இதய நிறுத்தம் 145
படம் 2 இல் மின்சாரம் உண்டாவதில் தடை ஏற்பட்டதால் ஏற்ற இறக்கம் இல்லாமல் கோடு. ஒரு நேர்கோடாக வரையப்பட்டுள்ளது. இது மின்சாரம் அறவே உண்டாகவில்லை உணர்த்துகிறது. என்பதை (அ) மின்சார உற்பத்தி அறவே நின்று விட் டது என்பதை ஒரு நேர் கோடாக இருப்பதைக் கொண்டு அறியலாம். (ஆ) மின்சாரம் சீர்கெட்ட நிலையில் கீழ் அறைகளில் உதறல் உண்டாகி, (ventricular fibrillation) இரத்தம், அறைகளில் இருந்து உயிர் பகுதிகளுக்குச் செல்ல ஏதுவான சுருக்கம் ஏற்படா மல் தடைப்படுவதைக் காட்டுகிறது. இதனால் மின் சாரம் சீர்கேடான முறையில் உண்டாவதை அறிய லாம். எனவே, ஒரே சீராக இயங்க இதயத்திற்குச் சீரான இரத்த ஓட்டமும், சீரான மின்சாரப் பாய்ச் சலும் தேவைப்படுகின்றன. இரத்த ஓட்டத்திற்கு இரு தமனிகள் (coronary arteries) பயன்படுகின்றன. சீரான இதய இயக்கத்திற்குத் தேவையான மின் சாரத்தை ஒரு கடுகளவே உள்ள சிறப்பு நரம்புத் தொகுதி (sino atrial node) உற்பத்தி செய்கிறது. இம்மின்சாரம் இதயத் தசையின் சிறப்புப் பாதை மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. மின்சாரம் உண் டாவதில் தடை ஏற்பட்டாலும், மின்சாரம் சாதார ணமாக அறைப்பகுதியில் உண்டாகாமல் கீழ்அறைப் பகுதியில் அதிவிரைவாகவோ முறையற்றோ உண் டானாலும், இரத்த ஓட்டம் நின்று இதய நிறுத்தம் ஏற்படுகிறது. இதய நிறுத்தம் ஏற்பட்டு அதனால் உடல் பாதிக்கப்படாமல் பழைய நிலையை அடைய வேண்டுமானால், எவ்வகை அடிப்படைக் காரணங் களால் ஏற்பட்டது என்பதையும், எவ்வகைக் கார ணங்கள் இதற்கு ஏதுவாக அல்லது நிகழக் காரணிக ளாக (precipitating or predisposing factors) அமைந் தன என்பதையும் ஆராய்ந்து அறிய வேண்டும். அவற்றைப் பொறுத்தே காப்பு முறையை அமைக்க முடியும். விரைவு மருத்துவத்தின் தேவை. இதய நிறுத்தத் திற்குப் பின் சிகிச்சையினால் முழுதுமாகக் குணம் டைவது என்பது இதயச் தசைகளின் தன்மையையும், தகுந்த காரணங்களையும், அடிப்படைக் காரணங் களையும், இதய நிறுத்தம் ஏற்பட்ட மூன்று நிமிடத் திற்குள் அளிக்கப்படும் சிகிச்சையையும் பொறுத்தே அமையும். மூன்று நிமிடத்திற்கு மேல் தாமதித்துச் சிகிச்சை அளித்தால் மூளை நிரந்தரமாகப் பாதிக்கப் பட்டுவிடும். ஒருவருக்கு இதய நிறுத்தம் ஏற்பட்டு ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டால் அவருக்குச் சிகிச்சை அளிப்பது பலன் தராது. அ.க.4-10 இதய நிறுத்தம் உண்டாக இதயம் இயங்குவதில் தடை. முன்னர்க் குறிப்பிட்டதுபோல், இதய நிறுத் தம் இரு காரணங்களால் ஏற்படுகிறது என்று திட்ட வட்டமாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. இவை இத யத் திசுக்கள் இயங்கும் முறையில் உண்டாகும் கோளாறுகளாகும். இதய இயக்கம் அறவே நின்று விடுதல், இதயம் சுருங்கி விரிவதற்குப் பதிலாக இத யத் தசைசள் குறிப்பாக, கீழ் அறைத் திசுக்களில் உதறல் ஏற்படுவது (ventricular fibrillation) ஆகிய காரணங்களால் இதய அறைகளில் இரத்த ஓட்டச் செயல்முறை நின்றுவிடுகிறது. இப்படத்தில் மினசாரம் அறியலாம். படம். 2 சீர்கேடான முறையில் உண்டாவதை இதய நிறுத்தக் கோளாறைக் கண்டறிய வழி. இதய மின்னலை வரை படக் கருவியால் (ECG machine) இதய நிறுத்தக் கோளாறின் காரணத்தை எளிதில் கண்டறியலாம். சிகிச்சையும் விரைந்து செய்யலாம். ஆனால், இக்கருவி இல்லாத இடத்தில் எவ்வகை மின்சாரப் பாய்ச்சல் காரணமாக இதய நிறுத்தம் ஏற்பட்டது என்று கண்டறிவது கடி னம். இருப்பினும் சிகிச்சை முறை இரண்டிற்கும் ஒன்றாகத்தான் இருக்க இயலும். இதய நிறுத்தம் நிகழத் தகுந்த காரணங்கள். இதய நோய்: (cardiac diseases ) இதய வால்வுகள் மிகவும் சுருங்கி இருப்பது (valve narrowing), இதயத் தசை களுக்கு இரத்தம் எடுத்துச்செல்லும் தமனிகளில் மிகுந்த அடைப்புக் காணப்படுவது (coronary arteries obstruction) மாரடைப்பு நோய் (heart attack) நுரையீரல் சிரைகளில் இரத்த அடைப்புத் துகள் (pulmonary embolism) போன்றவை இதய வியாதிகள் தோன்றக் காரணங்களாக அமையலாம். நோயைக் கண்டறியப் பயன்படும் முறைகள். நுரை யீரலை உள் நோக்கிப் பார்க்கும் முறை (bronchos. copy) இதயத்தினுள் பகுதியை இதயக் கத்தீட்டர் ஆய்வு (cardiac catheterisation) போன்ற பல நோய்க் குறிகளை ஆராய்ந்து பார்க்கும் முறைகளின்போது,