180 இந்திய அரசு அளக்கையியல் துறை
180 இந்திய அரசு அளக்கையியல் துறை னுக்குச்சிறப்பிடம் உண்டு. ஏனெனில் அவர் அனைத்து நாட்டையும் அளக்கும் பொறுப்பை ஏற்றார். முக் கோண முறை அளக்கையியல் என்பது மூன்று பிரிவு களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டு முக்கோணங்கள் அமைப்ப தற்கு அடிமானக் கோடுகள் அளக்கப்படுகின் றன. பின்னர் அவை நுட்பமாக அளக்கப்படு கின்றன. இரண்டாவதாக, நிலக்கோள மேற்பரப்பி லிருந்து சில தேர்ந்தெடுக்கப்பட்ட புள்ளிகளிலிருந்து முக்கோணங்கள் வரையப்படுகின்றன. மூன்றாவதாக அவை அகலாங்கு, நெட்டாங்கு ஆகியவற்றால் சரி பார்க்கப்படுகின்றன. முக்கோண அளவியல், நில வரையியல், புவிப்புற அளக்கையியல் ஆகியவற்றில் இவர் திறமைவாய்ந்தவராகக் காணப்பட்டார். இந்தியாவின் நில அளவைப் படத்தை புவிப்புற அளக்கை மூலம் (geodetic science) அமைப்பதற்கு லாமப்டென் மிகவும் முயற்சி செய்தார். இதற்கு அர சின் முழு ஒத்துழைப்பும் பாராட்டுதலும் அவருக்குக் கிடைத்தன. அரசின் ஊக்கம் காரணமாக மேலும் அளக்கையியலில் ஈடுபட்டு, எத்திசையிலும், எவ் வளவு தொலைவும் அளக்கும் திறனுடையவராகத் திகழ்ந்தார். 1800 ஆம் ஆண்டு சென்னையில் முதன்முதலில் முக்கோணமுறை அள்க்கை நடத்தப்பட்டது. பின் னர் லாம்ப்டென் மைசூரில் வேலையைத் தொடங்கி னார். பின்னர் பதினெட்டு மாதங்களில் மைசூரின் அடிப்படை வரைபடத்தை முக்கோணங்கள் மூலம் ஏற்படுத்தினார். நிலங்களை அளப்பதற்கு எஃகினால் செய்யப்பட்ட 33மீ. நீளமுள்ள சங்கிலிகளைப் பயன் படுத்தினார். மேலும் அனைத்துநோக்கி, தொலை நோக்கி, வெப்பமானி போன்றவற்றையும் பயன்ப படுத் தினார். முக்கோண முறை அளக்கையியலில் முதன் சென்னைப் பரங்கிமலை அருகில் முக் மையாகச் கோணங்களுக்கு அடிமானக்கோடு வரைந்தார். இவ் வாறு 1815 ஆம் ஆண்டில் தென்பகுதிகளுக்கு ஒரு பொதுவான நிலப்படத்தை ஏற்படுத்தினார். லாம்ப் டென்னின் முயற்சி இந்திய முந்நீரகத்தை(penninsula) அளப்பது தவிர, அதிலுள்ள முக்கிய இடங்களையும் குறிப்பதேயாகும். தொடர்ந்து முறையாகப் பணி புரிந்ததால் அவர் புவி அளக்கையியலில் ஒரு நிலை யான இடத்தைப் பெற்றார். புவியியலின் லாம்ப் டென் படைப்புகளில் நெடுவரைவில்லின் (meridianal arc) அளவுகள் குறிப்பிடத்தக்கவை. லாம்ப்டெனுக்கு இரு தொழில்நுட்பப் பணியாளர்கள் இருந்தனர். அவர் வடக்கில் உள்ள பெரர் என்னும் இடம் வரை யில் தம் பணியைச் செய்தார். பினனர் 1823 ஆம் ஆண்டு நாக்பூருக்குச் செல்லும் வழியில் காலமானார். 1815 ஆம் ஆண்டு மேக்கென்சி இந்தியாவின் பொ து அளக்கையர் ஆனார். லாம்ப்டெனின் பணி யைச் சென்னை மாநிலம் எடுத்துக் கொண்டாலும், அது கட்டுக்கடங்காமல் போகவே 1818 ஆம் ஆண் டில் அரசு அந்தப்பணியை இந்தியாவின் அரிய முக் கோண முறை அளக்கையியல் (the great trignome- trical survey of India) என்ற பெயரில் தன் முழு பொறுப்பில் ஏற்றுக் கொண்டது. சென்னை மாநிலத் தின் பொது அளக்கையராக மெக்கென்சி பொறுப் பேற்று இரு ஆண்டுகள் செம்மையாகப் பணியாற்றி னார். பின்னர் வில்லியம் ஸ்காட் ஹென்றி ஹாமில்ட் டன், மார்செல்லஸ் பர்க்கே ஆகிய பணியாளர்களு டன் வடக்கிலுள்ள அரசுப்பகுதிகளை அளந்தார். 1824 ஆம் ஆண்டு இந்த அளக்கையில் ராஜ முந்திரி அளக்கையியல் என்ற பெயர்பெற்று முழுமை யான தகவல்களுடன் முடிவுற்றது. 1822 ஆம் ஆண்டில் இந்தியாவின் நிலப்படநூல் வெளியிட முடிவெடுக்கப்பட்டது. ஜான் அந்தோனி ஹாட்சன், கார்வால் ஆகியோர் சார் உச்சியை (chur peak) மைய நிலையமாகக் கொண்டு இமயமலையை அளந் தனர். 1817 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வில்லி யம் ஸ்பென்சர் வெப் என்பவர் குமௌன் மலைக் ளைத் Kumaon hills) தம் சொந்த முயற்சியில் அளந்து 1812 ஆம் ஆண்டில் அப்பணியை முடித் தார். பிரம்மபுத்திரா நதியின் அளக்கையியலும் இவ் வேளையில் நடந்தது. ஹாட்சன் 1821 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொது அளக்கையர் என்ற பதவியை வகித்தார். வருவாய்ப் பொது அளக்கையர் என்ற பதவியிலும் 1823 ஆம் ஆண்டு முதல் 1826 ஆம் ஆண்டு வரை பொது அளக்கையராகவும் பணியாற் றிய வேலண்டைன் பிளாக்கர் மத்திய இந்தியாவின் முதன்மையான நிலப்படங்களை ஏற்படுத்தினார். ஜேமஸ் சதர்லேண்ட் 1810 ஆம் ஆண்டில் தக்கா ணத்தை அளந்தார்.தாமஸ், ஜெர்விஸ் சுய முயற்சி யில் தென்கொங்கன் வட்டாரத்தை அளந்தார்.1824 ஆம் ஆண்டில் ஜார்ஜ் எவரெஸ்ட் அரிய முக்கோண வளைவை, நர்மதா (sirnoj) முதல் சிர்நோஜ் வரை அளந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இங்கிலாந்திற்குச் சென்று ஆறு ஆண்டுகளுக் குப்பின மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பினார். 1830 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா வின் பொது அளக்கையராகவும், முக்கோண முறை அளக்கையியல் கண்காணிப்பாளராகவும் அமர்த்தப் பட்டு, பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். தம் பணியில் மிகுந்த ஈடுபாட்டுடனும், ஆர்வத்துட னும் விளங்கினார். ஆண்ட்ரூ ஸ்காட் வாக் என்ப இருந்து பின்னர் வர் இவருக்கு உதவியாளராக 1843- ஆம் ஆண்டில் பொது அளக்கையராகப் பதவி ஏற்றார். எவரெஸ்ட் தம் செயல்முறைத் திட்டத்திற் காக இரு குழுக்களை அமைததார். பிடார் இலிருந்து இமயமலையில் உள்ள பனாகு வரையுள்ள 870 மைல் தூரத்தை (அகலாங்கு 17° 55' முதல் 30° 29' வரை ) இவ்விரு குழுக்களும் அளந்தன. ஆண்ட்ரூ வாக் பெரிய வளைவு முதல் கல்கத்தா வரையில் முக் கோண முறை அளக்கையால் நுட்பமாக அளந்