பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதயம்‌ 155

(ventricle) எனவும் அழைக்கப்படுகின்றன. இவை ஈரி தழ் மூவிதழ் வால்வுகள் மூலமாகத் தொடர்பு கொண் டுள்ளன. இதயத்தின் வல இடப்புறப் பாகங்களுக்குள் நடுப்புறச் சுவரிடையே தொடர்பில்லை. ஆனால் கருப்பையில் குழந்தையின் இதயத்தில் வளரும் இரு மேலறைகளுக்கிடையே ஒவேல் துளை காணப் படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இத்துளை மறைந்து விடுகிறது. வலப்பக்க இதயத்தில் சிரை இரத்தமும், இடப் பக்கத்தில் தமனி இரத்தமும் காணப்படும். இதயத்தின் உட்செல்லும், வெளிவரும் நாளங்கள். உடல் மேற்பெருஞ்சிரைகள், கீழ்ப்பெருஞ்சிரைகள் உடலின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் சிரை இரத்தத்தைச் சேகரித்து, இதயத்தின். வல மேலறைக் குள் செலுத்துகின்றன. இதயச் சுவர்களிலிருந்து இரத்தம் சிரை நாளமான கரோனரி சைனஸ் மூலம் வல மேலறையை அடைகிறது. நுரையீரல்களிலிருந்து இதயத்திற்கு வரும் தூய் மையான தமனி இரத்தத்தை நான்கு நுரையீரல் சிரை கள் இ மேலறைக்குள் செலுத்துகின்றன. நுரையீர 'லுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனி வலக் கீழறையிலிருந்து தொடங்குகிறது. இதைப் போலவே உடல் முழுதும்தமனி இரத்தம் பெருந்தமனி மூலம் இடக் கீழறையிலிருந்து வெளிவந்து உடல் முழுதும் செல்கிறது. இட மேலறையை இடக் கீழறையிலிருந்து பிரிக்கும் வால்வு இரு நாக்குகள் அல்லது இதழ்களைக் கொண்டது. அதனால்தான் இது ஈரிதழ் வால்வு என்று அழைக்கப்படுகிறது. வல மேலறையிலிருந்து வலக்கீழறைக்குள் திறக்கும் வால்வு மூன்று இதழ் களைக் கொண்டது. இதற்கு மூவிதழ் வால்வு என்று பெயர். இவ்வால்வுகள் பிறை வடிவில் காணப்படு கின்றன. மேலும் இவ்வால்வுகள் எண்டோகார்டிய மடிப்புக்களேயாகும். இதயத்தினுள் காணப்படும் கார்டே டென்டினே (chordae tendineae) எனப்படும் தசை நாண்கள் பாபில்லரித் தசை (papillary muscle) செல்கின்ற இவ் களிலிருந்து இவ்வால்வுகள் வரை வால்வுகளின் அமைப்பு மாறுபாடுகள், சில நோய் கள் ஏற்படும்பொழுது இதயப்பணியில் கோளாறு கள் ஏற்படக் காரணமாகின்றன. இது போலவே வல் வெண்டிரிக்கிளில் திறக்கும் நுரையீரல் தமனி வாயிலிலும் இட வெண்டிரிக்கிளில் திறக்கும் தமனி வாயிலிலும் பிறைவடிவ வால்வுகள் உள்ளன. இவை வெண்டிரிக்கிள் அறைகள் சுருங்கும் போது திறந்து இரத்தம் தமனிகளில் செல்ல வழிதரும். மேலறை களான ஏட்ரியங்கள் சுருங்கும் போது இவை மூடிக் கொள்ளும். இதய நாளங்கள். இரத்தம் எவ்வாறு உடலின் மற்ற பாகங்களின் வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையோ அவ்வாறே இதயத்திற்கும் தேவைப்படு கிறது. இதற்கெனச் சிறப்பு நாளங்கள் பெருந்தமனி யிலிருந்து வல இடக் கரோனரித் தமனியாக இதயத் இதயம் 155 திற்குள் பாய்கின்றன. தமனிகள் பல கிளைகளாகப் பிரிந்து தந்துகிகளாக மாறுகின்றன. இவை மூலமே இதயம் வேலை செய்வதற்கான ஆற்றலைப் பெறு கிறது. பிறகு கழிவுப் பொருள்களைச் சிரை இரத்தத் தந்துக்களிலிருந்து இதயச் சிரைகள் பெற்றுக் கரோ னரிச் சைனஸ் எனப்படும் சிரை நாளம் மேலறையை அடைகிறது. இதயத்திற்கான இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்போது மாரடைப்பு என்று சொல்லப் படும் மையோகார்டியச் சிதைவு ஏற்படுகிறது. மருத்துவர்கள் இதய நோய்களை அறிய அதன் சரியான இருப்பிடத்தை மார்புக் கூட்டின் வெளியே அதன் விளிம்புகளைக் கொண்டு அறிய வேண்டி யுள்ளது. இதயத்தின் கீழ்ப்பகுதி ஐந்தாவது விலா இடைவெளியில் மார்பு மைய எலும்புத் தட்டிலிருந்து 8-9 செ.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. இதயத் தின் மேல் விளிம்பு மூன்றாவது விலாக் குருத்தெலும் புகளின் மேற்புறத்தை ஒட்டி உள்ளது. வல விளிம்பு மார்பின் மைய எலும்புக்கு வலப் புறத்தில் 1 -2 செ.மீ. தொலைவில் மூன்றாவது ஐந்தாவது விலா எலும்பு மட்டத்தில் அமைந்துள்ளது. இட விளிம்பு இதயக் கீழ்ப்பகுதியிலிருந்து மூன்றாவது இட விலாக் குருத்தெலும்பு வரை குறுக்காக அமைந்துள்ளது. இவ்விளிம்புகள் சில நோய்களில் விரிவடைவதை மார்பைத் தட்டிப் பார்ப்பதன் மூலமும், எக்ஸ் கதிர்படம் எடுப்பதன் மூலமும் அறிய முடியும். இதயப் பணி. நான்கு அறைகள் கொண்ட இதயம் குறிப்பிட்ட திசையில் மட்டுமே இரத்தம் பாயுமாறு பணி புரிகிறது. இதற்கு அங்குள்ள வால்வு பயன்படு கின்றது. இரத்தம் சிரைகளிலிருந்து மேலறைக்கும் கீழறைக்கும் பாய்கிறது. மேலறை சுருங்கும்போது கீழறைகளுக்கிடையே உள்ள வால்வுகள் திறக்கின்றன. அப்பொழுது இரத் தம் கீழறைக்குப் பாய்கின்றது. கீழறை ஒரே சமயத் தில் சுருங்கும்போது இரத்தம பெருந்தமனிக்குள்ளும் நுரையீரல் தமனிக்குள்ளும் பாய்கிறது. இந்நிலையில் மேலறை ஓய்வு நிலையில் உள்ளது. பின்னர் மேல், கீழ் அறைகளும் ஓய்வு நிலையில் காணப்படும். இதைப் பொது இடைவேளை என்று கூறலாம். இந் நிலையில் இரத்தம் மேலறையை அடைகிறது. இதயச் சுழற்சியை இடைவிடாமல் சரிவர நடத்த மேலறையில் சில சிறப்புச் செல்கள் காணப்படுகின் றன. இவை சைனோ ஏட்ரியல் கணு எனப்படும். இந்தக்கணுவிலிருந்து இதயத் தசை முழுதும் தூண் டுதல் உணர்வு, அலை அலையாக அனுப்பப்படுகிறது. இக்கணுவில் குறிப்பிட்ட நேரத்திற்கொருமுறை தானாகவே தூண்டுதல் ஏற்படுவது இதயத் தசைக்கு மட்டுமே உள்ள தனித்தன்மையாகும். சு.நரேந்திரன்,