பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதய நுரையீரல்‌ பொறி 149

ஃபேலோட்ஸன் நான்கு ஊனங்கள் (Fallot's tetralogy) இந்த இதயப்பிறவி ஊனங்கள் பற்றி ஃபேலோ என்ற அறிஞர் விவரித்ததால், இந்நோய்க்கு இப்பெயரிடப் பட்டது. நுரையீரலின் குறுகிய தமனி; கீழறைத் தடுப் புச் சுவரில் துளை; வலப்புறமாக அமைந்த பெருந் தமனி (சாதாரணமாகப் பெருந்தமனி இடப்பக்கத் திலேயே இருக்கும்); வலக்கீழறையின் மிகை வளர்ச்சி ஆகிய நான்கு ஊனங்களும் குழந்தையிடம், இணைந்து காணப்படுகின்றன. இந்நோயுள்ள குழந்தை நீலக் குழந்தை (blue baby என அழைக்கப்படுகிறது. மேற்கூறிய துளையின் வழியாகச் சிரை இரத்தமும், தமனி இரத்தமும் கலந்து, உடல் முழுதும் செல்வ தால் குழந்தை நீல நிறமடைகிறது. (குறிப்பாக முகம், கால், உதடு, கண்கள், நகங்கள் ஆகியவை). மேற்கூறிய பிறவி ஊனங்களுக்கு மருந் துகள் எப்பலனும் அளிக்கா. மாறாக, நுரையீரல்- இதயப்பொறி கொண்டு, இதயத்தைத் இதயத்தைத் திறந்து அறுவை சிகிச்சை செய்வதே வழியாகும். கை, பிறவி ஊனங்கள் தவிர, பெறப்பட்ட ஊனங்க ளும் (acquired defect) உள்ளன. அவற்றில் மைட்ரல் எனப்படும் ஈரிதழ் வால்வுச் சுருக்கம் குறிப்பிடத்தக் கது. இம்மேலறையிலிருந்து இடக் கீழறைக்கு இரத்தம் செல்ல இயலாமையால், இரத்தம் நுரையீரல் களில் தேக்கமடைந்து, நோயாளிக்கு மூச்சுத் திண றல் ஏற்படுகிறது. இதற்கும் அறுவை சிகிச்சை பல னளிக்கும். இதய இரத்த நாள அடைப்பு. இரத்தம் செலுத்தும் இதய நாளம் அடைபட்டுக் குறுகலடைகிறது. போதிய இரத்தம் இதயத்திற்கு நாளடைவில் அப்போது இத செல்லாததால் யத்திற்குப் மார்புவலி (angina) உண்டாகி இதயத்தாக்குதலில் (heart attack) முடிகிறது. இதைச் சரி செய்ய, இதய நுரையீரல் பொறி உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யவேண்டியுள்ளது. இது போன்றே, பெருந் தமனி மற்றும் நுரையீரல் தமனியிலுள்ள தடுக்கிதழ் வால்வுகள் பெருமளவில் பழுதடைந்தால், அகற்றப்பட்டு, புதிய செயற்கை நெகிழி (plastic) வால்வுகள் பொருத்தப்படுகின்றன. இதுவும், திறந்த இதய அறுவைசிகிச்சையில் (open heart surgery} அடங்கும். அவை இவ்வகை அறுவை சிகிச்சையின்போது மேற் கூறிய நோய்களில் பாதிக்கப்பட்ட நோயாளியின் நோய் தெளிவாக அறியப்படவேண்டும். அறுவை சிகிச்சையைத் தாங்கிக் கொள்ளக்கூடிய நிலையில் இத்தகைய நோயாளி உடல் இருக்கவேண்டும். உணர்வ நீக்கம் (anaesthesia) செய்யப்பட்டு அறுவை அரங்கில், கட்டிலில் கிடத்தப்படுகிறான். அவன் மேற் உள்ளும், கீழ்ப்பெருஞ்சிரையின் பெருஞ்சிரையின் உள்ளும் டைகான் நெகிழிப் பொருளாலான குழாய் கள் செலுத்தப்படுகின்றன. பின், இரு குழல்களும் கவை (Y) வடிவக் குழலுடன் இணைக்கப்பட்டு, ஒரு இதய நுரையீரல் பொறி 149 பெருங்குழாய் கொண்டு ஆக்சிஜனேட்டருடன் (oxygenator) பொருத்தப்படுகிறது. பெருஞ்சிரை களின் இரத்தம், ஆக்சிஜனேட்டருக்கு வந்து சேருகிறது. இதனுள்ளேயுள்ள திரவத்தில் உப்புக் கரைசலும், கால்சியம், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம்,குளோரைடு, பாஸ்பேட், குளுகனேட் போன்ற பொருள்களும் உள்ளன. இவற்றுள் வேண் டாத பொருள்களை வடிகட்டும் ஒரு படவமும் உள் ளது. இந்த ஆக்சிஜனேட்டர், நுரையீரல்கள் போன்று பணிபுரிந்து, இரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. சுத்தி கரிக்கப்பட்ட இரத்தம், படத்தில் காட்டியபடி ஒரு பம்பினுள் சென்று உந்தித் தள்ளப்படுகிறது. மற் றொரு குழாய் வழியாக ஏற்கனவே பெருந்தமனி யின் ஏறு பகுதியில் (பெருந்தமனியில் மூன்று பகுதி கள் காணப்படும். அவை ஏறு பகுதி, வளைவுப் பகுதி, இறங்கு பகுதி என்பன செருகப்பட்ட குழாய் வழிச் சென்று இரத்தம் உடலின் பல்வேறு பாகங்களுக்குச் செல்கிறது. முன்னரே விவரிக்கப் பட்ட இரத்தச் சுழற்சி போன்றே இங்கும் நடைபெறு கிறது. இங்கு இதயமும், நுரையீரல்களும் செய லற்று விளங்கும் வேறுபாடு உண்டு. ஆகவே, மருத் துவர்களால் அறுவை சிகிச்சையை எளிதில், விரை வில் செய்ய இயலும். இதயமும், நுரையீரல்களும் செயலற்று இருக்கும்போது நோயாளியின் உடல் வெப்பம் மிகவும் குறைந்து 20-25°C வரை கொண்டு வரப்படுகிறது. இது மிகக் குறைந்த வெப்பநிலை (hypothermia) எனப்படும். இதற்கு வெப்பப் பரி மாற்றி (heat exchanger) உதவுகிறது. பொறியில் இரு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒன்றின் வழியாகக் குளிர்ந்த நீரும், மற்றொன்றின் வழியாக வெப்ப நீரும் ஆக்சிஜனேட்டருக்குள் செல்கின்றன. நோயாளியினுடைய இரத்தத்தின் வெப்பநிலைக் கேற்பத் தண்ணீரின் வெப்பநிலையும் மாற்றப்படு கிறது. . அறுவை சிகிச்சைக்கான இதயத்தைத் திறந்த வுடன், அதில் ஏற்கனவே உள்ள இரத்தம் அறுவை சிகிச்சைக்கு இடையூறாக இருக்கும். ஆகவே அதை இதய இரத்த உறிஞ்சியால் அகற்றி அதுவும் வீணாகாமல், அந்த இரத்தமும் குழாய்கள் வழி யாக எக்கி மூலம் ஆக்சிஜனேட்டரை அடைகிறது. அதுவும் சுத்திகரிக்கப்பட்டு, ஏறும் பெருந்தமனியில் செலுத்தப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. அறுவை யாளரால் இதயம் திறக்கப்பட்டவுடன்தான், நோ யாளி இதய-நுரையீரல் பொறியுடன் இணைக்கப் படுகிறான். அதேபோன்று அறுவை சிகிச்சை முடிந்து, திறக்கப்பட்ட இதயம் மூடப்பட்டவுடன், இதய நுரையீரல் பொறியுடன் நோயாளியின் இணைப்புத் துண்டிக்கப்படுகிறது. ஏனெனில், நோயாளியின் இதயமும், நுரையீரல்களும் தம் பணிகளைத் தொடங் கிவிட்டன. பின்னர் அனைத்து நெகிழிக் குழாய் களும் அகற்றப்படுகின்றன.