184 இந்திய அறிஞர்கள், கடலியல்
184 இந்திய அறிஞர்கள், கடலியல் களையும் கடற்பாசி வகைகளையும் மன்னார் வளைகுடா, கட்ச் வளைகுடாப் பகுதிகளிலும், கேரளக் கடற்கரையோரங்களிலும், பெருமள வில் குஞ்சுப் பருவம் முதல் வளர்ச்சியுற்ற பருவம் வரை வளர்த்துக் காட்டிப் பெரும்பயன் ஈட்டும் தொழிலாக, எத்தனையோ மீனவக் குடும்பங்களைக் காக்கும் தொழிலாக அமைத்துக் காட்டியுள்ளனர். இவ்வல்லுநர்கள். இதன் மூலம், கடலிலிருந்து கிடைக் கும் உணவுப் பொருள்களின் அளவைப் பெருமளவில் அதிகரிக்க இயலும். செயற்கை முத்து உற்பத்தி. சிப்பி வகைகளில் முத்துச் சிப்பிகளுக்கு உரிய தனிச்சிறப்பு அதன் முத்து உற்பத்திதான். கடலில் வாழும் முத்துச் சிப் பிகளின் தசைப் பகுதிக்குள் ஏதேனும் புதிய பொருள் புகுந்துவிட்டால், முத்துச் சிப்பிக்கு எரிச்சல் உண்டாகி, அது அந்தப் புதிய பொருளைச் சுற்றி ஒரு பளபளக்கும் திரவத்தைச் சுரக்கும். நாளடைவில் அந்தத் திரவம் சுரந்து, சுரந்து, பின் உறைந்து, முத் தாக ஆகின்றது. இயற்கையில் முத்து உற்பத்தியாவதும், அவ்வாறு முத்து உற்பத்தியான சிப்பிகளைக் கண்டு பிடித்து எடுப்பதும் மிகவும் கடினம். ஆகவே, மத் திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் தூத்துக்குடி யில் செயற்கை முத்து உற்பத்தியில் ஈடுபட்டு வரு கின்றது. தூத்துக்குடியின் அருகேயுள்ள வேப்ப லோடை என்னும் இடத்தில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தைச் சார்ந்த முனைவர் அழகிரி சாமி செயற்கை முத்து உற்பத்தியில் அரும்பெருஞ் சாதனைகளைச் செய்துள்ளார். 1973 ஜூலை 25 இல் முதல் செயற்கை முத்து இந்தியாவில் உருவாக் கப் பட்டது. முனைவர் அழகிரிசாமியின் கருத்துப் படி, இந்தியக் கடல்களில், குறிப்பாக மன்னார் வளைகுடாப் பகுதியில், முத்துச் சிப்பிகள் மிகுந்து காணப்படுவதாலும், கடலோரப் பகுதிகள் மிகுந்த ஆழமற்று இருப்பதாலும், செயற்கை முத்து உற்பத் தியில் இந்தியா தீவிர கவனம் செலுத்துமேயாயின் பெருமளவில் அந்நியச் செலாவணி ஈட்டலாம். இடருயிர்கள் மற்றும் துளைப்பான்கள் ஆராய்ச்சி. கடல் வாழ் உயிரினங்களில் சில இடருயிரியாகவும் (foulers) துளைப்பான்களாகவும் (borers) அமைந் துள்ளன. இத்தகு உயிரினங்கள் கப்பல், கட ல்களுக் கும், துறைமுகங்களில் உள்ள மரத்தூண்கள், படகுத் துறை முதலியவற்றில் உள்ள மரப்பொருள்களுக் கும் பெருஞ்சேதங்கள் விளைவிக்கின்றன. கணுக் காலி வகுப்பைச் சார்ந்த அலசிகள் (barnacles) எனும் உயிரினங்கள் குறிப்பிடத்தக்க ஒட்டிகளா கும். மெல்லுடலி வகுப்பைச் சார்ந்த டெரிடோ எனும் கப்பல் புழு (teredo), சில கணுக்காலி உயிரி னங்கள் குறிப்பிடத்தக்க துளைப்பான்களாகும். இன்றைய உலகில் போக்குவரத்துக்கும், பொருள் களை எடுத்துச் செல்வதற்கும் பெருமளவில் கப்பல் போக்குவரத்தை நம்பியுள்ள இந்த நாளில், இடருயி ரிகள், துளைப்பான்கள் பற்றிய ஆராய்ச்சி மிகவும் இன்றியமையாததாகும். இந்தியக் கடல்களில் இத்தகு ஆராய்ச்சியில் ஈடு பட்டு, பயன்தரும் ஆராய்ச்சி முடிவுகளைத் தந்த கடலியல் வல்லுநர்களில் தலையாயவர் மறைந்த பேராசிரியர் முனைவர் பி. என். கணபதி ஆவார். தற்போது இடருயிரிகள், துளைப்பான்களில் தீவிர ஆராய்ச்சி செய்து அவற்றை ஒழிப்பதற்கான வழிமுறைகளையும் வகுத்துத் தந்தவர் திருவனந்த புரம் கடலுயிரியல் நிலையத்தைச் சார்ந்த பேராசிரி யர், முனைவர் என். பாலகிருஷ்ணன் நாயர் ஆவார். பரங்கிப்பேட்டைக் கடலுயிரியல் நிலையத்தைச் சேர்ந்த முனைவர் பால்பாண்டியன், முனைவர் அந்தோணி ஃபெர்னாண்டோ, விலங்கியல் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் டானியல் போன்ற வர்களையும் முக்கியமாகக் குறிப்பிடலாம். கடல்வாழ் நுண்ணுயிர் ஆராய்ச்சி பரந்துகிடக்கும் பெருங்கடல்களில் எண்ணற்ற வகையான நுண்ணு யிரிகள் (microbes) வாழ்கின்றன. அவற்றில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள், தீமை பயக்கும் பாக்டீரி யாக்கள், மனிதனுக்கு இன்றியமையாத தேவையாக உள்ள மருந்துப் பொருள்கள் தயாரிக்கப் பெரிதும் பயன்படுகின்றன. அன்றியும் அவை கடலிலுள்ள உலோகத் தாதுப் பொருள்களத் தனித்தனியே பிரித் தெடுத்துத் தம்மிடத்தில் சேர்த்து வைக்கும் இயல்பு டையன வாகும். எடுத்துக்காட்டாக, தங்கத்தைப் பிரித்தெடுக்கும் பாக்டீரியா (gold-leaching bacteria) தங்கத்தை மட்டும் தனியே பிரித்தெடுக்கும் ஆற்றல் கொண்டது.தாமிரத்தைப் பிரித்தெடுக்கும்பாக்டீரியா (copperleaching bacteria) தாமிரத் தாதுவை மட்டும் கடல் நீரிலிருந்து தனியே பிரித்தெடுக்கும் இயல்பு கொண்டது. இத்தகு, பாக்டீரியாக்களை மேலும் தீவிரமாக ஆராய்வதன் மூலம், கடலில் கரைந்துள்ள உலோகத் தாதுக்களை எளிதில் பிரித்தெடுக்கலாம். கடலில் வாழும் நுண்ணுயிர் ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ள இந்தியக் கடலியல் வல்லுநர்களில் குறிப் பிடத்தக்கவர்கள் தேசியக் கடலியல் நிறுவனத்தைச் சார்ந்த முனைவர் டி. சந்திரமோகன், கடந்த மூன்று அண்டார்க்டிகா கடற்பயணங்களிலும் பங்கு கொண்ட ட திரு.பிரபு மட்டோண்ட்கார், முதலியோராவர். கடல் வேதியியல் வல்லுநர்கள். கடலில் கரைந் துள்ள எண்ணற்ற வேதியப் பொருள்கள், கழிவு நீர் மூலம் ஏற்படும் மாசடைதல் (pollution) போன் றவை கடல் நீரில் வாழும் உயிரினங்களை எந்த அளவுக்குப் பாதிக்கின்றன என்று தெரிந்து கொள்ளு தல் இன்றியமையாதது. இத்தகு வேதியியல் ஆராய்ச் சிகளில் ஈடுபட்டோர்களில் சிறப்புமிக்கவர்கள்