இதயப்பையில் நீர்கோத்தல் 153
கீழறை நுண்ணாரசைவு ஏற்பட்டு இறக்க நேரலாம். இதய நோயைப் பொறுத்து 20 விழுக்காடு நோயா ளிகள்தான் குணமடைவார்கள். உயிர் பிழைக்கக் கூடிய நோயாளிகளுக்கும், அவசர மருத்துவச் சிகிச்சை செய்தாலொழிய, பிழைக்க வைக்க இய லாது. இதயப்பிசைதல் ஓரளவுக்குத்தான் இதயத்தி லிருந்து இரத்தத்தை வெளியேற்றும். இதயக் கீழறை நுண்ணாரசைவு வந்தால் உடனே மின் அதிர்ச்சி வைத்தியம் செய்ய வேண்டும். பின் விளைவுகள். விலா எலும்புகள் உடையலாம்; இதய மேலுறைகளுக்கிடையே இரத்தம் கசிந்து இத யம் விரிவு படாமல் தடுக்கலாம்; மார்பினுள் இரத் தம் கட்டலாம். நுரையீரல் மேலுறைகளுக்கிடையே காற்று ஏறலாம்; கல்லீரல் (liver) சிதிலமடையலாம். கொழுப்புப் பொருள் நுண்துகள்களாக இரத்தத்தில் செல்லலாம்; மண்ணீரல் (spleen) உடையலாம், இரத்தப்போக்கு ஏற்படலாம். இதயம் சுருங்கி விரி யாமல், கண்பாவை (pupil) நிலையாக விரிந்து 80 நிமிடத்திற்குமேல் இருந்தால் இதயப் பிசைதல் செய்வதில் பலனில்லை. மார்பைத் திறந்து இதயம் பிசைதல். நடுமார் பெலும்பிலிருந்து அக்குள்வரை இட ஐந்தாவது விலாவிடைப்பகுதியில் மார்பைத் திறக்கவேண்டும். ஏனெனில், இங்குதான் இரத்தச் சுற்றோட்டம் மிகுதி யாக இல்லை. பின் விலா எலும்பு விரிப்பி (rib sprcader) கொண்டு வெட்டிய இடத்தை விரிவு படுத்தவேண்டும். இதய மேலுறைகளைக் கீறி இதயக் கீழறைகள் நன்கு தெரியுமாறு வைத்துவிட்டு ஓர்உள் ளங்கையை இதயத்தின் மேலும், மற்ற கையை யத்தின் கீழேயும் வைத்து நிமிடத்திற்கு 50 முறை பிசைய வேண்டும். மிகுதியாக அழுத்தினால் இதயத்தசை சிதை தைவுறும் என்பதால் மென்மையாகச் செய்யவேண்டும். இதனால் இதயத் தசை உறுதிபடும். இதய இரத்த ஓட்டம் மிகுந்து நரம்பு மண்டலங்கள் தேவையான ஆக்சிஜன் பெறும். தடைப்பட்ட இதயம் பெரியதாக, தொளதொளவென்று, நீலம் பாய்ந்தும் இருக்கும். இதயப்பிசைவு செய்தபின் இதயம் சிறிய தாகவும், கெட்டியாகவும், சிவப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். இதயம் கெட்டியாகிய பின் இதயம் பொதுவாகச் சுருங்கி விரியும்படிச் செய்யவேண்டும். இதயப்பையில் நீர்கோத்தல் மீனா வாசுகிநாதன் மார்புக் கூட்டின் உள்ளேயும் இதயத்தைச் சூழ்ந்தும் இரட்டை மடிப்பாக அமைந்து காணப்படும் மெல்லிய சவ்வுப் படலம் இதயப்பையாகும். இதயப் பையின் இந்த இரட்டை மடிப்பு உள் மடிப்பு (viseral) இதயப்பையில் நீர்கோத்தல் 153 என்றும், வெளிமடிப்பு (parietal) என்றும் அழைக்கப் படும். இயல்பாக, சவ்வுப் படலங்களுக்கிடையே 50 மி.லி.க்குக் குறைந்த அளவில் ஒருவகை நீர் காணப்படு கிறது. வெளிமடிப்பின் கீழ்ப்பகுதியில் வலி நரம்புகள் காணப்படுகின்றன. மேற்குறித்த நீர், இதயம் சுருங்கி விரியும்போது இரு மடிப்புகளுக்கிடையே உராய்வைக் குறைத்து இதயம் முறையாக இயங்கப் பயன்படுகி றது. இந்த நீரே மிகுதியாக இருப்பின், அதனை இத யப்பையில் நீர்கோத்தல் (pericardial effusion) என்பர். இதயப்பையில் (இதயத்தைச் சூழ்ந்துள்ள சவ்வுப் படலத்தில்) நோய் ஏற்படும்போதும் உண் டாகும் விளைவுகளை, உடனே உண்டாகும் விளைவு தொடர் விளைவு என இரு வகையாகப் பிரிக்கலாம். இதயப்பையில் நீர்கோத்தலுக்குக் காரணங்கள். பாக்ட்டீரியா நுண்ணுயிரிக் கிருமிகள், காசநோய்க் கிருமிகள், வைரஸ் கிருமிகள், காளான் கிருமிகள் மற்றும் பல இணைப்புத் திசு நோய்கள்; உப்புச் சத்தின் அளவு மிகுதல் (ureamia); புற்றுநோய் இதயப்பையைத் தாக்குதல்; தைராய்டு சுரப்பி அளவுக்கும் குறைவாகச் சுரத்தல்; அய்ரலசின், பினைல் பியூட்டசோன் போன்ற மருந்துகளை உட் கொள்ளுதல் போன்றவையாகும். இயல்பாக 50 மி.லிக்கும் குறைவான அளவே யுள்ள நிலை மாறி 150 மி.லி. முதல் 1000 மி.லி. அளவில் வரை நீர்கோத்துக் கொள்ளும். மிகுந்த நீர்கோத்துக் கொள்வதால் மார்புவலி, மூச்சுத் திணறல், மயக்கம், உணவுக் குழாய் நசுக்கப்படுவ தால் உணவு செல்லும் போது துன்பம், இதயம் சரிவரச் சுருங்கி விரிய வாய்ப்பற்ற நிலை ஆகியன தோன்றும். ஆய்வுத் தகவல்கள் பொது நோக்கு. நோயாளி, முன்புறம் குனிந்து காணப்படுவார். இடப்புறமார்பு வீக்கமுற்று,இதயத் துடிப்பை உணர முடியாமல் இருக்கும். கழுத்திலுள்ள சிரைகளின் அழுத்தம் கூடுதலாகவும், மூச்சு உள்ளே வழுக்கையில் சிரைகள் புடைத்தும் காணப்படும். இந்நிலை குஷ்மால் குறி (Kussmal's sign) எனப் படும். தொட்டுப் பார்த்தல். இதயத் துடிப்பை உணர முடியாது. கல்வீரல் வீங்கி நாடித் துடிப்பு சீரற்றுக் (paradoxical pulse) காணப்படும். தட்டிப் பார்த்தல். இதயத்தின் பரிமாணம் வலப் பக்கங்களில் கூடுதலாக உணரப்படும். கேட்டல். இதயத் துடிப்பு சரிவரக் கேட்காது. சில நேரம் இரு சவ்வுப் படலங்களும் உராயும் ஓசை உணரப்படும். ஆய்வுகள். மார்பு எக்ஸ் கதிர் படத்தில் இதயம் மிகுதியான பரப்பை அடைத்துக் கொண்