இதள் ஆவி விளக்கு 177
பூச்சுப் பூசிய இழை - நேர்முளைத்தட்டு கண்ணாடிச் சிமிழ் முனைகள் படம் 6. தாழ் அழுத்த இதள் ஆவி விளக்கு கையின் வழியே வெளிக் கொணரப்பட்டுப் புற இணைப்பிற்கான இருதளைகளாக முடிகின்றன. மின்னிணைப்பும், செயற்பாடும். இதள் ஆவி விளக் கின் புற மின்னிணைப்புகள் படத்தில் உள்ளவாறு செய்யப்படுகின்றன. மின்னோட்டமுனை -மின் வழங்கல் தலைமை இணைப்பு மாற்றி நடுமுனை C', அடைச்சுருள் €2 H விளக்கு 0 அ Δ Đ இ さか படம் 7. தாழ் அழுத்தஇதள் ஆவி விளக்கு - சுற்றுவழி விளக்கின் இழைகட்கு இடையில் ஒரு தொடக்கி இணைக்கப்படுகிறது. சுடர்க் குழல் ஒன்றே இங்கு தொடக்கியாகச் செயல்புரிகிறது. சுடர்க்குழலின் மின்முனைகள் இரு உலோகப் பட்டைகளால் ஆனவை குளிர் நிலையில் இப்பட்டைகள் பிரிந்து நின்றும், வெப்பநிலையில் வளைந்து ஒன்றை யொன்று தொடுமாறும் உள்ளன. மின்வழங்கல் அளிக்கப்பட்டதும், பிரிந்துள்ள பட்டைகளுக்கு முழு மின்னிலையும் கிட்டுகிறது. அ.க.4-12 இதன் ஆவி விளக்கு 177 எனவே, சுடர்க்குழல் எரிவதால் பட்டைகள் சூடாக் கப்படுகின்றன. சூட கும்போது ஒரு பட்டை வளைந்து மற்றதைத் தொட்டு விடுகிறது. தொடர் நிலைச் சுற்றுவழியில் உள்ள இதள் ஆவி விளக்கின் இழைகட்குத் தற்போது முன் சூடாக்கத் தேவையான மின்னோட்டம் கிடைக்கிறது. இதனால் இழைகளி லிருந்து கட்டிலா எலெக்ட்ரான்கள் உமிழப்படுகின் றன. இருப்பினும் மின்னிறக்கம் ஏற்படுமளவுக்குப் போதிய மின்னிலை இராது. இவ்வேளையில் சுடர்க்குழலின பட்டைகள் தொட்டுக் கொள்வதால் மின்னிலையை இழந்து, சுடர்தல் நின்று, பட்டைகள் குளிர்ந்து, பிரிந்து விடு கின்றன. இதனால் மின்னோட்டம் தடைப்படுகிறது. சுற்றுவழியில் தூண்டல் மிகுந்த அடைச்சுருள் இருப்பதால் மின்னோட்டம் தடைப்பட்டதும் 1000 வோல்ட்டு அளவுக்கு மின்னிலை தூண்டப்படுகிறது. முன்பே விளக்கினுள் எலெக்ட்ரான்கள் உமிழப் பட்டு, மின்னிறக்கம் ஏற்பட ஆயத்தமாக இருப்ப தால் இந்த உயர் மின்னழுத்தம் விளக்கின் மின் முனைகளுக்கிடையேயுள்ள நீண்ட இடைவெளியை உடைத்து மின்னிறக்கத்தை ஏற்படுத்துகிறது. இத னால் விளக்கு உடனடியாக ஒளிரத் தொடங்கு கிறது. குறைந்த அளவு இதன் ஆவியே பயன்படுத் தப்படுவதால், இயக்கநிலையை விரைவில் அடைந்து, சீரான ஒளியை அளிக்கிறது. அடைச்சுருளின் தூண்டலையும் அதனால் திறன் கூறு குறைவதையும் ஈடுசெய்ய மின்வழங்கலின் குறுக்காக ஒரு கொண்மி இணைக்கப்பட்டுள்ளது. விளக்கினை மேற்கண்டவாறு ஒரு சுடர்க்குழல் மூலம் தொடங்கச் சிறிது காலமாகிறது. இதைத் தவிர்க்கச் சுடர்க்குழல் தொடக்கிக்குப் பதிலாக ஒரு மின்மாற்றியைப் பயன்படுத்தி உடனடியாகச் சுடர் வதைத் தொடக்கலாம். உயர் அழுத்த இதன் ஆவி விளக்கு. இதள் ஆவி யின் அழுத்தம் உயர்த்தப்படும்போது, ஒரு குறிப் பிட்ட பருமன் அளவுக்குக் கிடைக்கும் ஆற்றலும், எலெக்ட்ரான்கள் மோதிக்கொள்ளும் வன்மையும் மிகுதியாகின்றன. எனவே. பெரும்பான்மையான எலெக்ட்ரான்கள் உயர்மட்டங்களிலுள்ள பலகிளர்வு நிலைகளை அடைகின்றன. மேலும் அணுக்களைவிட மூலக்கூறுகளின் எண்ணிக்கை மிகுதியாக இருப்பதால், ஒளிக்கீற்றுக்குப் பதிலாக ஒளிப்பட்டை தோன்று கிறது. ஆவியின் அழுத்தம் உயர்த்தப்படும்போது. ஒளிப்பட்டைகளுக்கிடையே உள்ள இடைவெளியும் நிரப்பப்பட்டு விடுகிறது. இதனால் அகலமான, தொடர்ச்சியான ஒளிப்பட்டை கிடைக்கிறது. மிகுந்த ஆற்றலுக்கேற்ப மிகுதியாக ஒளிர்வும் கிடைக்கிறது. இருப்பினும், தரவு மின்னிலையால் இந்த அளவு ஆற் றலுடன் ஒரு நீண்ட மின்வில்லைப் பராமரிக்க இய