பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியக்‌ கடலியல்‌ வரலாறு 201

க மானியம், வழங்குவதோடன்றிக் கடலியல் வல்லுநர் களைத் தன் செலவில் அனுப்பிக் கடலியலை வலுப் படுத்தி வருகிறது. இன்று அறுபத்தேழுக்கும் மேலான நாடுகள் சொந்தமாக ஆய்வுக் கலத்தை ஏற்று நடத்தி வருகின்றன. கடலில் உயிருள்ள, உயிரற்ற பொருள் களின் வள இருப்பு மிகுதியாக இருப்பதை அறிந்த உலக நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாகத் தமது கடற்கரை எல்லையிலிருந்து 200 கடல் மைல் தூரத்திற்குப் பரவிக் கிடக்கும் கடற்பகுதியினைப் பொருளாதார உரிமைப் பகுதியாகச் செய்யும் சட்டத் தைக் கொணர்ந்துள்ளன. அண்மையில் மேலும் 150 கடல் மைலுக்கு (ஆக மொத்தம் 350 கடல் மைல் பகுதி) அனைத்து நாடுகளின் கப்பலைச் செலுத்துவது தவிர, மற்ற ஆய்வு உரிமைகளையும் எடுத்துக் கொண்டன. இதற்கும் அப்பால் உள்ள பகுதிகளின் வளங்களைப் பயன்படுத்துவதைச் சீரான முறையில் கொணர அனைத்துலகக் கடல் தள நிருவாகத்தினை நிறுவித் தற்பொழுது ஆய்வை நிறைவேற்றி வருகின்றது. இவற்றின் அடிப்படையில் மேற்கத்திய நாட்டு வல்லுநர்கள் இத்துறையை மேன் மேலும் வலுப்படுத்தினர். பின்னர், கடலியல் விரை வாக வளர ஆரம்பித்தது. பெர்லினில் உள்ள கடல் ஆய்வு நிறுவனமும், பெர்கன் நகரில் அமைந்துள்ள கடலியல், கடல் இயற்பியல் துறையும், செளத் ஹாம்ப்டன் நகரில் அமைந்துள்ள கடலியல் நிறுவன மும், அமெரிக்காவின் ஸ்கிரிப்ஸ் வூட்ஸ்கோல் கடல் ஆய்வு நிறுவனங்களும், லேமாண்ட் ஆப்சர்வேட்டரி என்னும் கடல் வானிலை ஆய்வு நிறுவனமும் கடலியல் நன்கு வளரக் காரணமாக இருந்தன. ரெண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட அனைத்துலகப் பெருங்கடல் ஆய்வுகள் இந்த இளம் அறிவியல் பிரிவை மேன்மேலும் வளப்படுத்தி வந்தன. இன்று ஆய்வுக் கலங்களை ஏற்று நடத்தும் கடல்பயணத் துறையில் அடைந்துள்ள முன்னேற்றம் வியக்கும்வகையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, ஆழ்துளையிடும் குளோமர் சேலஞ்சர் ஆய்வுக் கலம் முதலில் போட்ட 6 அங்குல விட்டமுடைய துளையி லேயே, ஓராண்டு கழித்து மீண்டும் வந்து துளையிட முயல்கிறது. நாலாயிரம் மீட்டர் ஆழத்திற்கு மேல் உள்ள கடற்படுகைகளில் பரவிக் கிடக்கும் மாங்கனீஸ் கனிம முடிச்சுக்களில் உள்ள உலோகச் செறிவைப் பிரித்துப் பயன்படுத்துவதற்காகக் கடற் பரப்பிற்குத் தொடர்ந்து கொணரவியலும் என்கிறார்கள். அண் மையில் ஐஸ்லாந்து அருகில் விழுந்து நொறுங்கிய கனிஷ்கா வானூர்தியின் துகள்களை 3000 மீட்டர் ஆழத்திலிருந்து நீர் மூழ்கிகளின் மூலம் எடுத்து வரக் கூடிய அளவிற்குக் கடலியல் முன்னேறியுள்ளது. இந்தியாவில் சுடலியல். இந்தியாவில் கடல் ஆய்வு, ராயல் இந்தியக் கடல் அளவாய்வுத் துறை, எச்.எம். எஸ். இன்வெஸ்டிகேட்டர் எனும் கலத்தினைக் கொண்டு 1882 இல் தொடங்கியதாக அறியப் சென்னை, இந்தியக் கடலியல் வரலாறு 201 படுகிறது. இதற்குப் பின்னர் இந்தியக் கடற்படை யின் கப்பல்கள் அவ்வப்பொழுது கடலியலுக்கு வேண்டிய ஆய்வுப் பணிகளை நிறைவேற்றி வந்துள் ளன. சுதந்திரத்திற்குப் பின் கடலியல் துறை தானே இயங்குவதற்கு, இந்தியக் கப்பற்படையின் கொங்கன், வங்காளம், ராஜபுத்திரம், ரோஹில் கண்டு, சர்க்கார் போன்ற அளவாய்வுக் கலங்கள் சேகரித்த செய்திகளே உயிரூட்டி வந்தன. 1950 இல் ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் கடலியல் துறை ஆரம்பிக்கப்பட்டது. அது வளர்ச்சியுற்று, பின்னர் ஏனைய புவிப் பொதியியல், உயிரியல் போன்ற தொடர்பான அறிவியல் பிரிவுகளையும் கடலாய்வில் வளரச் செய்து, ஈடுபடுத்தியது. இதன் விளைவாக 1959-65ஆம் ஆண்டுவரை யுனெஸ்கோவால் மானி யம் அளிக்கப்பட்டு நடத்தப்பட்ட அனைத்துலக இந்தியப் பெருங்கடல் ஆய்வுப் பயண முயற்சியில் இந்திய வல்லுநர்கள், இந்தியக் கடற்படையின் அளவாய்வுக்கலம் கிஷ்ட்னா, டெல்லி போன்ற கலங்க ளைக் கொண்டு பெரும்பங்கேற்க முடிந்தது. இதே சமயத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கடலுயிரியல் நிலையம் பரங்கிப்பேட்டையில் தோற்று விக்கப்பட்டது. இந்திய வேளாண்மை ஆய்வுக் கழ கம் உணவுப் பொருள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மத்திய கடல்மீன் வளர்ப்பு நிறுவனத்தை 1955 இல் நிறுவியது. இந்நிறுவனம் இந்தியக் கிழக்கு மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேலான பிரிவுகளை ஏற்படுத்தி நாளும் மீன்பிடிப்பு அளவினைக் கணித்து, அதை மேம்பாடு செய்வதற் அளவாய்வுகளை விரைவுபடுத்தியது. இதி லிருந்து கொச்சியில் மத்திய மீன்வளத் தொழில் நுட்ப நிலையம் பிரிந்து 1960 க்குள் தனித்தன்மை பெற்று இந்திய விவசாய மேம்பாட்டுக் கழகத்தால் வளர்க்கப்பட்டது. கான அனைத்துலக இந்தியப் பெருங்கடல் ஆய்வுப் பயணத்தில் கிடைத்த செய்திகளைப் பகுத்தறிய யுனெஸ்கோவின் உதவியால், 1966 இல் கொச்சியில் அறிவியல் தொழில் ஆய்வுக் கழகம் இந்தியப் பெருங் கடல் உயிரியல் ஆய்வுத் துறையைத் தோற்றுவித்தது. பின்னர் இந்தியாவின் பல அறிவியல் நிறுவனங்களி லும், பல்கலைக் கழகங்களிலும் கடலியல் ஆய்வு பற்றிய ஆர்வமும் எழுச்சியும் காணத் தொடங்கின. இதன் விளைவாக அறிவியல் தொழில் ஆய்வுக் கழகம் 1968 இல் கோவாவில் தேசியப் பெருங்கடலி யல் நிறுவனத்தைத் தோற்றுவித்தது. இதன் பின்னர் இந்தியாவில் கடலியல் துறை மேலும் மேம்பட்டு 1970-க்குப்பின் விரைவாக வளர்ச்சியுற்றது. இந்நிறு வனம் பம்பாய், கொச்சி, வால்டேர் ஆகிய முன்று இடங்களில் தனது கிளைகளை உருவாக்கி வேலை செய்யத் தொடங்கியது. இது முதலில் ஆற்றுக் கழிமுகங்களிலும், கடலோரப் பகுதிகளிலும் மீன்பி இழு கலங்களைப் பயன்படுத்தி ஆய்வு நடத்தியது. டி