பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 இதள்‌ ஆவி விளக்கு

174 இதள் ஆவி விளக்கு ய ஏற்படுகிறது. 2. ஆற்றல் போதிய அளவு இருப்பின் எதிர்ப்படும் அணுவிலிருந்து ஓர் எலெக்ட்ரான் தன் இயல்பான வட்டணையைவிட்டு வேறு ஒரு வட்ட ணைக்கு இடப்பெயர்ச்சி அடைகிறது. எதிர்ப்பட்ட அணுவின் இந்நிலையைக் கிளர்வுற்றநிலை என்பர். இப்புதிய வட்டணையிலிருந்து மீண்டும் இயல்பான வட்டணையை அடையும்போது ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தில் கதிர்வீச்சு ஏற்படுகிறது. 3. இயக்க ஆற்றல் மேலும் மிகுதியாக இருப்பின். மோதலுறும் அணு அடுத்த கட்டக் கிளர்வு நிலைகளை அடையும். இடப்பெயர்ச்சியுறும் எலெக்ட்ரான் இவ்வாறு சில குறிப்பிட்ட வட்டணைகளை மட்டுமே அடைய இய லும். இடைப்பட்ட நிலைகளில் இருக்க இயலாது. இதனால், ஒரு குறிப்பிட்ட வட்டணையிலிருந்து கீழுள்ள மற்றொரு வட்டணைக்குத் திரும்பும் போது, ஒரு குறிப்பிட்ட அலை நீளமுள்ள கதிர்வீச்சு ஏற்படுகிறது. முதல்கட்டக் கிளர்வு நிலையிலிருந்து தலை நிலைக்குத் திரும்பும்போது ஏற்படும் கதிர் வீச்சை ஒத்திசைக் கதிர்வீச்சு என்பர்.ஓர் அணு வின்பிணைப்பை விட்டு முற்றிலுமாக எலெக்ட்ரான் வெளியேறிவிடும் போது நேர்மின் அயனியாக ஆகிறது. இந்த அளவுக்குத் தேவையான ஆற்றலை மின்னணு அயனியாக்க ஆற்றல் என்பர். இதள் ஆவியில் மின்னிறக்கம். இதன் அணுவின் வட்டணைகளில் 80 எலெக்ட்ரான்கள் உள்ளன. வெளி வட்டணையில் இரண்டு இணைதிறன் எலெக்ட் ரான்கள் உள்ளன. இவை இடப்பெயர்ச்சியுறும் போது பல்வேறு கிளர்வுநிலைகள் (ஆற்றல் மட்டங் கள்) ஏற்படுகின்றன. ஒரு கிளர்வு நிலைக்கு மிகவும் நெருக்கமாக இரண்டு அல்லது மூன்று நிலைகள்கூட இருப்பதால், நிறமாலையை ஆய்வு செய்யும்போது இரண்டு அல்லது மூன்று பட்டைகள் தோன்று கின்றன. இதள் ஆவியின் ஆற்றல் மட்டங்கள் பின் வருமாறு உள்ளன. ஆற்றலின் அளவு எலெக்ட்ரான் வோல்ட்டிலும், கதிர்வீச்சின் அலைநீளம் ஆங்ஸ்ட் ராம் அலகிலும் அளக்கப்படுகின்றன. (அ) முதல் கட்டக் கிளர்வுநியிைல் 4.66, 4.86 மற்றும் 5.43 எ.வோ. (ev) என மூன்று ஆற்றல் மட்டங்கள் உள. (ஆ) 7.7 எ.வோ மட்டம். (இ) ஒற்றைக்கீற்றுத்தரும் 8.8 எ.வோ மட்டம் (ஈ) முக்கீற்றளிக்கும் 8.8 எ.வோ மட்டம். (உ) மின்னணுவாகிவிடும் 10.38 எ.வோ மட் டம். ஓர் ஆற்றல் மட்டத்திலிருந்து பிற மட்டங்களில் விழும்போது ஏற்படும் கதிர்வீச்சின் அலைநீளமும், நிறமும் படத்தில் குறிக்கப்பட்டுள்ளன. வோலட் 10:38 8.8- 7-7- 6.67- 5.43- 4-86- 4.66 1850 Å 5791 4* (7) ஆ) 5770A 5790A (FF) 2537A ஒத்திசைக் கதிர்வீச்சு 5461A 4358A 4047A மஞ்சள் (உ) படம் 2. இதள் ஆவியின் கிளர்வு நிலைகள் (A) 5791, 5770, 5790 Å (ஆ) 5461 A - பச்சை (இ) 4358 A - நீலம் (ஈ) 4047 A - ஊதா (உ) 1850 A 2537 A படாத் தொடரில்). புற ஊதா (புலப் பச்சை நிறத்தைக் கண் நன்கு உணர்ந்து கொள் வதால், 5461 Å அலகில் வெளிப்படும் கதிர்வீச்சு முதன்மையானதாகும். மாறுநிலை மட்டங்கள். இதள் ஆவியின் ஆற்றல் மட்டங்களில் இரு மாறுநிலை மட்டங்கள் உள்ளன. உயர்ந்த ஆற்றல் மட்டத்திலிருந்து இம் மட்டத்தில் எலெக்ட்ரான் விழுந்தால், உடனடியாகத் தரைமட் டத்தை அடையாமல், இம்மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்கின்றது.மற்றுமொரு மோதல் ஏற்பட்டு, கூடுதல் ஆற்றலைப் பெற்று, திரும்பவும் உயர் மட்டத்தை அடையும்வரை இம்மாறுநிலை மட்டத்திலேயே நீடிக் கின்றது. இதல் ஆவியின் 5.43.எ.வோ. மற்றும் 4.66 GT. வோ. மட்டங்கள் இவ்வகை மாறு நிலை மட்டங்களாகும். 7.70 GT. Gour. மட்டத்