இதள் ஆவி விளக்கு 175
திலிருந்து 5.3 எ. வோ. மட்டத்தில் விழும்போது 5461 A அலகில் பச்சை நிறக் கதிர்வீச்சு உண்டா கிறது; 4.66 எ. வோ. மட்டத்தில் விழுந்தால் 4047 A அலகில் ஊதா நிறக் கதிர்வீச்சு உண்டாகிறது. இவையிரண்டும் புலப்படும் தொடரில் உள்ளமை யால் 100 விழுக்காடு பயனுள்ள ஆற்றல் மாற்றம் நிகழ்கிறது. பச்சைநிறக் கதிர்வீச்சின் ஆற்றல் (7.70 -5.43) 2.27 எ.வோ. ஆகும்; ஊதாநிறக் கதிர் வீச்சின் ஆற்றல் (7.70-4.66) 3.04 எ.வோ. ஆகும். இவ்வாறு ஊதாவின் ஆற்றல், பச்சையின் ஆற்றலை விட மிகுதியாக இருப்பினும் பச்சை நிறமே பார் வைக்கு உகந்ததாக, உயர்ந்த சார்பு ஒளிர்திறன் கொண்டதாக இருப்பதால், ஒளி வெளிப்பாட்டில் பச்சைநிறக் கதிர்வீச்சின் பங்கே முதன்மையாக உள்ளது. = மின்னணுவாதலைக் கட்டுப்படுத்தல். போதிய ஆற் றலுடன் ஓர் எலெக்ட்ரான் எதிர்ப்படும் பொது நிலை அணுவுடன் கடுமையாக மோதும் போது, அவ்வணுவில் உள்ள இணைதிறன் எலெக்ட்ரான் அவ்வணுவிலிருந்து முற்றிலுமாகப் பிரிக்கப்பட்டு விடுகிறது. எலெக்ட்ரானை இழந்த அணு நேர்மின் அயனியாக மாறிவிடுகிறது. தற்போது தற்போது மோதிய எலெக்ட்ரான், பிரிக்கப்பட்ட எலெக்ட்ரான், எலெக்ட்ரானை இழந்த நேர்மின் அயனி என்ற மூன்று மின்னூட்டத் துகள்கள் உள்ளன. ஒரே ஒரு மின்னூட்டத்துகளும், ஒரு பொதுநிலை அணு வும் இருந்த இடத்தில், மோதலுக்குப் பின் மூன்று மின்னூட்டத்துகள்கள் உண்டாவதால் பாதையின் கடத்தம் பெருமளவில் உயர்கிறது. 1 மின்னிலைச் சரிமானம் + படம் 3. மின்னணுவாதல் இவ்விரு கட்டிலா எலெக்ட்ரான்களும் போதிய ஆற்றலுடன், எதிர்ப்படும் இரு நடுநிலை அணுக் களுடன் மோதும்போது, மேலும் இரு கட்டிலா எலெக்ட்ரான்களும், இரு நேர்மின் அயனிகளும் தோன்றுகின்றன. தற்போது மொத்தம் ஏழு மின் னூட்டத்துகள்கள் இருக்கின்றன. ஆனால், இந் நிகழ்ச்சி தொடர்ந்து கட்டுப்பாடின்றி நடைபெறின், மின்னிறக்கப்பாதையின் கடத்தம் மிகவும் உயர்ந்து, ஒரு குறுக்கிணைவுப் பாதையாக மாறி, மிகை மின் னோட்டத்தினால் அக்கலமே அழிவுற்றுவிடும். இதள் ஆவி விளக்கு 175 எனவே, மின்னணுவாதலைக் கட்டுப்படுத்த வேண் டிய தேவை எழுகிறது. எலெக்ட்ரான்களின் ஆற்றல், இருமுனைகளுக் கிடையேயுள்ள மின்னிலை வேறுபாட்டைப் பொறுத்தே இருப்பதால், இம்மின்னிலையைக் கட் டுப்படுத்துவதன் மூலம், மின்னணுவாதலைக் கட்டுப் படுத்தலாம். ஓர் அடைச்சுருளை மின்னிலைப்பிரியா கப் பாயன்படுத்தலாம். -Ve. Vi Vi படம் 4. மின்னோட்டம் கட்டுப்படுத்தல் மின்னோட்டம் மிகும்போது, அடைச்சுருளில் ஏற்படும் மின்னிலைத் தாழ்வும் மிகுதியாகும். இத னால் விளக்குக்குக் கிடைக்கும் மின்னிலை குறைவ தால், மின்னோட்டமும் குறைந்துவிடுகிறது. மின்னோட்டம் குறைந்தால், அடைச்சுருளில் ஏற்படும் மின்னிலைத் தாழ்வும் குறைந்து விளக்கிற் கிடைக்கும் மின்னிலை உயர்ந்து, மின்னோட்ட மும் உயர்கிறது. இவ்வாறு மின்னோட்டம் அடைச் கருளால் தானாகவே கட்டுப்படுத்தப்படுகிறது. நேர் மின்னோட்டத்தைப் பயன்படுத்தும்போது ஒரு தடை யமே இத்தகைய மின்னிலைப்பியாகச் செயல்புரி கிறது. ஆனால் தடையத்தில் திறனிழப்பு ஏற்படுவ தால், மாறுமின்னோட்டத்தைப் பயன்படுத்தும் போது, அடைச்சுருளே மின்னிலைப்பியாகப் பயன் படுத்தப்படுகிறது. தொடக்க மற்றும் இயக்கநிலைகள். இதள் ஆவி யின் அழுத்தம் மிகக் குறைவாக இருக்கும்போது இவ் விளக்கு எரியத் தொடங்கிய உடனேயே இயக்க நிலை அடைந்துவிடுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட வளிமண்டல அழுத்தத்தில் இருப்பின், இவ்விளக்கு ஒரு நேர்மின்னோடியைப் போல் செயல் புரிகிறது. எரியத் தொடங்கும்போது மின்போக்கின் பின்மின் னிலை குறைவாகவும், தொடங்கும் மின்னோட்டம் மிகுதியாகவும் இருக்கும். அடைச்சுருளினால் நிலைப்பு நிலைக்கேற்ப மின்னோட்டம் குறைக்கப்படுவதால். அடைச்சுருளில் மின்னிலைத் தாழ்வு குறைந்து, விளக் குக்குப் போதிய மின்னிலை உயர்வு கிடைக்கிறது. உள் தருகை மின்னிலையை Vi என்றும், விளக்கு மின்னிலையை V) என்றும், அடைச்சுருள் மின்னி