பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 இதய நிறுத்தம்‌

146 இதய நிறுத்தம் வாயு உடலுக்கு ஒவ்வாத சில மருந்துகளை அருந்தியுள் ளமை அல்லது மிகுந்த அளவு உட்கொண்டிருத்தல். ஆக்சிஜன் மிகவும் குறைந்த நிலை, கரியமில மிகுதியான நிலை அல்லது பொட்டாசியம் அளவு மிகுந்துள்ள நிலை (hypoxia, carbondioxide-narcosis, hyper potassemiea) போன்றன நோயைக் கண்டறி யப் பயன்படும். இதய நிறுத்தம் ஏற்பட்டதைக் கண்டறியும் முறை கள். சுவாசம் நிற்பது, மூக்குத் துவாரத்திலிருந்து காற்று வெளிப்படுகிறதா என்பதையும் சுவாசத்தி னால் மார்பு விரிந்து சுருங்குகிறதா என்பதையும் கண்டறிய வேண்டும். நினைவற்ற நிலை, பாதிக்கப் பட்டவர் சுற்றுப்புற நினைவு அற்றுக் கிடக்கி நாரா என்று அறிய,சலனமற்ற நிலை பயன்படும். நாடித்துடிப்பு, இதயத் துடிப்பு இல்லாதிருப்பது, அருகிலுள்ளவர் தம் கையைப் பாதிக்கப்பட்டவரின் மார்பின் இடப்பக்கத்திலோ, கழுத்திலோ வைத்து நாடித்துடிப்பு உள்ளதா, நின்றுவிட்டதா என்று கண்டறியலாம். இழுப்பு சில நேரங்களில் கால்கள் வலிப்பால் இழுக்கப்படுதல் (fits) உண்டு. கை உடன் செய்யத்தக்க முதலுதவி. புதுக்கருவிகள் அமைக்கப்பெற்ற மருத்துவ மனையில் சிகிச்சை அளிப்பது மிகவும் எளிது. ஒருவருக்கு மருத்துவ மனை இல்லாத இடத்தில் இதய நிறுத்தம் நிகழ்ந் தால் மருத்துவ உதவி கிடைக்கும் வரையில் செய்ய வேண்டிய முதலுதவி முறையைக் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். இம்முதலுதவியின் குறிக்கோள் உடலின் திசுக் களுக்குப் போதிய பிராணவாயுவை இரத்தம் இடை விடாமல் எடுத்துச் செல்லத் தகுந்த முறைகளைக் கடைப் பிடித்தலாகும். முதலுதவி முயற்சிக்கு உரிய அடிப்படை முறைகளை மூன்றாகப் பிரிக்கலாம். காற்றுப் பாதையைச் சீர் செய்தல். இம்முயற்சியில் முதற்கண் பாதிக்கப்பட்டவரைச் சமமான, ஆனால் கடினமான தரையில் படுக்க வைக்க வேண்டும். முத லுதவி செய்பவரின் ஒரு கை பாதிக்கப்பட்டவரின் கழுத்தில், படத்தில் காட்டியது போல் வைக்கப்பட வேண்டும். அவரின் இன்னொரு கை, நெற்றியின் மேல் வைக்கப்பட வேண்டும். பின்பு கழுத்து மேல் நோக்கிச் சாய்க்கப்பட வேண்டும். இந்நிலை, தொண் டைப்பகுதியை நாக்கு அடைத்துக் கொள்ளாதவாறு பாதுகாக்கப் பயன்படுகிறது. அதே வேளையில் செயற்கைப் பற்கள், உணவு அல்லது மற்ற பொருள் களால் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றை நீக்க வும் பயன்படுகிறது. சில வேளை இம் முயற்சிகளால் பாதிக்கப்பட்டவருக்கு நினைவு திரும்பலாம். காற்றுப்போக்கை உண்டாக்குதல். காற்றுப் போக் கை உண்டாக்குதல் என்ற செயற்கை முறைச் சுவா படம் 3 கடினத் தரை வைக்கப் இப்படத்தில் பாதிக்கப்பட்டவரை சமமான, யில் படுக்க வைக்கும் முறையும், தலைப்பாகம் படுக்க பட வேண்டிய முறையும் விளக்கப்படுகின்றன. சத்தைப் பல வகைகளில் உண்டு பண்ணலாம். வா யோடு வாய் வைத்தோ,மூக்கோடு வாயை வைத்தோ, சுவாசக் குழாய் மூலமோ, சுவாசப் பையின் மூலமோ செயற்கை முறைச் சுவாசத்தைச் செயல்படுத்தலாம். இது இதய நிறுத்தம் எவ்வகைச் சூழ்நிலையில் ஏற் பட்டது என்பதைப் பொறுத்து அமைகிறது. வாயோடு வாய் வைத்து மூச்சுச் செலுத்துதலில், பாதிக்கப்பட்டவரின் தலை பின்னோக்கி வைக்கப் பட்டிருக்க வேண்டும். செயற்கைச் சுவாச முறை அளிக்க முயலுபவர் ஒரு கையால் பாதிக்கப்பட்டவ ரின் கழுத்துப் பகுதியை மேல்நோக்கித் தள்ள வேண் டும். மறு கையைப் பாதிக்கப்பட்டவரின் மூக்கை மூடி. வாய் வழியாக உள் செலுத்தப்படும் காற்று வெளிவராமல் இருக்கத் தடை செய்ய வேண்டும். இந்நிலையை ஏற்படுத்திய பின் முதலுதவி செய் பவர் காற்றைத் தம் நுரையீரலினுள் முடிந்த மட் டும் உள்ளிழுத்து, பிறகு தம் வாயைப் பாதிக்கப்பட் டவரின் திறந்த வாயோடு வைத்து விரைவாகத் தம் முள் அடக்கி வைத்துள்ள காற்றைப் பாதிக்கப்பட்ட வரின் காற்றுக் குழலில் செலுத்தினால், பாதிக்கப் பட்டவரின் மார்பு விரிவடையத் தொடங்கும். பின் னர் வாயை எடுத்துவிட்டால் உள்ளே செலுத்தப்