பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 இந்திய அறிவீயல்‌ கல்விக்‌ கழகம்‌

188 இந்திய அறிவியல் கழகம் கால பல அறிவியல் துறையினைச் சார்ந்த முறை இதழ்களை வெளியிடுவதுடன் இந்தியத் தேசிய அறிவியல் கல்விக் கழகம் (Indian National Science Academy), இந்திய இயற்பியல் கழகம் (Indian Physics Association) ஆகியவற்றுடன் இணைந்து பிரமணா (Pramana) என்ற செய்தி இதழையும் வெளியிடுகிறது. 1981 ஆம் ஆண்டிலிருந்து கரண்ட் 'சயின்ஸ்' என்ற இதழின் நிருவாக, நிதிப் பொறுப் பினையும் ஏற்றுள்ளது. ஒவ்வொரு செய்தி இதழுக் கும்.பதிப்பாசிரியர்குழு ஒன்றும், அனைத்து வெளி யீடுகளின் பொறுப்பிற்கு ஒரு பதிப்பாசிரியரும் உளளனர். மேலும் அண்மை ஆய்வுகளும் சிறப் பிதழ்களாக வெளியிடப்படுகின்றன. தரம் வாய்ந் தவையாக இருப்பதாலும், வெளிநாட்டு உள்நாட்டுச் சிறந்த அறிஞர்களால் எழுதப்படுவதாலும், நிகழ் கால அறிவியலில் ஏற்படும் வளர்ச்சிகள் பற்றி அவ் வப்போதே அறிவிக்கப்படுவதாலும், கழக வெளி யீடுகளுக்கு உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் சிறந்த வரவேற்புள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் கழகப் பொதுக் கூட்டங்கள் இந்தியாவின் பெரு நகரங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் போன்ற வற்றில், ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுவதால் பல அறிஞர்கள் கூடி, சிறப்புக் கருத்துக்களைப் பற்றி ஆராய்ந்து விவாதிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் அறிவியல் அறிஞர்கள், ஆசிரியர்கள், மாண வர்கள், நகர மக்கள் பலரும் இக்கூட்டங்களில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்பது கழ கத்தின் பெரு நோக்கமாகும். இந்திய அரசு அறிவியல், பொறியியல் துறை உதவியுடன் பேராசிரியர் சர். ச. வெ. இராமன் நினைவாக, 1972 இல் இராமன் கல்விக் கட் டிலை (Raman Chair) நிறுவியுள்ளது. 1948 இல் இராமன் ஆய்வு நிறுவனம் (Raman Research Institute) ஒன்று கழகத்தால் நிறுவப்பட்டு, பின்னர் 1971 இலிருந்து ஒரு பொது அறக்கட்டளையினால் நிருவகிக்கப்படுகிறது. இந்திய அறிவியல் கழகம் வர்கள் ப.க. மக்கள் சர் ஜே.என் டாட்டாவும், அவருடைய டோராப் டாட்டா, சர் இரத்தன் டாட்டா ஆகிய கொடுத்த நன்கொடையாலும், இந்திய அரசும், மைசூர் அரசும் அளித்த ஆதரவாலும் 1909 ஆம் ஆண்டில் பெங்களூரில் இந்திய அறிவியல் கழ கம் (Indian Institute of Science) நிறுவப்பெற்றது. இங்குள்ள ஆய்வகங்கள். பட்டதாரிகள் ஆராய்ச்சி செய்வதற்கு வேண்டிய அகவளம் உடையன.இங்கு பல அறிவியல் துறைகளில் பெரும் பட்டங்கள் பெறு வதற்குரிய கல்வியும் பயிற்சியும் அளிக்க ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிறுவனம் இந்திய அர சின் பல்கலைக் கழக விதிகளின்படி 1956 ஆம் ஆண்டு பல்கலைக் கழகத் தகுதி அடைந்தது. இதன் நூலகத்தில் பல துறை நூல்களும், கால முறை இதழ்களும் உள்ளன. இங்கு நடைபெறும் ஆராய்ச்சி விவரங்களைக் காலாண்டிதழாக வெளியிடுகிறார்கள். இந்திய அறிவியல் காங்கிரஸ் கழகம் சு. ச. அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் உள்ள இந் திய அறிவியலார் தொழில்நுட்ப வல்லுநர் ஆகியவர் களை ஒருங்கிணைத்து இக்கழகம் செயற்படுகிறது. பல்துறைகளில் உள்ள அறிவியல் அறிஞர்களும் பங்கு கொள்ளும் அமைப்பாக இக்கழகம் செயற்படுகிறது. இக்கழகம் இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் உள்ள அறிவியல் அறிஞர்களைத் தேசிய வளர்ச்சிக்கு ஒன்று படுத்துகிறது. இக்கழகத்தின் ஆண்டு ஆய்வுக் கூட் டங்களில் சோவியத் அறிவியல் கல்விக் கழகம், பிரிட் டன் அறிவியல் வளர்ச்சிக்கழகம், அமெரிக்க அறிவி யல் வளர்ச்சிக்கழகம், ராயல் நேபாள அறிவியல், தொழில்நுட்பக் கல்விக்கழகம், இலங்கை அறிவியல் வளர்ச்சிக் கழகம் போன்ற அயல்நாட்டு அறிவியல் கழக அறிஞர்களும் பங்கேற்கின்றனா. தோற்றம். இக்கழகத்தை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வேதியியல் வல்லுநர்களான ஜே.எல். ஆண்டு. உள்ள அறிவி சைமன்சென் (J.L. Simousen), பி.எஸ். மேக்மெகான் (P.S. Macmahan) ஆகியோர் 1910 ஆம் இந்தியாவில் தொடங்கினர். இந்தியாவில் பதினேழு அறிவியல் அறிஞர்களுக்கு ஓர் யல் கழகம் தொடங்குவதற்கான சுற்றறிக்கையை இவர்கள் அனுப்பி, அவர்களுடைய விருப்பத்தை அறிவிக்கும்படிக் கேட்டனர். சர் அஸ்டோஷ் முக் கர்ஜீ (Sir Asutosh Mookerjee), சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Sir Jagadish Chandra Bose), சர் பிரபுல்லா சந்திரரே (Sir Prabulla Chandra Ray) போன்ற திறமையும், அறிவும் வாய்ந்த அறிவியல் அறிஞர் களிடமிருந்து அவர்களுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் உடனே கிடைத்தன. அப்போது நிகழ்ந்துக்கொண்டி ருந்த சுதேசி இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வே இவ்வொத்துழைப்பிற்குக் காரணம் ஆகும். இந்திய வல்லுநர்கள் இந்தியாவின் எதிர்காலம், அறிவியல் தொழில் நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சியை நினை வில் கொண்டு இவ்வியக்கங்களில் அறிஞர்கள் விழிப் புணர்ச்சியுடன் செயல்பட்டனர். இதனால் அவர்கள்