166 இதய மாற்றம்
166 இதய மாற்றம் யேற்றிய பிறகு இதயம் நின்றுவிடும். நுரையீரல், நுரையீரல் சிரை, நுரையீரல் தமனி, பெருந்தமனி, ஆகிய இணைப்புகள் அகற்றப்பட்ட பிறகு இதயம் மட்டும் 4° C குளிர் நிலையில் உப்பு நீரில் மூழ்க வைக்கப்பட்டுக் காக்கப்படும். அகற்றப்பட்ட இத யத்தின் இட, வல இதய மேல் அறைகள் மாற்று இதயம் பொருத்துவதற்கு ஏற்றவாறு வெட்டிச் சீர் செய்யப்பட்டு 4°C குளிர்நிலை உப்புநீர் கொண்ட ஒரு பிளாஸ்ட்டிக் பையில் வைக்கப்படும். இப்பை பிறிதொரு பிளாஸ்ட்டிக் பையில் இதே அளவு குளிர் நிலை வசதிகொண்ட உப்பு நீருக்கிடையே வைக்கப் படும். இப்பை குளிர் கடினப் பெட்டியினுள்ளும் பனிக்கட்டிகளுக்கிடையேயும் பொதியப்பெறும். இவ் வாறு பாதுகாக்கப்பட்ட இதயம் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்படும். மாற்று இதயம் பொருத்துதல். முதலில் மார்புக் கூட்டின் நடு எலும்பை விலக்கித் திறப்பர். பெருஞ் சிரைகளில் குழாய்களைப் பொருத்துவர். பிறகு இன்னாமினேட் தமனி உள்ள இடத்துக்கு அருகில் பெருந்தமனியில் குழாயைப் பொருத்துவர். இக் குழாய்கள் செயற்கை இதய எந்திரத்துடன் இணைக் கப்படுகின்றன. நுரையீரல் தமனி மூடப்பட்டு, பெருந்தமனியும் இடுக்கியால் குறுக்காக மூடப்படு கிறது. இதய மேல் அறைகள் வெட்டப்பட்டு யம் அகற்றப்படுகிறது. சு அகற்றப்பட்ட இடத்தில் மாற்று இதயம் வைக்கப் படும். இட மேல் அறையை 3.0 பாலிபுரோஃபை லின் இழைமத்தினால் முழுதுமாகப் பொருத்துவர். தொடர்ந்து பல மேல் அறையும் பொருத்தப்படு கிறது. நுரையிரல் தமனி ஒன்றோடொன்று நேரடி யாக இணைக்கப்பட்ட பின்னர் பெருந்தமனி 4-0 பாலிபுரோஃபைலினா பொருத்துவர். இதய அறைகளிலிருந்து காற்று வெளியேற்றப்பட்டு, பெருந் தமனியிலுள்ள இடுக்கி அகற்றப்பட்டவுடன் இதயச் சுழற்சி தொடங்குகிறது. சுமார் நான்கு மணி நேரம் இரத்த ஓட்டமற்ற நிலையில் இதயம் ஓய்ந்திருந்தமை காரணமாக இதயக் கீழறையில் துடிப்பு மிகும். இதனை எதிர்மின் அதிர் வலைகள் மூலம் சரிசெய்வர். கால்சியம் குளோரைடு, டிஜிட்டாலிஸ் எபிநெஃப்ரின் போன்ற மருந்துகள் தொடக்கத்தில் உதவும். மாற்று இதயம் பொருத்தப்பட்ட பின் நோயாளியைப் பேணுதல். சைக்ளோஸ்போரின் (4மி.கி/கி) மருந்தை மாற்று அறுவை பொருத்தும் சிகிச்சைக்கு முன் வாய்வழியே கொடுப்பர். சிறுநீரகப பழுதுள்ள நோயாளிக்கு மட்டும் அளவைக் குறைத்து அனுமதிப் பர். அறுவை முடிந்த நிலையில் இதே சைக்ளோஸ் ஃபோரின் மருந்தைச் சிரை வழியாகத் (2-4 மி.கி/கி/ நாள்) தொடர்ந்து - நோயாளி வாய் வழியே நீர் அருந்தும் நிலை ஏற்படும் வரை செலுத்துவர். சீரத் தில், சைக்ளோஸ்ஃபோரின் அளவு 200-400 மி.கி இருக்குமாறு இம்மருந்தை வழங்குவர். மிரைப் பிரிடினிஷோலன் மருந்து சிரை வழியே 0.5 கி இதய அறுவையின் போது வழங்கப்படும். தொடர்ச்சியாக 125 மி.கி. /8 மணி எனும் அளவில் 24 மணி நேரத் திற்குக் கொடுக்கப்படும். ஒவ்வொரு நாளும் மருந் தின் அளவு சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு 60 நாள்கள் வரை வழங்குவர். அடுத்த இரண்டு மாதத் திற்கு 30 மி.கி./நாள்; 20 மி.கி./நாள்; எனும் அளவில் 120 நாள்களுக்கும் வழங்குவர். இந்நோயாளிகளைத் தனித்து இருக்கச் செய்ய வேண்டியதில்லை. கடும் இதயச் சிகிச்சைப் பிரிவில் 隊