182 இந்திய அருவிகள்
182 இந்திய அருவிகள் கழகத்தில், நிலஇயல், உலோகவியல், சுரங்கவியல் வல்லுநர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். முதலில் இக் கழகத்தின் ஒரு பிரிவாகச் சுரங்க ஆய்வுத் துறை ஒன்று தொடங்கப்பட்டுப் பின்பு அது சுரங்கவியல் துறையாக மாற்றப்பட்டது. தற்பொழுது இக்கழகம் தன் ஆய்வுப் பணி கொண்டு பலவித உலோக, உலோகமற்ற கனிமங் களைக் கண்டுபிடித்த வண்ணம் செயல்படுகிறது. இதன் தலையாய தொழில், இந்தியப் புவியியல் தேசப்படம் தயாரிப்பதாகும். அப்படமே தாதுப் பொருள் உள்ள இடங்களை ஆராய்வதற்குப் பயன் படும். இதன் தலைமை அலுவலகம் கல்கத்தாவில் இருக்கிறது. அங்கு பொருட்காட்சிச் சாலையும் சோதனைச் சாலையும் உள்ளன. அங்கு புவியியல், தேசப் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் துறையின் ஆராய்ச்சி அலுவலாளர்கள் நாடெங்கும் சென்று கனிமங்கள், நீர் உள்ள கீழ்ப்பகுதிகள் முத லியவை குறித்துத் தேடிப் பார்க்கிறார்கள். ஆராய்ச் சிச் சிறு நூல்களும், இந்தியத் தாதுப் பொருள்கள் என்னும் காலாண்டு இதழும் வெளியிடப்படுகின்றன. இந்திய அருவிகள் சு.ச. காணப் இந்தியத் துணைக் கண்டத்தில் மேற்கு மலைத் தொடர் வளாகத்தில் நிறைய அருவிகள் பட்டாலும் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய அளவிற்கு உயரமும், வீழ்ச்சியும் கொண்ட அருவி காணப் படுவது இல்லை. இங்கு காணப்படும் எல்லா அருவி களும் 6 மீட்டர் முதல் 9 மீட்டர் வரை செங்குத்து உயரம் கொண்டவை. இவ்வருவிகள் பெரும்பாலும் மேற்கு நோக்கி ஓடும் ஆற்றின் வழியில் தோன்று பவை. இருந்த போதும், மைசூரில் உள்ள ஜோக் அருவி (Jog fals) ஷராவதி (Sharavati) ஆற்றின் குறுக்கே தோன்றியது. இங்கு நான்கு பெரிய அருவி கள் உள்ளன. அவை இராஜா (Raja) இராக்கேட் (Rocket) உரோரர் (Roarer) டாம்பி பாலான்ஜி{ Dame Balanche) இந்நான்கு அருவிகளும் ஒரு வளைந்த மலைத் தொடரில், 255 மீட்டர் செங்குத்து உயரம் வீழ்ச்சியுடன் காணப்படுகின்றன. 67 607 LIGT. இந்தியாவில் முதன் முதலாக அருவிகளின் நீர் விழுதலைப் பயன்படுத்தி நீர் மின்சாரம் தயாரிக்கக் காவேரி ஆற்றின் வழியே தோன்றியுள்ள சிவசமுத் திரம் அருவியைத் (Sivasamudram falls ) தேர்ந்தெடுத் தனர். இவ்வருவியின் செங்குத்து உயரம் 90 மீட்டர். இதில் பல தொடர் அடுக்கு அருவிகள் (Cascades ) காணப்படுகின்றன. இதேபோல் தமிழ் நாட்டில் நீல கிரியில் (Nilgiris) காணப்படும் பைகாரா. (Fykara) அருவியின் போக்கில் பல தொடர் அடுக்கு அருவிகள் காணப்படுவதால், இதையும் மினசாரம் தயா ரிக்கப் பயன்படுத்துகின்றனர். கர்நாடக மாநிலத்தில் பெல்காம் (Belgaum) அருகில் உள்ள கோகாக் ஆற் றில் உள்ள கோலிக் அருவி (Gokak falls ) 54 மீட்டர் செங்குத்து உயரமுடையது. மகாபலேஷ்லரில் (Mahabaleshwar) காணப்படும் என்னா (Yenna ) அருவி 180 மீட்டர் செங்குத்து வீழ்ச்சி உயர முடையது. பல விந்தியன் மேட்டு நில வளாகத்தில் ( Vindhyan Plateau தமாசா (Tamasa) என்ற அழகான தொடர் அருவிகள் காணப்படுகின்றன. இவ்வருவி வளாகத்தில் பிகார் (Behar) அருவி வெள்ளக் காலத் தில் 180 மீட்டர் பரப்பளவும், 110 மீட்டர் செங் குத்து வீழ்ச்சி உயரமும் கொண்டு காணப்படுகிறது. சம்பல் (Chambal) ஆற்றின் குறுக்கே கோட்டாவிற்கு (Kotah) மேல் பலவகைத் தொடர் அடுக்கு அருவிகள் காணப்படுகின்றன. இவற்றில் பெரிய அருவி 18மீட் டர் செங்குத்து உயரம் கொண்டு காணப்படுகின்றது. சோன் ( Sonc) பிட்வா (Betwa) ஆறுகள் விந்தியின் மணற்பாறையைக் (Vindhyan sand stone) கடக்கும் இடத்தில் பலவகையான தொடர் அடுக்கு அருவிகள் காணப்படுகின்றன. ஜபல்பூருக்கு (Jabalpur) அருகே சலவைக்கல் பாறையில் (Marblerock) தந்துரா அருவி (Dhuandhara falls) 9 மீட்டர் செங்குத்து வீழ்ச்சி உய ரம் கொண்டதாக இருந்தாலும் கண்ணுக்கு இனிய காட்சி கொண்டு காணப்படுகிறது. இதேபோல் மந்த (Mandhar) புனசா (Punasa) என்ற அருவிகள் 12 மீட்டர் செங்குத்து வீழ்ச்சி உயரம் கொண்டு காணப்படுகின்றன. ரெய்ச்சூருக்கு (Raichur) அருகில் இச்சம்பட் (Echampet) என்ற இடத்தில் கிருஷ்ணா ஆற்றுக்குக் குறுக்கே கிரானைட்டு பாறை வளாகத் தில் தோன்றியுள்ள தொடர் அடுக்கு அருவி வீழ்ச்சி யின்போது பெரிய மேகங்கப் பரப்புப்போன்றுகாட்சி அளிக்கிறது. இந்தியாவில் கோவாவில் தூத்தாகர் என்ற அரு வியின் நீர்விழ்ச்சியைப் பயன்படுத்தி நீர்மின் சக்தி தயாரிக்கப்படுகிறது. வடக்கு கோவாவில் செப்பரா ஆற்றின் (Chappra river) குறுக்கே ஊடுருவிய பாறை வளாகத்தில் தோன்றியுள்ள அரவலம் (Aravalam falls) என்ற அருவியின் வீழ்ச்சியைப் பயன்படுத்தி நீர்மின் சக்தி தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தாமிரபரணியின் துணை ஆறான சிற்றாற்றின் குறுக்கே தோன்றியுள்ள அருவி குற்றா லம் அருவி. இங்கு பலவகையான தொடர் அடுக்குச் செங்குத்தருவிகள் காணப்படுகின்றன. இவற்றின் சிகரமாகத் தேவருவிமிக உயரத்திலிருந்து விழுகின்றது. மணிமுத்தாற்றில் பாபநாசம் அருவி யுள்ளது. பெரியார் ஆற்றின் குறுக்கே குப்பக்கரை என்ற இடத்தில் ஓர் அருவி காணப்படுகிறது. வைகை