142 இதயத் தொடர் கண்காணிப்பு
142 இதயத் தொடர் கண்காணிப்பு இதயத் தொடர் கண்காணிப்பு தீவிர இதய நோய்ச் சிகிச்சைப் பகுதிகள் (intensive cardiac care units) ஏற்பட்ட பின் இதய நோய் அவசரச் சிகிச்சையும், கண்காணிப்பும், பரவலாக வளர்ந்துள்ளன. மாரடைப்பு நோயாளிகள், அபாய் நிலையிலுள்ள பிறவி இதய நோயாளிகள், பிறந்த வுடன் ஏற்படும் இதய நோயாளிகள், இதய நோய் அறுவை சிகிச்சைக்குப் பின் கண்காணிப்புக்கு உரிய வர்கள் முதலியோருக்கு இப்பகுதியில் தீவிர காணிப்பு அளிக்கப்படுகிறது. இதனால் நோயாளி களின் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்து வரு கின்றது. இந்நோய்களின் குணம், நோய் செல்லும் முறை (course) முதலியவற்றைப் பற்றிய அறிவும் வளர்ந்துள்ளது. கண் தீவிர இதய நோய்ச் சிகிச்சைப் பிரிவில் ஒவ் வொரு நோயாளிக்கும் தனித்தனியாக இதய மின் பதிவுக் (electrocardiogram ) கருவி இணைக்கப்பட்டு, இதயத்தின் மின் இயக்கம் தொடர்பு முறையில் கண் காணிக்கப்படுகிறது. தொடர் கண்காணிப்புத் தேவை. மாரடைப்பு நோய் (myocardial infarction); அபாய நிலையி லுள்ள பிறவி இதயக் கோளாறுகள்; இதய உட்சுவர் நுண்ணுயிர் அழற்சி (infective endocarditis); இதயத் தசைச் சுவர் அழற்சி (myocarditis); தீவிர தீவிர இதய அயர்வு (acute heart failure); இதயத் துடிப்புக் கோளாறுகள் (cardiac arrhythmias) ஆகிய நோய்களால் வருந்துவோர்க்கு அறுவை சிகிச்சையும் தொடர் கண்காணிப்பும் தேவைப்படுகின்றன. செய்முறை. இதயத்தின் வல, இட, நடுப்பகுதி ஆகியவற்றில் ஒவ்வொரு மின் இணைப்பு (electrode), பொதுவான கம்பி மூலம் கண்காணிக்கும் கருவியில் வைத்துப் பொருத்தப்படுகிறது. இக்கருவி நோயாளி யின் கண்களில் தென்படாதவாறு வைக்கப்படுதல் வேண்டும். இக்கருவியில் தொடர்ச்சியாக இதய மின் பதிவு, திரையில் வெளிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட மேற்பட்ட நோயாளிகள் இருப்பார்களேயானால், தனித்தனிக் கண்காணிப் பாளர் தேவைப்படுவதோடு அவர்கள் அதே அறை யில் உள்ள மத்திய கண்காணிப்பாளருடன் central mcnitor) இணைந்து பணியாற்றவும் வாய்ப் பளிக்க வேண்டும். கண்காணிப்புக் கருவியில் தெரியும் விவரங்கள். இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், இதய மின்பதிவு தொடர் கண்காணிப்பினால் இதயத்துடிப்பு எண் ணிக்கை மாற்றங்கள் (எ கா.) மிகைத்துடிப்பு (tachy, மாறுதல் dardia), குறைத்துடிப்பு (bradycardia) லய arrhythmia), ஏட்ரியல் துடிதுடிப்பு (atrial flutter)- வெண்டிரிக்கிள் உதறல் (ventricular fibrillation), T- மாற்றங் அலை மாற்றங்கள், S-T வெட்டுத்துண்டு கள், முழுமையான, முழுமையல்லாத இதய அடைப்பு வெண்ட்ரிக்கிள் மிகைத் துடிப்பு (ventricular tachyeardia) இதயத் துடிப்பு நின்று போதல் (cardiac arrest ) டிஜிட்டாலிஸ் மருந்தின் ஆபத்து விளைவுகள் (digitalis toxicity) இட வெண்டிரிக்கிள் அயர்வு போன்ற மாறுபாடுகளைக் கண்காணிக்கலாம். இவற்றை உடனடியாகக் கண்டறிந்து, உரிய அவசர சிகிச்சையை அளிப்பதே இதயத் தொடர் கண்காணிப்பின் நோக்கமாகும். இம்முறையால் இறப்பு விகிதத்தைக் குறைக்கலாம். கண்காணிப்பின் சிகிச்சை உதவியால் ஏற்படும் மாற்றங்கள். இதயத் துடிப்பு மாறுபாடுகளுக்கான மருந்துகளை உடனடியாக அளித்தல்; கொடுத்து வரும் மருந்துகளின் அளவை மாற்றி அளித்தல்; இதய மறு உயிர்விப்பு (cardiac resuscitation) தேவையான நேரத்தில் மின்சார அதிர்வுச் (electrishock) மருத்து வம் செய்தல்; இதயத் துடிப்பில் ஏற்படும் மாறுதல் களுக்கேற்ப, இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, அமிலத்தன்மை, இரத்தப் பொட்டாசியம் போன்ற வற்றைச் சோதித்து அவற்றிற்கான சிகிச்சை அளிக்க உயிர் வேதியியல் ஆய்வுக்கூட (biochemistry laboratory) வசதிகள் 24 மணி நேரமும் ஆயத்த மாக இருக்க வேண்டும். இதயக் கண்காணிப்பான் கருவியில் புதுமைகள். சிறப்பு எந்திரங்கள் பொருத்தப்பட்ட கண்காணிப் பான் கருவியில், குறிப்பிட்ட கோளாறுகள் ஏற்படும் போது சிவப்பு விளக்கு எரியும். "பீப் பீப்" என்ற அவசர அழைப்பு ஒலி தோன்றுவது மருத்துவர் களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். இதயத் துடிப்பு எண்ணிக்கை மாற்றம் அல்லது லய மாறு தல்கள் ஏற்பட்டால், தானாகவே இதய மின் பதிவைத் தாளில் வரையத்தக்க கருவிகள் தற்போது உள்ளன. ஆற்றல் நினைவாற்றல் வளைவு (memory loop) என்பது இதன் பெயர். க ஆற்றலும் திறனும் மிகுந்த பல்வேறு கருவிகள் அறிவியலின் வளர்ச்சியால் கண்டுபிடிக்கப்பட்டா லும், இதயத் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்களின் ஆற்றலும், தொண்டும். குறிப்பிடத்தக்கவை. நா. கங்கா Principles of Internal Medicine, Tenth Edition, McGraw-Hill Book Company, New York, 1984. நூலோதி.Harrison's இதய நச்சு இதய நச்சு நேரடியாகவோ நரம்பு மூலமாக வோ இதயத்தைத் தாக்கும். இதில் டிஜிடாலிஸ்