பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 இந்தியக்‌ கடலியல்‌ வரலாறு

200 இந்தியக் கடலியல் வரலாறு பண் கிழக்கு-மேற்காகச் செல்லும் அகலாங்குகளை வரை யறுத்தார். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் (கி. மு. 63- கி.பி. 24) வாழ்ந்த ஸ்ட்ராபோ என்னும் புவியியல் வல்லுநரும் பேச்சுக் கலைவல்லுநரும் ஆன செனெகா கடல், நிலப்பரப்பைக் குறிப்பிட்ட காலங்களில் உட் கொள்வதையும் வெளித்தள்ளுவதையும் நீரின் பியலமைப்பின் மாற்றச் சுழற்சியையும் தெளிவுறக் கண்டறிந்தார். ரோமானியர்களுடைய வீழ்ச்சிக்குப் பின் ஸ்காண்டிநேவிய நாட்டு மன்னர்களால் நடத் தப்பட்ட வைக்கிங் சுற்றுப் பயணங்களின் மூலம் அடைந்த, கீரின்லாந்து பாஃபின் தீவு போன்றவற் றின் கண்டுபிடிப்புகளைக் கூறலாம். இதற்குப் பின் (Bartholameo, 1486) வாஸ் பார்த்தோலோமியா கொலம்பஸ் கோடகாமா (Vascodagama, 1498), Columbus, 1492). மெகல்லன் (Magellan, 1521) கேப்டன் ஜேம்ஸ் குக் (Captain James Cook, 1828) போன்றோரின் புதிய கடல் வழிகள், புதிய கண்டங் கள் கண்டுபிடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் கடலியலுக்கு வழி காட்டிகளாகும். மத்தேயுவோன டேரின் மௌரி 1853 இல் எழுதிய கடலின் இயற் பியல் அமைப்பு என்ற நூலைக் கடலியல் வர லாற்றில் ஓர் எல்லை எனக் கூறலாம். கடல் மேற் புற அலைகளின் தன்மையைக் கெர்ஸ்ட்னர் (Gerst- ner) 1802 ஆம் ஆண்டில் ஒரு தேற்றத்தின் மூலம் விளக்கினார். அத்தேற்றம் ஸ்டோக்ஸ் என்பவரால் 1847 ஆம் ஆண்டில் மீண்டும் ஆராயப்பட்டது. பதி னேழாம் நூற்றாண்டில் நியூட்டன், லாப்லாஸ் போன்றோர் ஓத அலைகளைப் பற்றி உலகிற்குத் தெரிவித்தனர். ஹெல்லாண்டு ஹென்சன், எக்மென் ஆகியோர் கடல் நீரோட்டத்தைப் பற்றியும், காற்றி னால் அவற்றிற்கு ஏற்படும் மாற்றங்களைப் பற்றி யும் எட்டாம் நூற்றாண்டிலேயே உலகுக்குத் தெரி வித்தனர். 1880 இல் டிட்மார் கடல் நீரின் தன்மை யைத் தெளிவாகக் கண்டறிந்தார். 1946இல் ஜோகன்னஸ் முல்லர் மிதவையுயிரிகள் ஆய்வுக்கு இழு வலை நுண்ணோக்கியைக் கடலாய்வில் பயன் படுத்தவியலும் என்பதைக் கண்டறிந்தார். தொடர்ந்து 1887 இல் விக்டர் ஹென்சன் மிதவையு யிரிகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டார். 1900 இல் பிரிட்ஜ்ஜோல் நான்சன் (Fridtjol Nansen ) கடல் நீரினுடைய தட்ப வெப்ப நிலையின் மாற்றங் களில் விளைவைக் கண்டறிந்தார். இருபதாம் நூற் றாண்டின் தொடக்கத்தில் பெசன்டன் கண்டுபிடித்த ஒலி அலை முறைகளைப் பயன்படுத்திச் சுழற்சி ஆழமானிகளை 1920 இல் உருவாக்க இயன்றது. இது கடலியலின் வளர்ச்சியில் ஒரு பெரும் பங்கேற் றது. கடலின் தன்மைகளை அறியக் கடந்த நூற்றாண் டில் பலர் ஆய்வுப் பயணங்கள் நடத்துவதையே குறிக்கோளாகக் கொண்டார்கள். இங்கிலாந்து நாட் டினரால் 1873-76 ஆம் ஆண்டுகளில் சர் ஜான் முர்ரே தலைமையில் சாலஞ்சர் ஆய்வுப் பயணம் நடத்தப் பட்டது. இப்பயணம் கடலின் அடித்தளப்பரப் பிலிருந்து எண்ணற்ற மாதிரிப் படிவுப் பாறைகளைக் கொணர்ந்தது. மேலும், இதில் தொகுத்த ஏனைய அறிவியல் ஆய்வுப் பயணக் குறிப்புகள் கடலியல் தனியாக உருவாவதற்குப் பெரிதும் அடிகோலின. 1868 இல் தந்திக் கம்பிகளை இழுத்துச் செல்வதற்காக எடுத்த முயற்சியின் பயனாக அட்லாண்டிக் பெருங் கடலின் வடபகுதியில் இங்கிலாந்து நாட்டினரால் போர்க்குபைன் என்னும் கப்பலைக் கொண்டு நடத் தப்பட்ட ஆய்வுப் பயணமும், 1889 இல் ஜெர்மானிய அறிவியலாளர்களால் நேஷனல் என்னும் கலத்தைக் கொண்டு நடத்திய மிதவை ஆய்வுப் பயணமும், 1885-87 இல் பெருங்கடலின் பிளேக் அமெரிக்கர்களால் அல்பட்ராஸ் அட்லாண்டிக் கப்பல்களின் துணை கொண்டு நடத்திய ஆய்வுப் பயணங்களும், 1925-27 இல் ஜெர்மானியர் மீட்டியோர் என்னும் கலத்தைக் கொண்டு நடத்திய ஆய்வுப் பயணமும், ஹாலந்து நாட்டினரால் 1929.30 ஆம் ஆண்டு ஸ்னல்லியஸ் களில் நடத்தப்பட்ட வில்லிபிரோர்டு ஆய்வுப் பயணமும், 1930 இல் ஆங்கிலேயரால் நடத்தப்பட்ட டிஸ்கவரி ஆய்வுப் பயணமும், 1938 இல் ஆல்ட்டெர் என்னும் ஜெர்மானியக் கப்பலும், ஆர்மாயர் ஹென்சன் என்னும் நார்வே கப்பலும் நடத்திய ஆய்வுப் பயணங்களும், 1947 இல் சுவீடன் நாட்டுக் கலமாகிய ஆல்பர்ட்ராஸ் மேற்கொண்ட ஆய்வுப் பயணமும் இத்துறையை வளர்ப்பதற்குக் காரணமாக இருந்த முக்கியமான ஆய்வுப் பயணங் கள் ஆகும். ஜெர்மானியக் கப்பல் அண்டன் டார்ன் நடத்திய கிரீன்லாந்து ஆய்வுப் பயணங்கள். குளிர் தேசக் கடற்பகுதிகளில் கடலியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தின. 1957-58இல் நாற்பது நாடுகள் இணைந்து அறுபது கப்பல்களைப் பயன்படுத்திச் செய்த ஆய்வுப் பயணங்கள், கடல் புவி இயற்பியல் துறையில் மறுமலர்ச்சியைக் கொணர்ந்தன. இதை யடுத்து அனைத்துலகக் கல்வி சமுதாயக் கலாச்சாரக் கழகம் (UNESCO) 1963 இல் அனைத்து அரசுக் கடலியல் ஆணையத்தைப் பாரிசில் நிறுவியது, இச் சமயத்தில் மின் அணுத்துறையிலும், ஒலி அலைப் பிரதிபலிப்பைப் பயன்படுத்துதலிலும், செயற்கைக் கோள் வழிக் கப்பல் செலுத்தும் சாதனைகளிலும் ஒரு பெரும் புரட்சி ஏற்பட்டது. தொடர்ந்து 1965இல் அமெரிக்காவின் குளோமர் சேலஞ்சர் என்னும் ஆழ் துளையிடும் கப்பல் நடத்திய ஆய்வு,குறிப் பிடத்தக்கது. இதன் மூலம் பெற்ற செய்திகள் கண்டத்திட்டுப் பிறழ்ச்சித் (plate tectonics) தத்து வத்தின் உண்மையை அறிய உதவியது. அனைத்து நாடுகளின் நாற்பது கப்பல்களைக் கொண்டு இவ் வாணையம் 1963 இல் அட்லாண்டிக் பெருங்கடலி லும், 1964 இல் பசிபிக் பெருங்கடலிலும். 1965 இல் இந்தியப் பெருங்கடலிலும் நடத்திய ஆய்வுப் பயணங் கள் கடலியலை முழுமைபெறச் செய்தன. அனைத்து அரசுக் கடலியல் ஆணையம், வருமானத்தில் பின் தங்கிய நாடுகளுக்கு இத்துறையை வளர்ப்பதற்கு