பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 இந்தியக்‌ கப்பல்‌ துறை

206 இந்தியக் கப்பல் துறை கப்பல் கட்டுமானம். 1946 ஆம் ஆண்டு கப்பல் கட்டுமானம் நிறுவப்பட்டது. 1952 ஆம் ஆண்டு இந்துஸ்தான் கப்பல் கட்டும் குழுமத்தை அரசு டுத்துக்கொண்டது. 83 ஆம் ஆண்டில் ரூபாய் 31.31 கோடியாகவும், 84 ஆம் ஆண்டு இக்குழு மத்தின் முதலீடு ரூபாய் 38.38 கோடியாகவும் இருந் தன் கடல் கப்பல் 1984-85ஆம் ஆண்டுக் காலத்தில், கப்பல்துறை ஆறு கப்பல்களுக்குக் கூட்டுவிட்டத்தை (keel) அமைத்தது. இவ்வகைக் கப்பலில் மிகுந்த மட்டத்தில் கட்டப்பட்ட துளைபோடும் முதன்மையானதாகும். 84 ஆம் ஆண்டு வரையில் கப்பல்கட்டும் தளம், மூன்று கப்பல்களைச் செலுத்தி யுள்ளது. இவ்வாண்டு மேலும் மேலும் ஒரு கப்பலைச் செலுத்தவுள்ளது. சார்க்குக் குழுமம் 27000 டன் எடை கொண்ட நந்திராதி கடற் கப்பலையும், இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு, 16700 டன் எடை கொண்ட குஜராத் கடல் கப்பலையும் 1984 டிசம்பர் இறுதி வரையில் கப்பல்கட்டும் தளம் செலுத்தியுள்ளது. மேலும், இன்னும் இரு கப்பல் களை இவ்வாண்டில் செலுத்தவுள்ளது. வுடைய கொச்சி கப்பல் கட்டும் திட்டம். இது 1971 ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 1984ஆம் ஆண்டு முடிவுபெற்றது. இங்கு 85,000 டன் எடை அள கப்பல்களின் கட்டுமானமும், 1,00,000 டன் எடை அளவுடைய கப்பல்களின் பழுதுபார்க்கும் பணியும் நடை பெறுகின்றன. தளத்தின் கொள்ளளவு கப்பல் கட்டுவதில் 1,50,000 டன் எடையும், கப்பல் பழுதுபார்ப்பதில் ஆண்டொன்றுக்கு பத்து இலட்சம் தொகு பதிவு டன் எடையும் ஆகும். கொச்சி கப்பல் கட்டும் தளக்குழுமத்தின் ஒப்புதல் அளிக்கப் பட்ட போது, இதன் முதலீடு 1984 டிசம்பர் வரை யில் ரூபாய் 70.00 கோடியும், ரூபாய் 62.73 கோடி யும் ஆகும். 1982-83 ஆம் ஆண்டுக் காலத்தில் ரூபாய் 9.68 கோடியும், 1983-84ஆம் ஆண்டுக் காலத்தில் ரூபாய் 10.31 கோடியும் இக்குழுமத்திற்கு இழப்பு ஏற் பட்டது. 31.3.1984 வரையில் தொடர் கூடுதல் இழப்பு ரூபாய் 33.09 கோடியாகும். இவ்வாண்டில் ரூபாய் 12.29 கோடி இழப்பு ஏற்படலாம் என இக்குழுமம் எதிர்பார்க்கிறது. கொச்சி கப்பல் கட்டும் தளம் மூன்றாம் கப்பலா கிய மராத்தா மிசனை 1985 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் சௌகுல் நீராவிக் குழுமத்திற்கு அளித் தது. 1985 ஆம் ஆண்டு ஐந்து கப்பல் கூட்டுவிட்டம் சனவரி மாதம் ஐந்தாம் நாள் அமைக்கப்பட்டு, நான்குகப்பலகள் 1985 ஜனவரி மாதம் செலுத்தப் பட்டன. பெருந்துறைமுகங்கள். 1983-84 ஆம் ஆண்டு களில் 10.05 கோடி டன்களைக் கொண்ட போக்கு வரத்து இப்பெருந்துறைமுகங்களினால் கையாளப் படுகிறது. 1985 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இப்பெருந்துறைமுகங்கள் 8.657 கோடி டன் போக்குவரத்தையும், 1982-83ஆம் ஆண்டில் 8.386 கோடி டன் போக்குவரத்தையும் மேற்கொண்டன. இந்தியாவில் பதினொரு பெருந்துறைமுகங்கள் உள்ளன. கல்கத்தா, பாரதீப், விசாகப்பட்டினம், சென்னை, தூத்துக்குடி ஆகியவை கிழக்குக் கடற் கரையோரத்திலும், கொச்சி புது மங்களூர், மார் மகோவா, நவா சேவா பம்பாய், கந்துலா ஆகியவை மேற்கு கடலோரத்திலும் உள்ளன. இவற்றுள் நவா சேவா துறைமுகம் கட்டுமானத்தில் உள்ளது. இத்துறைமுகத்தின் நிர்வாகமும், வளர்ச்சியும் இந்திய அரசின் பொறுப்பாகும். 1908ஆம் ஆண்டின் இந்தியத் துறைமுகச் சட்டம், நிர்வாகத்திற்காகச் சட்ட விதிப்பட்ட ஆணையத்தை வழங்குகிறது; ஆனால் 1963ஆம் ஆண்டின் பெருந்துறைமுக அற நிறுவனச் சட்டம், துறைமுக அறநிறுவன வாரியத் தின் அமைப்பையும், அதன் நிர்வாகம், கட்டுப்பாடு. முக்கிய துறைமுகங்களின் மேலாண்மை ஆகியவற்றை யும் வரையறுக்கிறது. 1948ஆம் ஆண்டின் துறைமுகத் தொழிலாளர் விதிப்படி இந்தியாவிலுள்ள ஏழு முக்கிய துறை முகங்களிலும் (பம்பாய், கல்கத்தா,கொச்சி, இந்துலா, சென்னை, மார்மகோவா, விசாகப்பட்டினம்) துறை முகத் தொழிலாளர் வாரியம் உள்ளது. புதிய மூன்று துறைமுகங்களாகிய பாரதீப், புது மங்களூர், தூத் துக்குடி ஆசியவற்றில் ஒருங்கிணைந்த சரக்குக் கப் பல்களைக் கையாளும் முறைகளுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறன. நவா-சேவாவில் எவ்வித முயற்சிகளும் ஏற்படவில்லை. பம்பாய், கந்துலா, சென்னை, மார்மகோவா, புது மங்களுர், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் போதுமான வருவாய் பெற்றுள்ளன. பம்பாய், கந்துலா, சென்னை, மார் முகோ ஆகிய துறைமுகங்களின் நிதிநிலை நிறைவு தருவதாக அமைந்துள்ளது. 1980-85ஆம் ஆண்டின் ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தியக் கப்பல் டன் அளவின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவைவிடக் குறைந்தே காணப் பட்டது. . 1985ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் 62.9 லட்சம் தொகு பதிவு டன் அளவாக இருந்தது. ஆனால் கணக்கிடப்பட்ட திட்டத்தின் அளவு 75 லட்சம் தொகு பதிவு டன்னாகும். அத னால் 12.1 இலட்சம் தொகு பதிவு டன் குறைவாகக் காணப்பட்டது.