158 இதயம், விலங்குகள்
158 இதயம்,விலங்குகள் இதயம், விலங்குகள் உடல் இதயம் உடலுறுப்புக்களுக்கு இரத்தத்தை முறை யாக அனுப்பும் இன்றியமையாத உறுப்பாகச் செயல்படுகிறது. இரத்தத்தை மூளைக்கும் ஏனைய உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்ல இதயம் செயல்படுவதால்தான் உதவுகிறது. இது சீராகச் உறுப்புகள் தேவையான ஆக்சிஜனைப் பெறுகின்றன. விலங்குகளால் இதய இயக்கம் சீர்குலையும்போது உயிர்வாழ இயலாது. வளைதசைப் புழுக்களில் தொடங்கிப் பாலூட்டிகள் வரை விலங்கினங்களின் தய அமைப்பும், அவை செயல்படும் முறையும் வேறுபடுகின்றன. சில விலங்குத் தொகுதிகளில் இரத் தக் குழாய்களின் சுவர், தசைப்படலங்களுடன் சுருங்கி விரியும் தன்மை பெற்றுள்ளது. அதனால் இரத்தம் இரத்தக் குழாய்களில் முன்னோக்கியோ, பின்னோக் கியோ செலுத்தப்படுகிறது. விலங்குகளின் இதயம், நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சுருங்கி விரியும் இரத்தக் குழாய்கள், குழாய் இதயம், அறைகளுடைய இதயம். துணை இதயங்கள் என்பன. சுருங்கி விரியும் இரத்தக் குழாய்கள். இத்தகைய இரத்தக் குழாய்கள் மண்புழுக்களில் காணப்படுகின் றன. இரத்தக் குழாய்கள் சுருங்கி விரிவதால் இரத்தக் குழாய்களில் இரத்தம் அலை அலையாகச் செல்லும். மண்புழுவில் உணவுப் பாதைக்கு மேற்புறத்தில் காணப்படும் மேல் இரத்தக் குழாய் சுருங்கி விரியும் போது இரத்தம் முன்னோக்கிச் செலுத்தப்படுகிறது. மேல் இரத்தக் குழாய்கள் இரு பக்கங்களிலும் சுருங்கி விரியும் தன்மையுடைய மருங்குக் குழாய்கள் உள்ளன. இவற்றில் இரத்தம் மேலிருந்து கீழாகச் செல்கிறது. மருங்குக் குழாய்கள், கீழ் இரத்தக் குழாயில் சேர் கின்றன. இது சுருங்கி விரிவதால் இரத்தம் பின் னோக்கிச் செலுத்தப்படுகிறது. அட்டை, அரேனி கோலா (arenicola) ஆகியவற்றிலும் சுருங்கி விரியும் இரத்தக் குழாய்கள் காணப்படுகின்றன. குழாய் இதயம். இத்தகைய இதயம் கணுக்கால் களில் காணப்படுகிறது. இவற்றின் உடற்குழியின் மேற்பகுதியில் காணப்படும் சுருங்கி விரியும் தன்மை யுடைய பெரிய இரத்தக் குழாய், இதயமாகச் செயல் படுகிறது. இதைச் சுற்றிக் குருதி உடற்குழி அமைந் துள்ளது. இதயத்துக்கும் குருதி உடற்குழிக்கும் இடை யில் மெல்லிய தய உறை காணப்படுகிறது. இதயக் குழாய் முன்புறம் சிறிய குழாய்களாகப் பிரிந்து குருதி உடற்குழியுடன் இணைகின்றது. இதயம் மெல் லிய தசைகளால் உட்புறத்தில் உடலின் மேல்சுவரு டன் இணைக்கப்பட்டுள்ளதால், தசைகளின் இயக்கத் தால் இரத்தம் இதயத்தினுள் செலுத்தப்படுகிறது. தசைகள் சுருங்கும்போது இதயம் விரிவதால் இரத் தம் குருதி உடற்குழியிலிருந்து இதயத்துக்குள் செல் கிறது. பின்பு இதயம் சுருங்குவதால் இரத்தம் முன் னோக்கிச் செலுத்தப்படுகிறது. குழாய் இதயத்தில் இரத்தம் எப்பொழுதும் முன்னோக்கியே செல்கிறது. த அறைகளுடைய இதயம். மெல்லுடலிகளிலும், முது கெலும்பிகளிலும் காணப்படும் இது தசையாலாகிய ஓர் உறுப்பு; சுருங்கி விரியும் தன்மையுடையது. யத்தைச் சுற்றி இதய உறை காணப்படுகிறது. இதயம் சுருங்குவதால் தமனிகளின் வழியாக இரத்தம் உடல் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. உடல் உறுப்புகளிலிருந்து சிரைகளின் வழியாக இதயத்து குக் கொண்டு வரப்படும் இரத்தம் இதயம் விரியும் போது இதயத்துள் செல்கிறது. சில மெல்லுடலிகளில் முன்பின்னாக அமைந்த இரு அறைகளுள்ள இதயம் உள்ளது. உயர் விலங்குகளின் இதயத்தில் மேலறையும் (auricle) கீழறையும் (ventricle) உள்ளன. இரத்த ஓட்டத்தின்போது இதய மேலறை உடல் உறுப்புகளி லிருந்து சிரைகளின் வழியாகச் சிரை இரத்தத்தைப் பெற்றுக்கொள்கிறது. அதனால் மேலறையில் பொது வாக இரத்த அழுத்தம் குறைவாகவே இருக்கிறது. கீழறையிலிருந்து தமனி இரத்தம் தமனிகளின் வழி யாக உடல் உறுப்புகளுக்கு அனுப்பப்படுகிறது. இரத்தத்தைத் தமனிகளில் செலுத்தக் கீழறை சுருங்கி விரிய வேண்டியிருப்பதால், இதன் சுவர்கள் தடித்துக் காணப்படுகின்றன. இருவாழ்விகள், ஊர்வன ஆகிய வற்றின் இதயங்களில் மூன்று அறைகளும்,பறவை கள் பாலூட்டிகளில் நான்கு அறைகளும் உள்ளன. இதயம் சுருங்கி விரிவதால் இரத்தம் இரத்தக் குழாய் களில் துள்ளிப் பாய்ந்து செல்கிறது. துணை இதயங்கள். சில விலங்குகளில் துணை இதயங்கள் காணப்படுகின்றன. கணவாய் மீன்களில் செவுள்களின் அடிப்பகுதியில் சுருங்கி விரியும் தன்மை யுள்ள செவுள் இதயங்கள் (branchial hearts) உள் ளன. இவை செவுள்களுக்குள் இரத்தத்தைச் செலுத்து கின்றன. ஆம்ஃபியாக்சசில் (amphioxus) செவுள் நோக்கு இரத்தக் குழாய்களின் (afferent branchial vessels)தொடக்கத்தில் குமிழ்போன்ற துணை இதயங் கள் (ampullar hearts) காணப்படுகின்றன. இயக்கவழி வகைப்பாடு. தூண்டுதல் மையத்தால் தூண்டப்பட்டு இயங்கும் இதயம் தானாக இயங்கக் கூடியதால் மூளை இயங்குவதில்லை. செல்களின் கூட்டமைப்பினால் உருவான சைனு ஆர்க்குலர் முகிழ்ப்பு (sino auricular node என்னும் இதயத் தூண்டுதல் மையம் (pace maker) இதயத்தை இயக்கு கிறது. விலங்குகளின் இதயங்கள் செயல்பாட்டின் அடிப்படையில் தசைகளைத் தூண்டிதயம் (myoge - nic heart) நரம்புகளைத் தூண்டிதயம் (neurogenic heart) என்ற இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. தசைத் தூண்டிதயம். மெல்லுடலிகளிலும் முது கெலும்பிகளிலும் இவ்வகை இதயம் காணப்படு