இதய ஊக்கிகள் 125
இதயத்தின் இப் பணி, சிறப்பு வாய்ந்த இதயத்தின் கடத்தி மண்டல அமைப்பில் செயல்படுகிறது. இதயத் தசையின் மற்ற இழைகளிலிருந்து அமைப்பில் மாறு படும் நரம்புச் செல்களும் சிறப்புத் தசை இழைக ளான பர்கின் இழைகளும் இந்த அமைப்பில் காணப் படுகின்றன. கடத்தி மண்டல அமைப்பில் பின்வரு வன காணப்படுகின்றன. மேற்பெருஞ் சிரையும் இதய மேலறையும் சந்திக்கும் இடத்தில் சைனோ மேலறை முடிச்சு, (sino auricular node), இதய மேலறை, கீழறை முடிச்சு (atrioventricular node} இரண்டும் வல மேலறையும், கீழறையும் சந்திக்கும் இடத்தில் உள்ள இதயச் சுவரில் காணப்படுகின்றன. ஹிஸ்ஸின் கற்றை இதய மேலறை, கீழறை முடிச்சில் துலங்கி கீழறை இடைத் தடுப்புச் சுவர்வரை காணப் படுகிறது. இங்கிருந்து இது இரண்டு கிளைகளாகப் பிரிந்து வலஇடக்கீழறைகளுக்குச் செல்கிறது. சைனோ ஏட்ரிய முடிச்சில் தூண்டுதல் துவங்கி இதயத்தசை யின் கடத்தி அமைப்பின் மற்ற பகுதிகளுக்குச் சென்று இதயம் சுருங்கி விரிய உதவுகிறது. இந்த இதயத் தூண்டுசெயலின் நோய் மாற்றங் களால் இதயத்தின் இலயமும் இதயத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் முறையான வேலையும் பாதிக்கப்படுகின்றன. இந் நிலையைச் சரி செய்ய மிகச்சிறிய அளவு மின் சக்தி கொண்டு இதயத் தசை களைத் தூண்டலாம். இதற்குச் சிறிய மின் கலன் கள் உதவும். பொதுவாக, செயற்கை இதயத் தூண்டல் முழு மையான இதயத் துடிப்புக் கடத்தல் தடை, குறை வான இதயத்துடிப்பு, மிக அதிக இதயத்துடிப்பு ஆகியவற்றிற்குப் பயன்படுகிறது. இந்த இதயத் துடிப்பு மாற்றங்கள் பொதுவாக மாரடைப்பு, நச்சு மருந்துகள் உண்ட நிலை, உடல் வளர் சிதை மாற் றங்கள் ஆகிய சமயங்களில் ஏற்படுகின்றன. இச் செயற்கை இதயத் தூண்டுதல் தற்காலிகமானது, நிரந்தரமானது என இரு வகைப்படும். தற்காலிகச் சிரைவழி இதயத்தூண்டுதல். மின் வாய்ப்பகுதி (electrode) கையிலுள்ள அல்லது காலி லுள்ள சிரை நாளத்தின் வழியே இதயத்தின் வலப் பகுதிக்குள் செலுத்தப்படுகிறது. இதன் அடுத்த மின் வாய் மின் கலத்தோடு இணைக்கப்படுகிறது. இக் கருவியின் மின் சக்தியின் அளவையும் நேரத்தையும் வேண்டிய அளவிற்கு மாற்றிக் கொள்ளலாம். இத் தூண்டுதலுக்கான கருவி 1952 இல் கண்டுபிடிக்கப் பட்டது. தற்காலிக இதயத் தூண்டதல் குறைந்த மாறுபட்ட துடிப்பு, இதய அழற்சி, மேலறை கீழறைத் தூண்டுதல் தடை, இதய அறுவைக்குப் பின் ஏற்படும் தூண்டுதல் தடை ஆகியவற்றிற்குப் பயன்படும். நிரந்தரமான செயற்கை இதயத் தூண்டுதல். நிரந் தரமான செயற்கை இதயத்தூண்டும் கருவி ஸுல் இதய ஊக்கிகள் 125 (Zull) என்பவரால் 1953ல் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தூண்டுதலுக்கு ஒரு மின் கலம், துடிப்பு உரு வாக்கி (pulse generator) ஆகியவை அறுவைக்குப் பின் மார்புக்குக் கீழ் பதிக்கப்படும். இதன் மின் வாய், சிரை வழியாக இதயத்தின் வலக் கீழறையில் பதிக்கப்படும். தூண்டும் எண்ணிக்கையின் அளவைத் திட்டமிடும் கருவியின் (programmer) மூலம் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இவ்வமைப்பிற்குப் புளுட்டோனியம் கதிர்வீச்சு ஐசோடோப் செல், லித்தியம் -அயோடின் மின் கலம், பாதரசத் துத்தநாக மின்கலம் ஆகியவை உபயோகப்படுத்தப்படுகின்றன. பாதரச மின்கலம் 3 ஆண்டுகளுக்கும் லித்தியம் மின்கலம் 5-10 ஆண்டுக ளுக்கும் புளுடோனியம் ரேடியோஐசோடோப் மின் கலம் அநேக ஆண்டுகளுக்கும் சக்தி அளிக்கின்றன. உ உழைப்பிற்குத் தகுந்தாற் போல் விலையும் அதிக மாவே உள்ளது. செயற்கை இதயத் தூண்டலுக்கான கருவிகள் பொருத்தப்பட்ட பிறகு வாரந்தோறும் அதன் துடிப் பைக் கண்காணிக்க வேண்டும். இந் நோயாளிகள் மின்சார நிலையங்கள் அருகில் செல்லக்கூடாது. மேலும் டயதர்மி சூட்டுக்கோல் (diathermy) முறை யிலும் மருத்துவம் செய்து கொள்ளக் கூடாது. சில சமயம் இச்செயற்கை இதயத்தூண்டிகள் பொருத்தப்பட்ட பின் இதயத்தில் வீக்கம், வலக் கீழ றைச் சிதைவு போன்ற கோளாறுகள் பக்க விளை வாகத் தோன்றக்கூடும். சிரைவழியே செலுத்தப்படும் முறைகளில் ஏற் படும் பக்கவிளைவுகளைத் தவிர்க்கும் பொருட்டுச் சிகாகோ அர்ஸ்கோ மருத்துவக் கணிப்பொறி நிறு வனத்தினர் ஜெலடின் பூசிய மின்வாயுடன் கூடிய மாத்திரையைக் கண்டு பிடித்துள்ளனர். இதில் ரண்டு கம்பிகள் எவர்சில்வர் கமபிகளால் சுற்றப் பட்டு இணைக்கப்பட்டுள்ளன. இந்த மாத்திரையை விழுங்கிய பின் ஜிலடின பூச்சு இரைப்பையில் கரைந்து மாத்திரை இதயத்தின் அருகில் இரைப்பை யில் ஒட்டிக்கொள்கிறது. அதன் பின்னர் தேவையான அளவு இது மின் சக்தியை அளிக்கிறது. இச் செயல் தற்காலிகத் தூண்டுதலுக்கே பயன்படுகிறது. குறிப் பாக இதய ஆய்வில் இதயத்திற்கு அழுத்தம் (stress), எக்ஸ் கதிர்ப்படம் எடுக்கப்படும் போது கொடுக்க வும், அதிக இதயத்துடிப்பைக் குறைக்கவும் பயன்படு கிறது. க 5 சு.நரேந்திரன் நூலோதி. Bailey and Love's Short practice of Surgery, Nineteenth edition, ELBS, London, 1985.