பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதய வால்வு நோய்கள்‌ 171

இதயத்தொலி முணுமுணுப்பும் இருக்கும். நுனி இதய இடக்கீழறை விரிவடைவதால் பக்கம் தள்ளப்படுகிறது. இதய இடப் நோய் ஆய்வு. தய மின் வரைபடமும், எக்ஸ் கதிர் படமும்,இடமேலறை, கீழறை விரிவைக்காட் டும். இதய எதிரொலி வரைபபுமும், இதயக்கத்தீட் டர் ஆய்வும் ஈரிதழ் வால்வு அமைப்பையும், நோயின் கடுமையையும் காட்டும். மருத்துவம். வால்வுநோய் மிகுந்திருந்தால் மாற் றீடு செய்யலாம். மேலும் ஈரிதழ்வால்வு இறுக்கத் திற்கான மருத்துவம் போன்றும் செய்யலாம். பெருந்தமனி வால்வுக் குறுக்கம். சில நோயாளிக் குப் பிறவியிலேயே பெருந்தமனியில் இரு இதழ்கள் (cusps) மட்டும் காணப்படும். இதழ்களில் வாத நோய் வரலாம்; தமனி வால்வுக்கடியில் இடைத்திரை (sub valvular diaphragm) இருக்கலாம். இதய இரத்த வெளியேற்றம் கூடுமானால் பெருந்தமனி வால்வு இறுக்கம் ஏற்படும். இடக்கீழறை விரிவடைந்து நார்த்தசைகள் காணப்படும். கூடவே கூழ்மைக்காடு (atheroma) நோயிருந்தால் இதயத் தமனியில் செல்லும் இரத்தம் குறையும். மேலும் பெருந்தமனி வால்வு எதிர்க்களித் தலும் இருக்கலாம். அறிகுறிகள். இதயம் வெளியேற்றும் இரத்த அளவு குறைவதால் மயக்கம், மார்பு நெறிப்பு (ang- ina), இதய இலயமின்மை (arrythmia) ஆகியவை வரும். இதயக் கீழறை வழுவால், வேலை செய்யும் போதும் இரவில் தூங்கும் போதும் மூச்சுத் திண றல் வரலாம். நோய் மிகுந்து நோயாளி இறக்கவும் கூடும். இதயச்சித்தொலிக முணுமுணுப்புக் கேட்கும். அது சிரசுத்தமனிக்கும் கடத்தப்படும். இதயச்சித் தொலிக வெட்டு அதற்குமுன் கேட்கும். வால்வு களில் சுண்ணாம்புச்சத்து படிந்திருந்தால் சுருக்கி வெட்டுக்கேட்காது. இதயக் கீழறை விரிவடைவதால், இதயத்தில் கைவைத்துப் பார்க்கும்போது இதய நுனி விரலைத் தள்ளும். இதயக்கீழறை விரிவடைந் திருப்பதால் நான்காவது இதய ஒலிகேட்கும். நாடித் துடிப்பு, குறைந்த கொள்ளளவு உள்ளதாகத் தோன் றும். நோய் ஆய்வு. எக்ஸ் கதிர் படத்தால் சுண்ணாம்புச் சத்துப் படிந்திருத்தலை அறியலாம். இதய மின்வரை படம்,இடமேலறை, கீழறை விரிவடைந்ததைக் காட் டும். இதய எதிரொலி வரைபடத்தில் பெருந்தமனி வால்வின் ஒழுங்கின்மையை அறியலாம். இதயக் கத்தீட்டர் ஆய்வு மூலம் இதய இரத்த வெளியேற்றத் அறியலாம். தையும், இதயத்தமனி நிலையையும் மருத்துவம். செயற்கைக் கட்டுறுப்பு வால்வைப் (prosthetic valve) பயன்படுத்தி, இதய நுரையீரல் இதய வால்வு நோய்கள் 171 குறுக்குவழி (cardioprlmonary bypass) மூலம் இரத் தத்தைச் செலுத்திப் பழுதுபட்ட வால்வை அகற்றி விடலாம். பிறவிக்குறைபாடு உள்ள வால்வை, வால்வு வெட்டுச் சிகிச்சை மூலம் நலமாக்கலாம். பெருந்தமனி எதிர்க்களித்தல். பிறவியிலேயே பெருந்தமனி வால்வில் இரு இதழ்கள் மட்டுமிருந் தால், வாதநோயினால் சிதிலமடைந்தால், இதய உள்ளறை நுண்ணுயிர் நோய் வந்தால், பெருந்தமனி யின் முதற் பகுதி விரிவடைந்திருந்தால், கிரந்திப் பால்வினை நோயின் மூன்றாம் நிலை, மார்ஃபான் இணைப்போக்கு, கூழ்மைககரடு நோய் முதலியன இருந்தால் பெருந்தமனி எதிர்க்களித்தல் வரலாம். பெருந்தமனி எதிர்க்களிக்கும் இரத்தம் மிகுந் திருந்தால் இடக்கீழறை வீழ்தாக்கு வெளியேற்றம் இரட்டிப்பாகலாம். இதனால் பெரிய தமனிகள் துடிப் பது நன்கு தெரியும். இதய இடமேல், கீழறைகள் விரிவடைந்து காணப்படும். நுரையீரல் தமனி இரத்த அழுத்தம் கூடும். எனவே மூச்சுத் திணறல் ஏற்படும். அறிகுறிகள். நோயாளி தன் இதயத்துடிப்பை, குறிப்பாக இடப்புறம் படுக்கும்போது நன்கு உணர் வான்; இரவில் உறக்கத்திலிருந்து விழித்ததாகக் கூறு வான்; காலில் நீர்க்கோவையிருக்கும். மேலும். கூழ் மைக் காடு நோயிருந்தாலோ கிரந்திப் பால்வினை நோய் இதயத் தமனியைத் தாக்கியிருந்தாலோ மார்பு நெறிப்பு நோய் வரலாம். நடுமார்பெலும்பின் இடப்புறம் இதயவிரிவு முணுமுணுப்புக் கேட்கலாம். கிரந்தி நோயில் வலப் புறம் நன்கு கேட்கும். சிலவேளை அதிர்வு இருக்கும். இதயம் வெளியேற்றும் இரத்த அளவு மிகுவதால் சித்தொலிக முணுமுணுப்பும் கேட்கலாம் ; பெரிய தமனிகள் துடிப்பதும் பித்தவாத நாடி மிகு நாடி அழுத்தமும், வெளித்தள்ளும், நுனித்துடிப்பும், முன் சித்தொலிக முணுமுணுப்பும் நான்காவது இதய ஒலியும், இட மேலறை இயல்புமீறிய வளர்ச்சியைக் காட்டும். நோய் ஆய்வு இதய மின்வரைபடத்தில் இட மேலறை இயல்பு மீறிய வளர்ச்சி தெரியும். இதய எதிரொலி வரைபடத்தில் ஈரிதழ் வால்வு இதழ்கள் துடிப்பதைக் காணலாம். இதயக் கத்தீட்டர் ஆய்வும், பெருந்தமனி வரைபடமும் நோயின் கடுமையைக் காட்டும். மருத்துவம். இதய நுரையீரல் குறுக்குவழி மூலம் வால்வு மாற்றீடு செய்யலாம். மூவிதழ் வால்வுக் குறுக்கம். வாதநேரய் முதலில் ஈரிதழ் வால்வையும் பின்னர் மூவிதழ் வால்வையும் தாக்கும். சிலவேளை இதைப் பெருந்தமனி வால்வு நோய்கள் மற்றும் புற்றனைய நோய்கள் ஆகியவற் றுடன் இணைந்து காணலாம்.