட்டாஃபிலோகாக்கஸ், வைரஸ் (நுண் கிருமி), ஆகிய நோய்க் கிருமிகளால் ஏற்பட லாம். பலநாள்களாக இதய உறை அழற்சி இருந்து, இறுதியாகக் குணம் அடைந்தால் இதை (chronic or healed pericarditis) என்று பிரிக்கலாம். தவிர இரட்டை மடிப்புக் கொண்ட இதய உறை ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு இருந்தால் அது ஒட்டிக் கோண்ட தய உறை அழற்சி (adhesive pericar- ditis) என்றழைக்கப்படும். ஒட்டிக்கொண்ட இதய உறை அழற்சியானது மிகவும் அழுத்தமாகி இதயத் தைச் சுருக்கி விரியமுடியாமல் கல்விப் பிடித்துக் கொள்ளும்போது, அது கவ்விப் பிடிக்கும் இதய உறை அழற்சி (constrictive pericarditis) என்று அழைக்கப்படுகிறது. நீர் போன்ற நீர்மத் தன்மையுடைய இதய உறை அழற்சி. இத்தகைய அழற்சியானது மூட்டுக் காய்ச் சல், வைரஸ் நுண்கிருமி, பாக்ட்டீரியாக் கிருமி போன்ற பல காரணங்களால் உண்டாகலாம். அப் பொழுது இரட்டை மடிப்புக் கொண்ட இதய உறை யில் நீர் போன்ற பாய்மம் சுமார் 50 க. செ. முதல் 200 க. செ. வரை நிறைந்திருக்கும். இதன் அளவு மாறலாம். இதய உறையின் உருப்பெருக்கித் தோற்றம். இதய உறையில் பல விதமான வெள்ளை அணுக்கள் நிறைந்திருக்கும். அவற்றிடையே பாக்ட்டீரியாக கிருமிகளையும் காணலாம். மருத்துவச் சிகிச்சையை அடுத்து முற்றும் குணம் அடையும்பொழுது இந்தப் பாய்மம் முழுதுமாக உறிஞ்சப்பட்டு முன்போன்ற நிலையை அடையும்; இதய வேவையின் பாதிப்பு இருக்காது. நார்ச் சத்து நிறைந்த (sero fibrinous) நீர்மத் தன்மையுடைய இதய உறை அழற்சி. இத் தகைய அழற்சியானது கிருமி, சிறுநீரக வேலைப் பாதிப்பு (uraemia) மூட்டு வீக்கக்காய்ச்சல், இதயத் தசைப் பாதிப்பு (myocardial infarction) மாரடைப்பு போன்ற காரணங்களால் ஏற்படலாம். இதய வெளியுறையின் வெளித்தோற்றம். இதய வெளியுறைப்பை நார்ச்சத்து நிறைந்த பாய்மத் தால் நிரப்பப்பட்டிருக்கும். அழற்சி சற்றுக் கடுமை யாக இருக்கும் பொழுது, இரத்தத்திலுள்ள புரதச் சத்துடன், நார்ச்சத்து என்னும் (fibrinogen) புரதச் சத்தும் நீர்ச்சத்தும் அதிகமாக வெளியேறுவதால் இத்தகைய அழற்சி ஏற்படுகிறது. இதய வெளித் திரையும், உள் திரையும் பிரிக்கப்படும் பொழுது, மயிர் போன்ற நார்ச்சத்து நீட்டிக்கொண்டு, வெண் ணெய், தடவப்பட்ட இரண்டு ரொட்டித் துண்டு கள் போல் காணப்படும். உருப்பெருக்கித் தோற்றம். இதய வெளியுறைப் பையின் உள்திரையும், சிவந்த நார்ச்சத்தால் மூடப் பட்டிருக்கும். அவற்றினிடையே பலதரப்பட்ட வெள்ளை அணுக்களும் காணப்படும். பின் விளைவு. பெரும்பாலும் நார்ச்சத்து கரைக் கப்பட்டு, இதய வெளியுறை முன் போன்ற நிலையை அடையலாம். சில நேரங்களில் சில நேரங்களில் வெளித்திரையும் உள்திரையும் ஒட்டிக் கொண்டு, ஒட்டிக் கொண்ட வெளியுறை அழற்சியாகலாம். ஆனால் பெரும் பாலும் இதயத்தின் சுருங்கி விரியும் தன்மை பாதிக் கப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவரின் இதயத் துடிப்பை இதயத் துடிப்பளவி மூலம், அறியும்போது இடையிடையே நர நரவென்ற ஒலியும் கேட்கும். வழவழப்பாக இருக்கும் இதய வெளியுறைப் பையின் உள்பாகம் வெளியுறை