பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதயத்தமனி அடைப்பு 135

மருந்தை நாக்கின் அடியில் வைக்கும்போது அது விரைவாகக் கரைந்து 2-3 நிமிடங்களில் இதயவலி யைப் போக்குகிறது. புரோப்பேனலால் 20 மி.கி. 6 மணியிடைவெளிவிட்டுக் கொடுக்கலாம்; இதயத்தம னியை விரிவுபடுத்தும் மருந்துகள் (coronary vasodi- lators), கொடுக்கலாம். அறுவை சிகிச்சை. இரத்தத் தமனீ குறுக்குவழி ஒட்டுதல் (bypass graft) மூலம், காலிலிருந்து பெரிய வெளிச்சிறை {great sephanous vein) எடுத்து ஒரு விளிம்பைப் பெருந்தமனியில் பொருத்தி மற்றதை இதயத் தமனியின் அடைப்புப்பகுதியை அடுத்துப் பொருத்தி இதய இரத்த ஒட்டத்தை விரிவுபடுத்தலாம். முன்னறிதல். 50 விழுக்காடு நோயாளிகள் 5 ஆண் டுகள் வாழ்வார்கள்; 25 விழுக்காடு பத்தாண்டுகள் வரை வாழலாம். இதயத்தசைநார்கள் நசிவுறல் காரணங்கள். இதயத்தசைகளுக்குப் போதிய அளவு இரத்தம் கிட்டாமை; இதயத்தசைகளுக்குத் தேவைக்குமேலும் இரத்தம் தேவைப்படும்போது இதயத் தசை நசிவு ஏற்படுகிறது. சில வேளைகளில் இதயத்தசைகளில் ஒரு பகுதி மட்டும் நசிவுறும் அல் லது அனைத்துத் தசைகளும் நசிவுறலாம் (transmural infarction) இது இதயத்தமனி தற்காலிகமாகவோ, முழுமையாகவோ அடைபடுவதால் ஏற்படுகிறது. நோய் கடுமையாக இருந்தால், இதயக் கீழறைகள் கட்டுப்பாடின்றி இயங்கத் தொடங்கும். இதனால் கடும் இரத்தச் சுற்றோட்ட வழுவல் (acute circul- atory failure) தோன்றிய, முதல் ஒரு மணிக்குள் இறக்க நேரிடலாம். பின்னால் இதய அறைகள் கட் டுப்பாடின்றி இயங்கினாலும் அதன கடுமை போகப் போகக் குறையும். அறிகுறிகள். நெஞ்சில், நீண்ட நேரம் அமுக்கு வலி வதுபோல தாங்க முடியாத உண்டாகும்; களைப்பு, வாந்தி, மயக்கம், மூச்சுவிடக் கடினம் முதலியனவும் உண்டாகும். மருத்துவர் நோயாளியை ஆயும்போது, நோயாளி வெளிறிக் காணப்படுவான்; வியர்த்து மூச்சுவிடத் திணறி, மெல்லிய காய்ச்சல் கண்டு இதயத்துடிப்பு மிகும். இரத்த அழுத்தம் தொடக்கத்தில் சீராசுக் காணப்பட்டாலும் பின்னர்ச் சிறிது சிறிதாக மிகும். கழுத்துச் சிரை (JVP) அழுத்தம் கூடி முதல் இதய ஒலி ஓசை குறைவாகவும், முன்றாவது நான்காவது இதய ஒலிகளும் கேட்கலாம். இதய மேலுறை உராய்வு ஒலியும் நுரையீரல் சலசலப்பும் (crepitation) கேட்கும். பின்விளைவுகள். இதய இலய மின்மை (arrythmia) சைன இதயவிரைவு (sinus tachycardia), சைனச்சுணங் கிதயம் (sinus brady cardia), இதய மேலறை விரைவு (atrial tachycardia), இதயக் கீழறை புறவிடத்துடிப்பு இதயத்தமனி அடைப்பு 135 (ventricular ectopic beats) இதயக்கீழறை நுண்ணார சைவு (ventricular fibbrillation), இதயத்தடை (heart block) மிகுஇரத்தச் சுற்றோட்ட வழுவல் (acute circulatory failure) இதயத்தசை நசிவினால் பின் இணைப்போக்கு (post myocardial syndrome) இடை விடாத காய்ச்சல், இதயமேலுறைநோய் நுரையீரல் மேலுறை நோய். நோய் ஆராய்தல். மின் இதய வரை படத்தில் முதலில் ST பகுதி உயர்ந்திருக்கும். R அலை அளவு குறைந் திருக்கும், அலை தோன்றத் தொடங்கும், பின்னர் T அலை தலை கீழாகும். நொதிப் பொருள்களின் (enzymes) அளவு மிகும். கிரியாடின் கைனேஷ் (CK), அஸ்பரேட் அமினோடிரான்ஸ் பரேஸ் பரேஸ் (AST), லாக்டிக்டிஹைடிரோஜெனேட்ஸ் (LD), நெஞ்சுஎக்ஸ் கதிர் படம் எடுத்தல் கதிரியக்க ஐசோடோப் துழா வுதல் இவற்றால் நோயை முடிவு செய்யலாம். 3 மருத்துவம். இதில் இதயவலியைக் குறைத்தல், இதய இலயமின்மையைத் தடுத்தல் அல்லது குறைத் தல்,பின்விளைவுகளைக் குணப்படுத்தல்,நோய் மேலும் வராமல் தடுத்தல் ஆகியவை அடங்கும். இதயவலி யைக்குறைக்க மார்ஃபின் (morphine) 5. 10 மி.கி ஊசிமூலம் சிரையில் செலுத்த வேண்டும். (IV); இதய லிக்னோகெய்ன் இலயமின்மைக்கு (lignocaine) கொடுக்கலாம். இதயக் கீழறை நுண்ணாரசைவுக்கு இதயத்திருப்பம் செய்யலாம். (cardiac versia) இதய மேலறைவிரைவு, நுண்ணாரசைவுக்கு டிஜாக்சின் மருந்தைக் கொடுக்கலாம். இதயத்தடைக்கு அட்ரோ பின் (atropin) மருந்தைக் கொடுத்துத் தற்காலிக இதய ஊக்கி (temporary pace maker) பயன்படுத்தலாம். மறுசீரமைப்பு. நசிவுற்ற இதயத்தசை 4-6 வாரங்க ளில் நாருருவத்தசைகளினால் (fibrontissue ) மாற்றீடு செய்யப்படுகிறது. சிக்கல்கள் எதுமில்லா விட்டால் நடக்கலாம். நோயாளி சில நாள்களில் எழுந்து ஆனால் 6 வாரங்களுக்குப் பிறகுதான் வேலை செய்ய வேண்டும். நோயாளிக்கு உள்ளவலிமை மிகமிகத் தேவை. புகை பிடிக்காதிருத்தல், உணவில் கொழுப் புப் பொருள் சேர்க்காதிருத்தல், எடைகுறைத்தல், உடற்பயிற்சி செய்தல் போன்றவை நோய்த்தடுப்பு முறைகள் ஆகும். முன்னறிதல். 50 விழுக்காடு நோயாளிகள் முதலி ரண்டு மணிக்குள் இறந்து விடுவர். 40 விழுக்காட்டி னர் முதல் மாதத்திற்குள் இறப்பர். மீதமிருக்கும் பத்து விழுக்காட்டில் 80 விழுக்காடு ஓராண்டும், 75 விழுக் காடு 5 ஆண்டும் 50 விழுக்காடு 10 ஆண்டும் 25 விழுக்காடு 20 ஆண்டும் வாழ்வர். ஆ.வாசுகிநாதன் நூலோதி. Davidson's Principles of Medicine, Fourteenth Edition, ELBS, London, 1984.