பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 இந்திய இருப்புப்பாதையின்‌ வரலாற்று வளர்ச்சி

194 இந்திய இருப்புப்பாதையின் வரலாற்று வளர்ச்சி இருப்புப்பாதை வட்டாரம் தலைமையகம் தடநீளம் கி.மீ. (Route) ஓடுதடநீளம் கி.மீ. சமதடநீளம் கி.மீ. (Running track) (Equated track) 1) கிழக்கு இருப்புப்பாதை கல்கத்தா 4217.11 6886. 28 94.48 2) தென்கிழக்கு 83 கல்கத்தா 6841, 79 9496. 58 15531. 51 3) வடக்கு 25 டில்லி 10620. 78 12374. 57 13954. 56 4) வடகிழக்கு கோரக்பூர் 4976, 97 5175.00 5868. 88 . 5) தெற்கு சென்னை 7445. 62 8119. 27 53 6) மத்திய பம்பாய் 6019, 99 8103. 20 8730. 72 10886.61 7) மேற்கு பம்பாய் 10146, 59 11355.36 12393.03 " 8) வடகிழக்கு எல்லைப்புற 3624.94 3617.02 4356.87 19 கௌஹாத்தி 9) தென்மத்திய செகந்திராபாத் 6173.55 7036. 25 60067.34 8089.68 89296.01 மொத்த இருப்புப்பாதை 1944- 1944 1947- 1948 1949- 1950 போர் போக்குவரத்து வாரியம் தொடங்கப் பட்டது. ע பெங்காலில் ஏற்பட்ட பஞ்சத்தால், இருப் புப்பாதை வாரியத்திற்குப் புதிய சிக்கல் ஏற்பட்டது. இந்தியாவின் பிரிவினால், இந்திய இருப்புப் பாதைக்கு ரூ.2.74 கோடி இழப்பு ஏற் பட்டது. பிரிவின் போது இந்திய இருப் புப் பாதையின் முதலீடு ரூபாய் 667.43 கோடியாகவும் பாகிஸ்தான் இருப்புப் பாதையின் முதலீடு ரூபாய் 136 கோடி யாகவும் இருந்தன. இந்திய அரசு ஒரு சில தனிக்குழுமங்களைத் தவிர அனைத்து இருப்புப்பாதைகளையும் ஆளும் பொறுப்பை ஏற்றது. முதல் ஐந்தாண்டுத் திட்டம். முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் திட்டமிடப்பட்ட செலவு ரூபாய் 2069 கோடியில் இருப்புப்பாதை நிர்வாகத்திற்கு ரூபாய் 400 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இருப் புப் பாதை மதிப்பீட்டின் மீட்புப்பணி இருப்புப் பாதை வளர்ச்சியில் பெரும் பிரச்சினையாக இருந் தது. சித்தரஞ்சன் தொடர்வண்டிப் பொறிப் பணி கள், டாடா பொறியியல் மற்றும் தொடர்வண்டிப் பொறிப் பணிகள் ஆகியவை இக்காலத்தில் உற்பத் தியைப் பெருக்கின. தொடர்வண்டி நிலையங்களும், இருப்புப்பாதை வசதிகளும் வளர்ச்சி அடைந்தன. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம். இரண்டா வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்திய இருப்புப் 72393.63 பாதைகளின் வளர்ச்சிக்காக ரூபாய் 1125. கோடி ஒதுக்கப்பட்டது. புதிய இருப்புப்பாதைகள் புதிய இணைப்புப் பெட்டிகள், தொடர் வண்டி. இயக்கி கள் உருவாக்கப்பட்டன. மின்தொடர்வண்டி இயக் குவதில் வளர்ச்சி ஏற்பட்டது. மொகெமேவில் உள்ள இருப்புப் பாதைப் பாலம் போக்குவரத்திற் காகத் திறக்கப்பட்டது. பிரம்மபுத்திரா பாலத்திற் கான அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டக் காலத் தில் இருப்புப்பாதைச் சாதனங்களின் வளர்ச்சி தன் னிறைவு பெற்றது. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம். இக்காலத் திட் டத்தில் ரூபாய் 1470 கோடி இருப்புப்பாதைகளுக் காகவும் தொடர் வண்டிப்பெட்டிகளுக்காகவும் வழங்கப்பட்டன. இத்திட்டத்தால் 2070 தொடர் வண் டி. இயக்கிகள், 1,57, 33 தொடர்வண்டிப் பெட்டிகள், 7,879 இணைப்புப்பெட்டிகள் வாங்கப் பட்டன. மேலும் 3,548 கி.மீ. இருப்புப்பாதையை இரு வழிப் பாதையாக மாற்றவும், 8000 கி.மீ. இருப்புப்பாதைகளைப் புதுப்பிக்கவும். 4000 கி.மீ. தண்டவாளங்களைப் புதுப்பிக்கவும் செலவு செய் யப்பட்டது. 2400 கி.மீ. நீளமுள்ள புதிய இருப்புப் பாதைகளும் அமைக்கப்பட்டன. மேலும் பாலங்கள், ஊழியர்களுக்கான வீடுகள் இருப்புப்பாதை நிலை யங்கள் ஆகியவற்றுடன் பிற வசதிகளும் ஏற்படுத் தப்பட்டன. நான்காம் ஐந்தாண்டுத் திட்டம். இருப்புப்பாதை வளர்ச்சிக்காக இத்திட்டத்தில் ரூபாய் 7000 கோடி அளிக்கப்பட்டது.