இதய நச்சு 143
(digitalis), அகோனைட் (agonite), அரளி, புகையிலை (நிகோட்டின்) ஆகியவை அடங்கும். டிஜிடாலிஸ். இங்கிலாந்தில் பரவலாகக் காட்டில் காணப்படும் டிஜிடாலிஸ், இந்தியாவில் காஷ்மீரத் தில் வளர்க்கப்படுகிறது. இதன் வேர், இலை, விதை ஆகியவற்றில் டிஜிடாக்சின், டிஜிடாலின், டிஜிடோ னின் ஆகிய நச்சு மருந்துகள் உள்ளன. இம்மருந்து கள், நேரடியாக இதயத்தசைகளின் மீது வினை செய்வதன் மூலம் பழுது பட்ட இதயங்கள் தூண்டப் பட்டு மேம்பட இயக்கப்படுகின்றன. இம்மருந்தால், இதயச் சுழற்சியில் இதயத் துடிப்புக் குறைந்து, இதயச் சுருக்க காலம் மிகும். நன்றாகச் செயலாற்றும் விளைவிக் இதயத்தில் மிகக் குறைந்த அளவு கேடு கிறது. ஆனால் தேவைக்கு மேல் உடல் நச்சாகும் வகையில் உண்ட பிறகு இரைப்பை உறுத்தல், இதயத் துடிப்புக் குறைவு, இதயத்தடை (heart block), இதயக் கீழறை மிகைத் துடிப்பு ஆகியவை ஏற்படும். இவற்றின் அறிகுறியாகக் குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி, தலைச்சுற்றல், நாடித் துடிப்புக் குறைவு ஆகியவை ஏற்படும். இத் துடன் மயக்கம், நெஞ்சில் அழுத்தம் தோன்றிச் சுவாச எண்ணிக்கை குறைந்து தாமதமாக மூச்சு வெளிவரும். உடலில் நச்சு முற்றிய நிலையில் மயக் கம் ஏற்பட்டுப் பின்பு அதுவே ஆழ்ந்த மயக்கமாக மாறி வலிப்புத் தோன்றி இறுதியில் மரணம் ஏற் படும். நச்சு அறிகுறிகள் உடலில் தோன்றுவதை தய மின் வரைபடம் மூலம் அறிய முடியும். மரணம் உண்டாக்கும் மருந்தின் அளவு 15-30 மி.கி. டிஜிடாலின் அல்லது 4 மி.கி.டிஜாக்சின். இந்த அளவு மருந்து உண்டால் சுமார் அரைமணியி லிருந்து 24 மணி நேரத்திற்குள் மரணம் ஏற்படும். சிகிச்சை. நோயாளியைப் படுக்கையில் கிடத்தி ஓய்வு கொடுத்து இரைப்பையை டானிக் அமிலம் கொண்டு கழுவவேண்டும். செடிகளின் இலை, வேர் கள் உண்ணப்பட்டிருப்பின் பெருங்குடல் கழுவுதலும் வேண்டும். குளோரோதயசைடு (chlorothiazide) மருந்தை நீர்பெருக்கிக் கொடுக்கக்கூடாது. அட்ரோ பின் 6 மி.கி. தோலுக்கடியில் கொடுக்கலாம். இத் துடன் உறக்க மருந்து இந்நோயாளிக்குத் தேவைப் படலாம். சிறுநீரகம் நன்றாகச் செயல்படும்பொழுது பொட்டாசியம் குளோரைடு கொடுக்கவேண்டும். அரளி. இந்தியாவில் அரளிப் பூக்கள் வழிபாட் டிற்கு ஏற்றதாக இருப்பதால் எங்கும் இச்செடி வளர்க்கப்படுகிறது. இது வெள்ளை, மஞ்சள் என்று இரு வகைப்படும். வெள்ளை அரளியில் வெள்ளைப் பூவோ, இளஞ்சிவப்புப்பூவோ பூக்கும். மஞ்சள் அர ளிப் பூ மணி (bell) வடிவத்தைப் போன்று காணப் படும். இதன் செடி உருண்டையாக 5 செ. மீ. அள வுள்ள பழத்தில் ஒரு கொட்டை, இரு செல்லாகக் காணப்படும். தய நச்சு 143 வெள்ளை அரளி. இச்செடியின் அனைத்துப் பாகங் களும் நச்சு ஆகும். இதில் நீரின் என்ற நச்சு உள்ளது. இந்நச்சு டிஜிடாலிசைப் போலவே மரணத்தை உண் டாக்க வல்லது. இவ்வரளி தசைத்துடிப்பு, வலிப்பு ஆகிய அறிகுறிகளை உடலில் உண்டாக்கும். வாந்தி, வயிற்று வலி, எச்சிலில் நுரை, உணர்ச்சி வசப்படல் ஆகியவையும் காணப்படும். நாடித்துடிப்பு, குறைந்து மெதுவாக ஓடி, சுவாச எண்ணிக்கையும் மிகும். உணவு விழுங்குவதில் தொடக்கத்தில் கடின நிலை ஏற்பட்டு வாயே திறக்க முடியாத நிலை சில மணி நேரம் கழித்து ஏற்படும். பிறகு மயக்கம் உண் டாகி ஆழ்ந்த மயக்கமாக மாறி இதயப் பழுதும் ஏற்பட இறுதியில் மரணம் நிகழும். அரை அவுன்ஸ் அரளி 24 மணி நேரத்தில் மரணத்தை ஏற்படுத்த வல்லது. சிகிச்சை. இரைப்பையைக் கழுவ வேண்டும். மஞ்சள் அரளி. து வெள்ளை அரளியை விட மிகுந்த நச்சு வாய்ந்தது. செடியின் பாலில் தெவி டின் (thevetin) என்ற கொடிய இதய நச்சு உள் ளது. தெவிடாக்சின் (thevitoxin) எனப்படும் நச்சு. கொட்டையில் இருக்கிறது. இந் நச்சு டிஜிடாலிசைப் போல் உடலில் பல அறிகுறிகளை ஏற்படுத்தும். வாயில் எரிச்சல், நாக்கில் துடிப்பு, தொண்டை வறட்சி, வாந்தி, வயிற்றுப் போக்கு, தலைவலி, மயக்கம், விழிக்கும் இழைமத்துளை விரிவு, தாறு மாறான இதயத் துடிப்பு, ஆழ்ந்த மயக்கம், வலிப் புடன் கூடிய மரணம் ஆகியவை இந்நச்சின் அறி குறிகள். மருத்துவம். இரைப்பையைக் கழுவிய பிறகு சிரை வழியாக நீராக மோலார் (molar solution) சோடியம் லாக்டேட்டு கொடுக்க வேண்டும். இத்துடன் 1.2 மி.கி. அட்ரோபினும் சிறந்தது. அகோனைட். அகோனைட் செடி அழகிய பூக்க ளுக்காக வளர்க்கப்படுகிறது. இதன் அனைத்துப் பகுதிகளும் நச்சுத் தன்மையுடையவை. எனினும், அதன் வேர்தான் மிகுந்த நச்சுத்தன்மையுடையது. இதன் காய்ந்த வேர்கள் வட்டவளையத்தில் மேலி ருந்துகீழாகப் பென்சில் முனைபோல் குறைந்துகாணப் படும். இதன் பச்சை வேரை வெட்டிப் பார்த்தால் வெள்ளை நிறமாக நடுவில் அரிசியைப் போல் காணப் படும். வெட்டப்பட்ட பகுதி காற்றுப்பட்ட சிறிது நேரத்தில் இளஞ்சிவப்பாக மாறும். இவ்வேருக்கு மணம் கிடையாது. ஆனால் சுவையாகவும், இனிமை யாகவும் இருக்கும். நீரில் அவ்வளவாகக் கரையாது. இதில் உள்ள நச்சு அகோனைட்டின் என்பதாகும். இது இதயத்தசை, எலும்புத்தசை, மிருதுவான தசை, பொது நரம்பு மண்டலம், வெளிப்புற நரம்பு ஆகி யவை மந்தமாக இயங்கத் தூண்டும்.