பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதய மின்னலை வரைவி 167

ஒன்று முதல் மூன்று நாள்கள் மட்டும் இருக்கச் செய்ய வேண்டும். மாற்று அறுவைப் பிரிவில் 2 முதல் 3 வாரங்கள் சிகிச்சை பெற்ற பின்னர் மருத்துவ மனையிலிருந்து அனுப்பப்படுவர். தொற்றுகள் பற்றாதிருக்க அடிக்கடி ஆய்வுக்குள்ளாக்கப்பட வேண்டும். நோய் எதிர் உயிர் மருந்து சிபோடர்க் சிமிசோடியம் 2கி/6 மணிக்கொரு முறை அறுவை தொடங்கி மார்பிலிருந்து வடிகுழாய்கள் அகற்றப் படும் வரை வழங்கப்படும். திசு ஆய்வு மூலம் பொருத்தப்பட்ட மாற்று இதயம் ஏற்கப்பட்டுள்ளதா என்பது உணரப்படும். இவ்வாய்வு தொடர்ந்து ஆண்டுதோறும் செய்யப் படும். வல இட இதயத்தினுள் குழாயினைச் செலுத்தி இரத்தக் குழாய்ப்படம் வாயிலாக மாற்று இதயம் ஏற்கப்பட்ட தன்மை உணரப்படும். பின்னர் சைக் ளோஸ்ஃபோரின், ஸ்ட்டீராய்டு, ஆன்ட்டிஹீமோ லைட்டிக் குளோபுலின் போன்ற மருந்துகள் 14 நாள் கள் வரை கொடுக்கப்படும். இதுகாறும், மாற்று இதயம் பொருத்தப்பட்ட 337 பேர்களில் 334 பேர் உயிர் வாழ்ந்துள்ளனர். 1984 இல் 80 விழுக் காட்டினர் 7 ஆண்டுகளும், 75 விழுக்காட்டினர் இரு ஆண்டுகளும் உயிர் வாழ்ந்தனர். இதயத்தை ஏற்காத நிலை, தொற்று, இதயம் இயல்புக்கும் குறைவாக இயங்கும் நிலை, துடிப்பு மாறுபாடு, மூளைப் பாதிப்பு, புற்று, ஏனைய உறுப்புகளில் நேரும் கேடுகள் போன்றவற்றின் காரணமாகவே இவர்கள் உயிரிழந்துள்ளனர். சு.நரேந்திரன் இதய மின்னலை வரைவி 167 இம்மின்னழுத்த அலைகள் இதயத்திலிருந்து உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவுகின்றன. இதயத்தின் அறைகள் சுருங்குதல், விரிவடைதல், இதய இதழ்கள் திறத்தல், மூடுதல் ஆகிய செய்கை களும், இதய மின்னழுத்த மாற்றங்களும் ஒன்றுக் கொன்று தொடர்புடன் இருக்கும். இதய மின்ன ழுத்தம் மார்புத்தசையின் வெளிப்பகுதியிலும் அளவு குறைந்து தென்படும். இதயத் தசை உண்டாக்கும் மின்னழுத்த அலைகளின் காலப் பதிவு, இதய மின்னலைப் பதிவு (electrocaridiogram) என்பதாகும். ஒரு சராசரி மனிதனின் இதய மின்னலைப் பதிவு, படம் - 1 இல் காட்டப்பட்டுள்ளது. படத்தில் P,Q,R,S மற்றும் அலைகள் இதயத் தசைக் கூட்டத் தின் செல்களின் (cells) மின்துருவ மாற்றங்களையும் இதய மேலறைகளும், இதயக் கீழறைகளும் சுருங்குதல், விரிவடைதல் போன்ற போன்ற நிகழ்ச்சிகளையும் குறிக் கின்றன. மின்னழுத்தம் இதய மின்னலை வரைவி இதயத்தின் மின் இயக்க நிலையைக் கண்டறிய இதய மின்னலை வரைவி (electro cardiograph) பயன் படுத்தப்படுகின்றது. இக்கருவி இதய மின் இயக்க நிலையை வரைபடமாக வரைந்து காட்டுகிறது. இதய நோய் மருத்துவத் துறையில் இக்கருவி மிகுதி பயன்படுத்தப்படுகின்றது. யாகப் இதய மின் அழுத்த அலைகள். உடல் கூ இயலில் இதயம் ஓர் இரட்டைப் பம்பு (dual pump) எனக் கருதப்படுகின்றது. இதயம் சார்ந்த இரத்த நாளப்பகுதி (cardiovascular system) முழுமைக்கும் இதயம் தேவையான இரத்தத்தை உந்தித் தள்ளிக் கொண்டே இருக்கின்றது. இச் செயல் இதய மேல் றைகள் (atrias) விரிவடைவதாலும், இதயக் கீழறை கள் (ventricles) சுருங்குவதாலும் நடைபெறுகின்றது. இதயத்தசைப் பகுதிகள் மின் அழுத்தத்தை உண்டாக் குவதால் இதயத்தின் அறைகளில் விரிவடைதலும், சுருங்குதலும் நடை பெறுகின்றன. 0.4 காலம் படம் 1. 0.6 ஓநொடி இதய நோய்களின் நிலையை அறிய (diagnosis ) இதய மின்னலைப் பதிவு, பெரிதும் பயன்படுத்தப் படுகின்றது. இதய மின்னலைப் பதிவிலிருந்து, இதயத் துடிப்பு வீதத்தை அறியலாம். இது ஒரு நிமிடத்திற்கு 60-100 வரை இருக்கும். பொதுவாக இதய மின்னலைகளின் கால அளவு, துருவ மாற்றங் கள் அலையின் அளவு (amplitude) ஆகியவற்றையே சிறப்பாகக் கண்டு, நோயின் நிலையை அறியலாம். இதய மின்னலை வடிவ மாற்றங்களைக் கொண்டு, நோய் பற்றிய தகவல்களை இக்கருவி மூலம் பெற இயலுமென்றாலும், இதயத்தின் வால்வுகள் சீராக இயங்காத குறைபாடுகளை முழு மையாக, இக்கருவி மூலம் அறிந்துகொள்ள இயலாது. அதற்கு வேறு கருவிகள் கையாளப்படுகின்றன. இதய மின்னலை வரைவியின் வரலாறு. முதன் முதலில் இதய மின்னலை வரைவிகள் 1910-ஆம் ஆண்டு முதல் மருத்துவமனைகளில் பயன்படுத்தப் பட்டன. 1903-ஆம் ஆண்டில் இந்தோவன் (Eintho- Van) என்ற அறிவியல் அறிஞர் தொங்கும் நாடா