பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 இதய நுரையீரல்‌ பொறி

148 இதய நுரையீரல் பொறி படுதல், திசுக்கள் ஈடுசெய்ய முடியாத அளவிற்குப் பழுதடையாமல் இருக்கப் பெரிதும் பயன்படுகிறது. மூலமும், இவ்வகையான அவசர உதவி முதலுதவி மூலமும் பல உயிர்களை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியும். எஸ். தணிகாசலம் இதய நுரையீரல் பொறி இதயத்தின் இரததத்தை உந்தித் தள்ளும் பணியை யும், நுரையீரல்களின் வளிமப் பரிமாற்றப் பணியை யும், அறுவை முறைகளின் போது தற்காலிகமாக வும் முழுமையாகவும் ஏற்றுக்கொள்ளும் எந்திரமே இதய நுரையீரல் பொறி (heart lung machine) எனப்படும். இதய அறுவை சிகிச்சையின்போது இப்பொறி பயன்படுத்தப்படுகிறது. வரலாறு.இப்பொறியைத் தொடக்கி வைத்தவரை யும், அதன் காலத்தையும் அறுதியிட்டுக் கூற இயல் வில்லை. இதற்கு முன்னோடியான ஆய்வுகள் 1885 இல் தொடங்கப்பட்டன. பாஸ்டனிலுள்ள டாக்டர் கிப்பன் 1930இல், இதயம், நுரையீரல்களின் பணி யை ஓர் எந்திரம் மூலம் செய்துவிடலாம் என்ற கருத் தை உலக அறிவியலறிஞர்கள் முன்வைத்தார். அதற் கான ஆய்வுகளை இரண்டாவது உலகப் போரின் போது, பிலடெல்பியாவில் தொடங்கினார். 1953இல் வெற்றிகரமாக ஒரு பெண்ணின் பிறவி இதயக் கோளா ாறான இரண்டு மேலறைகளுக்கிடை யே உள்ள தடுப்புச் சுவரில் உள்ள துளையை, இதய நுரையீரல் பொறி கொண்டு சரி செய்தார். இதைத் தொடர்ந்து மேலும் பல நாடுகளில் இம்முறை கை யாளப்பட்டு நன்கு செயல்பட்டு வருகிறது. இதயத்தைத் திறந்து அறுவை சிகிச்சை செய்ய முயலும் போது, இப்பொறி இன்றியமையாத தாகக் காணப்படுகிறது. இப்பொறியின் செயல் முறையைத் தெளிவாக அறிந்து கொள்ள இதயம், அதன் இரத்த நாளங்கள் பற்றிய அடிப்படை உடற் கூறு இயலை அறியவேண்டும். காண்க, இதயம். வலப்பக்கத்தில் (வல மேலறை, கீழறை) சுத்தி கரிக்கப்பட வேண்டிய இரத்தமும், இடப்பக்கத்தில் (இடமேலறை,கீழறை) சுத்திகரிக்கப்பட்ட இரத்தமும் உள்ளன. இரண்டு மேலறைகளுக்கிடையேயும், இரு கீழறைகளுக்கிடையேயும் தடுப்புச் சுவர்கள் உள்ளன. ஆகவே, இரு மேலறைகளுக்கிடையேயும், இரு கீழ றைகளுக்கிடையேயும், இரத்த ஓட்டம் இருக்காது. உடலெங்குமுள்ள அசுத்த இரத்தம், உடலின் மேற் பகுதியிலிருந்து மேற்பெருஞ்சிரை வழியாகவும், உட லின் கீழ்ப்பகுதியிலிருந்து கீழ்ப்பெருஞ்சிரை வழியாக வும், வல மேலறையை அடைகின்றது. இந்த இரத்தம் மூவிதழ் வால்வு வழியாக (tricuspid) வலக்கீழறையை அடைகிறது. மேலறையிலிருந்து கீழறைகளுக்கு இரத்தம் செல்லலாம். ஆனால் கீழறையிலிருந்து மேலறைக்கு இரத்தம் செல்ல இயலாது. வால் வுகள் இம்முறையில் பணியாற்றும் வகையில் அமைந்துள்ளன. வலக்கீழறையில் வந்தடைந்த இரத்தம் நுரையீரல் பெருந் தமனிகள் வழியாக இரு நுரையீரல்களையும் அடைந்து வளிமப் பரிமாற் றம் நடைபெறுகிறது. அசுத்த இரத்தத்திலுள்ள கரியமில வாயு அகற்றப்பட்டு, உள் மூச்சு மூலம் கிடைக்கும் ஆக்சிஜன் இரத்தத்தில் கலக்கிறது. இது தமனி இரத்தம் எனப்படும். இது நுரையீரல் சிரை கள் வழியாக இடமேலறையை அடைந்து, வால்வு வழியாக இடக்கீழறையை அடைந்து பெருந்தமனி மூலம் உடல் முழுதும் செல்கிறது. தமனியிலும் பிறை வடிவ வால்வுகள் உள்ளதால் இடக்கீழறையிலிருந்து இரத்தம் பெருந்தமனிக்குச் செல்லலாம். ஆனால் பெருந்தமனியிலிருந்து இடக்கீழறைக்கு = இரத்தம் செல்ல இயலாது, இதுவே இரத்தச் சுழற்சி எனப் பட்டு நிமிடத்திற்கு 72 தடவை நடைபெறுகிறது. இது முறையான இரத்த ஓட்டமாகும். இதயத்தில் தோன்றும் பிறவி ஊனங்களால் இந்நிலை மாறு கிறது. இதய-நுரையீரல் பொறி கொண்டு, இதயத் தைத் திறந்து அறுவை சிகிச்சை செய்யப்பட வேண் டிய ஊனங்களும், அவற்றின் தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலறைப் பிரிதிரையில் துளை (atrial septal defect). இட மேலறையிலிருந்து இரத்தம் வழக்கத் திற்கு மாறாக வல மேலறையில் செல்வதால், நுரை யீரல்களின் பணி அதிகரித்து இடையூறுகள் உண்டா கின்றன. கீழறைத் தடுப்புச் சுவரில் துளை (ventricular septal defect) இயற்கை நிலைக்கு மாறாக, இடக் கீழறையிலிருந்து இரத்தம், துளை வழியாக வலக் கீழறையை அடைவதால் முன்கூறியது போன்றே இடையூறுகள் தோன்றுகின்றன. குறுகலான பெருந்தமனி (aortic stenosis). பெருந்தமனியின் உள்துவாரம் குறுகிவிடுவதால், இடக் கீழறையிலிருந்து இரத்தம் உரிய அளவில், க் உரிய விசையுடன் பெருந்தமனிக்குள் செல்ல இயலு வதில்லை. இதனால் இடக் கீழறையிலேயே இரத்தத் தேக்கம் ஏற்பட்டு, நாளடைவில் இதய நோய் உண் டாகிறது. குறுகலான நுரையீரல் தமனி (pulmonary stenosis). சுத்திகரிக்கப்பட்ட இரத்தம் வலக்கீழறையிலிருந்து நுரையீரல்களுக்குச் செல்வது தடைப்படுவதால் நாளடைவில் வலக்கீழறை தன் பணியைச் செய்ய இயலாது.