பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதய நோய்கள்‌ 151

முறையாகப் பணிபுரியத் தொடங்கினால்தான் இதய நுரையீரல் பொறி சரியாகச் செயல்பட்டுள்ளது எனக் கொள்ளலாம். - அ. கதிரேசன் நூலோதி Linhart, Joseph, W., Joyner, Claude R.. Diagnostic Echocardiography, The C.V. Mosby Company, St. Louis, 1982. இதய நோய்கள் இரத்தம், இதயம் சுருங்கி விரியும் நிலையில் உடலி லுள்ள ஒவ்வொரு திசுவுக்கும் சென்று அவை தத்தம் வேலைகளைச் செய்ய உதவுகிறது. இதயம் வேலை செய்யாது சில நிமிடங்கள் நின்ற நிலையில் செல் களில் பழுது ஏற்படுகின்றது. சில வேளை இப்பழுது மீண்டும் நல்ல நிலையை அடைய இயலாது. இதயம் நின்ற பிறகு முதலில் மூளையில்தான் பழுது ஏற்படு கின்றது. பிறவிக் குறைபாடு, நுண்ணுயிர், இதயத்தமனி அடைப்பு, மிகை இரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் இதயத்தில் ஏற்படுகின்றன. பிறவிக் குறைபாடு. பிறவியிலே இதயம் உருவா கும் திசுக்களில் ஏற்படும் குறைபாடு, பாரம்பரியம், கிரந்தி, வைரஸ், நுண்கிருமி, உட்கொள்ளும் சில மருந்துகள் ஆகியவற்றால் ஏற்படும். கருவுற்ற முதல் சில மாதங்களில் ஏற்படும் ஜெர்மன் தட்டையம்மை (rubella), சைடோமெகாலோ வைரஸ் தொற்று, பிறவிக் கோளாறுகளைத் தோற்றுவிக்கும். இக்குறை பாடுகள் உடல் நீலம் பூக்கும் வகையாகவும், நீலம் பூக்கா வகையாகவும் தோன்றும். உடல் வளர்ச்சியில் தாமதம், மூச்சு விடக் கடினம், உடற் பயிற்சியில் கடினம் ஆகியவை இந்நோய்க்கான பொது அறிகுறிக ளாகும். இப்பிறவி நோய் பொதுவாகப் பள்ளியில் நடைபெறும் மருத்துவ ஆய்வில்தான் அறியப்படும். ஏனெனில் ஊனங்களால் ஏற்படும் மரணத்தில் 50 விழுக்காடு இதயம் அல்லது அதைச் சார்ந்த இரத்தக் குழாய் மூலமாகவே ஏற்படுகிறது. உயிருடன் பிறக் கும் ஆயிரம் குழந்தைகளில் சுமார் மூன்று குழந்தை கள் இதயப் பிறவிக் குறைபாடுடனே பிறக்கின்றன. இக்குறைபாடுகளில் குறிப்பாக இதய வால்வுச் சுருக்கம், மேல் கீழ்த் தடுப்புச் சுவர்த் துளை, இரத்தக் குழல்கள் சுருக்கம், இ மாற்றம் ஆகியவை காணப் படும். இதனை, இதயத்தில் சிரை வழியாக மருந்து செலுத்தி எக்ஸ்கதிர்படம் எடுத்தல் அல்லது தொடர்ந்து காணக்கூடிய தொலைக் காட்சி (cinean. இதய நோய்கள் 151 giography) வாய்ப்பு மூலம் அறியலாம். மேலும் இக் குழாய் வழியாகக் குறைபாடுகள் உள்ள இடங்களில் இரத்தத்தை எடுத்து அதன் தன்மையை அறிந்து அவ்விடங்களில் சிரை, தமனி இரத்தம் கலந்திருக் கிறதா என்பதையும் அறியலாம். பின்னர் இதய அறுவை முறை தேவைப்பட்டபோது இதய எந்திர உதவியுடன் இதயக் குறைபாடுகளைச் சரி செய்ய லாம். மூட்டு வாத இதய நோய்.(rheumatic heart disease) இந்நோய், மூட்டு அழற்சியுடனும் காய்ச்சலுடனும் ஏற்படும். அப்போது இதயத்தை ஒட்டிய நார்த்திசுக் கள் அழற்சி (endocarditis),தசை அழற்சி(myocarditis), உறை அழற்சி (pericarditis) ஆகியவை உண்டாகும். இந்நோயகளால் தீராத இதய நோய்கள் ஏற்படக் கூடும். இந்நோய் விட்டு விட்டுத் தாக்கும் நிலையில் காய்ச்சல் தோன்றும். வால்வுகள் கெட்டிப்பட்டுச் சுருங்கும் அல்லது மூடித் திறக்கவியலாத நிலை ஏற் படும். இவை பெரும்பாலும் தனியாகவோ சேர்ந்தோ ஈரிதழ் (bicuspid) வால்வுகளில் காணப்படும். இதயத் தளர்ச்சி (heart failure). இதயம் நோயுற்ற பொழுது, தன் திறனுக்கு மேல் வேலை செய்வதால் வீங்கக்கூடும். அப்பொழுது இரத்தம் தமனிக்குள் செல்வது குறைந்து இட இதயப்பழுது ஏற்படும். இதன் அறிகுறியாக உடல் நீலம் பூத்தல், மூச்சுத் திணறல், சோர்வு, சளியுடன் கூடிய இருமல் ஆகி யவை ஏற்படும். வல இதயப் பழுதால் நெஞ்சு வலி, கல்லீரலில் துடிப்புடன் கூடிய வீக்கம், சிரைத் துடிப்பு ஆகியவை சில வேளைகளில் தோன்றும். மிகை இரத்த அழுத்தம் (hypertension ). மிகை இரத்த அழுத்தத்தின் போது இதயம் மிகுதியாக வேலை செய்வதால் சோர்வுற்று இதயப் பழுது ஏற் படுகிறது; இதயப் பழுது மிகை இரத்த அழுத்த நோயின் ஒரு பக்க விளைவே ஆகும். நோயாளிக்கு வயதாக ஆக, இதயம் பழுதடைந்து ஈரிதழ் வால்வு சரிவர மூடித் திறக்கவியலாத நிலை ஏற்படலாம். இதயத்தமனி நோய் (coronary heart disease). அமெரிக்காவில் வாழும் ஆண்கள் ஐவரில் மூவருக்கு அவர்கள் அறுபத்தைந்து வயது தாண்டுவதற்குள் இதயத் தமனி நோய் ஏற்படுகிறது. இதில் 25 விழுக் காட்டினர் மாரடைப்பு நோய் தோன்றிய 3 மணி நேரத்திற்குள் இறந்துவிடுகின்றனர். 10 விழுக்காட் டினர் நோய் தோன்றிய 10 வாரங்களில் இறக்கின் றனர். எஞ்சியோர் மாரடைப்பு ஏற்பட்ட பிறகு வாழ்க்கையைத் தொடர்ந்தாலும், அவர்கள் வாழ் நாள் குறைவாகவே உள்ளது. மாரடைப்பு நோய், இதயத் தமனிகள் அத்தி சோல்லிரோசிஸ் என்ற இரத்த நாள மாறுபாட்டின்