இதய நிறுத்தம் 147
ா இதய நிறுத்தம் 147 படம் 4 பட்ட காற்று வெளி வருவதைக் காணலாம். சில வேளைகளில் காற்றை வாய்வழியே செலுத்தாமல் மூக்குத் துவாரத்தின் மூலமும் செலுத்தலாம். இம் முறையின்போது, பாதிக்கப்பட்டவரின் வாயை முத லுதவி செய்பவரின் கை மூட வேண்டும். இம்முறையில் நிமிடத்திற்கு 10 அல்லது 12 தட வைகள் காற்றை உள் செலுத்தினால், பாதிக்கப்பட் டவரின் நுரையீரலுக்குள் செயற்கை முறையில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு, நுரையீரலுக்குள் ஆக்சி ஜன், கார்பன் டை ஆக்சைடு பரிமாற்றம் ஏற்படு கிறது. மருத்துவமனைகளில் காற்று மண்டலத்திலிருந்து நேரடியாகக் காற்றையோ, ஆக்சிஜனையோ பெற்ற ஒரு காற்றுப் பையைப் பொருத்தி, ஒரு கருவியால் உள்செலுத்தப்படுகிறது. இதனால் வாயோடு வாய் பொருந்தும் முறையிலுள்ள அருவெறுப்பு நீக்கப்படு கிறது. இரத்த ஓட்டத்தைச் செயற்கை முறையால் திரும்ப உண்டு பண்ணுதல். இது மூடிய முறையாகும். இதயத் தைப் புறத்தே அழுத்தும் முறையில் இது செயல் படுத்தப்படுகிறது. மேற்கூறியவாறு செயற்கைச் சுவாசமுறையைச் செயல்படுத்துபவரோ, மற்றொருவரோ பாதிக்கப் பட்டவரின் பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்து இம் முறையைச் செயல்படுத்தலாம். படத்தில் காட்டிய மேல் மற்றொரு கையைப் வாறு ஒரு கையின் அ.க.4-10அ படம்: 5 பாதிக்கப்பட்டவருக்குச் செயற்கைச் ஓட்டமும் ஏற்படுத்தும் முறை சுவாசமும், இரத்த பொருத்தி மார்பின் நடுப்பகுதி கீழ்ப்பகுதிகளை, முதுகு எலும்பை நோக்கி அழுத்திவிட வேண்டும். இப்பொழுது மார்பெலும்பு (sternum) 14 முதல் 2 அங்குலம் பின்னோக்கி அமுக்கப்பட்டு விடுபடுகிறது. ஒருமுறை அழுத்தியவுடன் கைகளை எடுத்து மீண்டும் முன்போலவே அழுத்திவிட வேண்டும். இவ்வாறு நிமிடத்திற்கு 60 அல்லது 70 முறை செய்ய வேண் டும். மார்புப் பகுதியை அழுத்திவிடும்போது இதய அறைகளில் உள்ள இரத்தம் வெளியேறுகிறது; கீழ் அறைகளில் உள்ள இரத்தம் வெளியேறுகிறது. இது நுரையீரலுக்கும், உடலின் திசுக்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த இரத்தம் மீண்டும் இதய அறைகளை அடைகிறது. இவ்வகையில் செயற்கை முறை இரத்த ஓட்டம் செயல்படுத்தப்படுகிறது. செயற்கை முறையில் ஆக்சிஜன் நுரையீரலுக்குள் செலுத்தப்படுகிறது. இதனால் செயற்கை முறை இரத்த ஓட்டமும், ஆக்சிஜன், கரியமில வாயுப் பரி மாற்றமும் ஏற்படுகின்றன. மேற்கூறிய இரு செயல்முறைகளாலும் குறைந்த அளவு ஆக்சிஜன் உள்ள காற்றே பாதிக்கப்பட்ட வரின் நுரையீரலுக்குள் செலுத்தப்படுகிறது. அதே வேளையில் செயற்கை முறை இரத்த ஓட்டத்தினால் நுரையீரலில் ஆக்சிஜன், கரியமில வாயுப் பரிமாற்ற மும் ஏற்படுகிறது. எனவே, இவ்விரு முறைகளாலும் ஆக்சிஜன் திசுக்களுக்கு, குறிப்பாக மூளைக்கு எடுத்துச் செல்லப்