186 இந்திய அறிஞர்கள், கடலியல்
186 இந்திய அறிஞர்கள், கடலியல் பங்கை நன்கு அறிந்திட வேண்டும். கு கடல்களின் அதனை நன் ஆராய்ந்து அறிந்தால், ஆண்டு தோறும் வீசும் புயல்காற்றின் சீற்றத்தை மாற்றவோ குறைக்கவோ செய்யலாம். அன்றியும் ஆண்டுதோறும் புயல்காற்றுகளால் இந்தியாவில், குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், ஒரிசா,தமிழ்நாட்டுப் பகுதிகளின் கட லோரப் பகுதியில் வாழும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதையும், பல இலட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைவதையும் தடுக்கவோ குறைக் கவோ செய்யலாம். டெல்லியில் உள்ள இந்திய வானி லையியல் துறையின் இயக்குநர் முனைவர் பி.கே. தாஸ் பெருங்கடல்களில் பெரும்புயல் வீசும்போது உருவாகும் பேரலைகளின் வேகம், அவற்றின் தன்மை குறித்துத் தீவிர ஆராய்ச்சி செய்துள்ளார். கடல் வானிலையியலில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்க வல்லுநர் ஆந்திரப் பல்கலைக் கழ கத்தின் கடல்-வானிலையியல் துறைப் பேராசிரியர் கொட் முனைவர் ஐ. சுப்பராமையா ஆவார்.ஏ. டேஸ்வரன், பேராசிரியர் வி. ராமநாதன் ஆகியோ ரையும் இத்துறையின் சிறந்த ஆய்வாளர்களாகக் குறிப்பிடலாம். கடல் சூழ்நிலையியல் வல்லுநர்கள். கடலில் வாழும் கணக்கற்ற உயிரினங்களைப் பற்றியும், அவை வாழும் சூழ்நிலையைப் பற்றியும் இவையிரண்டுக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றியும் விளக்குவது தொகையின் கடல் சூழ்நிலையியல் ஆகும். மக்கள் மூலம் தொழிற்சாலைகளின் கழிவுப் பொருள்க ளால் கடலின் தூய்மையான சூழல் பாதிக்கப்படு தல்; இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு விளையும் தீங்கு, சதுப்பு நிலக்காடுகளின் சிறப்பை உணராமல் அவற்றை அழிப்பதன் மூலம் சதுப்பு நிலப்பகுதியில் வாழும் இலட்சக்கணக்கான கடல்மீன் குஞ்சுகளும், விலைமதிப்புள்ள இறால்மீன் குஞ்சுகளும் அடையும் இன்னல்; இதன் காரணமாக, கடலில் மீன் உற்பத்தி பாதிக்கப்படுதல் போன்ற செய்திகளைக் கடலின் சூழ்நிலையியல் வல்லுநர்க்கு நன்கு விளக்க முடியும். இத்தகு ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு நல்ல பல கருத் துக்களை அளித்தவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கடல் வாழ் உயிரியல் துறைப் பேராசிரி யர் முனைவர் கே.கிருஷ்ணமூர்த்தி ஆவார். அவர் தம் சிறப்பு மிக்க இந்த ஆய்வுப் பணிக்காகத் தேசிய விருதும் வழங்கப்பட்டுள்ளது. திருவனந்த புரத்தில் உள்ள கட கடல்நீர் உயிரியல் துறையின் இயக்கு நர் முனைவர் என். பாலகிருஷ்ண நாயர் ஆண்டுகளாக இந்தியக் கடலின் சூழ்நிலையியல் குறித்துத் தீவிர ஆய்வு செய்து வரும் வல்லுநர் ஆவார். பல் அண்டார்க்டிகா கடற்பயணங்கள். இந்திய அரசு, கடலியலின் சிறப்பை அறிந்து, அதற்கெனப் பெருங் கடல் மேம்பாட்டுத் துறை ஒன்றைப் புதுடெல்லியில் நிறுவிய பின், இந்தியக் கடலியல் பல வழிகளில் வளர்ச்சியடைந்து வருகின்றது. அவற்றுள் குறிப்பிடத் தக்கவை, மொத்தப்பரப்பில் 98 விழுக்காடு அளவு உறைந்த பனியால் மூடப்பட்டுக் காட்சியளிக்கும் தென் துருவப் பகுதியான அண்ட்டார்க்டிகா கண் டத்துக்கு இந்தியா மேற்கொண்டுவரும் கடல் ஆராய்ச்சிப் பயணங்கள்தாம். அண்டார்க்டிகா பயணங்களில் இந்தியா நாட் டங்கொள்ளச் சிறப்புக் காரணம், அண்டார்க்டிகா வின் புவியியல் அமைப்பு, இந்தியத் துணைக்கண்டத் தின் தட்ப வெப்ப நிலையைப் பெரிதும் பாதிப்பது தான். இக்காரணங்களுக்காக, அண்டார்க்டிகா கண்டத்தில், இந்தியக் கடலியல் வல்லுநர்கள் மூலம். கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி, நுண்ணு யிர் ஆராய்ச்சி, மண்ணியல் ஆராய்ச்சி, வானிலை ஆராய்ச்சி, உலோகத்தாதுக்கள் ஆராய்ச்சி முதலிய வற்றில் முழுக்கவனம் செலுத்தும் நோக்குடன், அண் டார்க்டிகா கடல் ஆராய்ச்சிப் பயணங்களை இந் தியா மேற்கொண்டுள்ளது. மேலும் இந்திய வல்லுநர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டி, அண்டார்க்டிகாவில், தக்க்ஷின் கங்கோத்ரி எனும் நிலையான ஆய்வு நிலையம் ஒன்றையும் அமைத் துள்ளது. 1982, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அண்டார்க்டிகா கடற்பயணங்கள், முதலாவதாக ஜனவரித் திங்கள் 9 ஆம் நாளன்று, பெருங்கடல் அபி லிருத்தித் துறை இயக்குநர் முனைவர் காஷிம் தலைமையிலும், இரண்டாவதாக 1-82-83 இல் திரு.வி.கே. ரெய்னா தலைமையிலும் மேற்கொள் ளப்பட்டன. இவ்விரண்டு பயணங்களும் அளித்த மாபெரும் வெற்றி முனைவர் ஹெச். கே. குப்தாவின் தலைமையில் அண்டார்க்டிகாவுக்கு மூன்றாம் கட ற் பயணம் 1983-84 இல் செல்ல வழி வகுத்தது.நான் காம் கடற்பயணம் பேராசிரியர் முனைவர் பட்டாச் சாரியர் தலைமையிலும் (1984-85) ஐந்தாவது பயணம் முனைவர் பரூலேகர் தலைமையிலும், ஆறா லது பயணம் முனைவர் சென்குப்தா தலைமையிலும் சென்றன. நில எண்ணெய் மற்றும் இயற்கை வளிம ஆணையத்தைச் சேர்ந்த முனைவர் மல்ஹோத்ரா, வி.கே.ராவ் போன்றவர்கள் இந்தியத் தொலைக் கடல் நில எண்ணெய்த் தோட்டத்தில் பெரிதும் பங் கேற்றனர். இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் பி.வி, இந்திரேசன், முனைவர் வி.எஸ். ராசு, முனைவர் கணபதி ஆகியோர் முயற்சியில் பெருங்கடல் பொறியியல் துறை மலர்ச்சியுற்றுப் பல ஆய்வுகளைச் செய்து வருகிறது. முனைவர் எம்.கே.கோஸ்ராய் போன்றோர் கப் பல் கட்டுதல் தோடர்பான பல ஆய்வுகளை மேற் கொண்டு வருகின்றனர்.