210 இந்தியச் செம்மறி ஆடுகளின் வகைகள்
210 இந்தியச் செம்மறி ஆடுகளின் வகைகள் இந்நிறுவனம் அயராது பணி புரிகிறது. தொழிற் கூடங்களில் ஒழுங்குமுறை உற்பத்திக்காகவும் தொழிற்கூட எந்திரத் தளவாடத் தரக்கட்டுப்பாட் பயிற்சி முகாம்கள், டிற்காகவும் இந்நிறுவனம் மாநாடுகள், சார்புத் தொழிற்கூடங்களைப் பார்வை யிடுதல் போன்ற நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுத்து வருகிறது. உலக அளவில் வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து இளம் அறிவியல் தொழில் நுட்ப வல்லுநர்களை வரவழைத்துப் பயிற்சி முகாம்கள் நடத்துகிறது. இந்தியாவில் தொழிற்கல்விக் கூடங்களில் தரக் கட்டுப்பாட்டுக் குறிப்பீடுகள் வேரூன்றத் தரக்கட்டுப் பாட்டு நியமங்களைப் பயன்படுத்துவதற்கான ஏற் பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்துலக நிறுவனங்களுடன் கூட்டுறவு. உலகத் தரக்கட்டுப்பாட்டு மேம்பாட்டைக் கருதி இந் நிறுவனம், அனைத்துலகப் பொதுத் தரக்கட்டுப் பாட்டு நிறுவனம் (ISO), அனைத்துலக மின் தொழில் நுட்பக்குழு (IEC) ஆகிய பெரும் நிறுவனங் களில் முக்கிய பொறுப்பேற்றுச் சீரிய பணிகளை ஆற்றி வருகிறது. 1984 ஆம் ஆண்டு இந்நிறுவனத் தின் உதவித் தலைவர் முனைவர் டி.சி. கோதாரி உலகத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தலைவராக மூன்று ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உ சந்தா உறுப்பினர்கள். இந்தியாவிலேயே சந்தா செலுத்தும் உறுப்பினர்களைக் கொண்ட நிறுவனங் களில் இந்நிறுவனம் முதலாவதாகும். இந்நிறுவனம் தொழிற்கூடங்கள், மாநில அரசுகள், கல்விக்கூடங் கள், தொழில்மேதைகள் போன்ற வெவ்வேறு பிரிவி னரை உறுப்பினர்களாகிச் சலுகைகள் வழங்குகின் றது. இப்போது இதன் உறுப்பினர்களின் எண் ணிக்கை 6225. இதன் தலைமை அலுவலகம் புது டில்லியிலும், வட்டார அலுவலகங்கள் கல்கத்தா. பம்பாய், சென்னை, சண்டிகார் ஆகிய இடங்களிலும், கிளை அலுவலகங்கள் ஆமதாபாத், பெங்களுர், போபால், புவனேஸ்வரம், ஐதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர் பாட்னா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் உள்ளன. இதன் முக்கிய தொழிற்கூடங்களின் எண்ணிக்கை 15. இதில் இது வரை பதிப்பிக்கப்பட்ட செந் தரங்கள் 11,874. இதுவரை முத்திரை உரிமை வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,368. இதில் உள்ள மொத்தத் தொழில் நுட்பக்குழு உறுப்பினர் கள் 37,180. உலோ.செ. இந்தியச் செம்மறி ஆடுகளின் வகைகள் வை உலகிலேயே உயர்வான இரத்தினக் கம்பளங்கள் நெய்யப் பிக்கானீர் ஆடுகளின் உரோமம் பயன்படு கிறது. மணல் காடான பிரதேசத்தில் ஆண்டுக்கு 35 செ.மீ. மழை அளவுக்கு மேற்படாத இடங்களில் இவ்வாடுகள் வளர்க்கப்படுகின்றன. முக் கோண முகத்துடனும், வில்போன்று சற்று வளைவு கொண்ட மூக்குடனும் கொம்பற்றும் காணப்படும். காதுகள் சிறுத்துக் குழாய் போன்றிருக்கும்; வால் சற்று நீளமாயிருக்கும். முகத்தில் கண்களையும் காது களையும் சுற்றிக் கருநிறமோ செந்நிறமோ காணப் படும். இவை வெண்ணிறமான உரோமத்தைக் கொண் டவை. ஆண்டுக்கு 9-12 பவுண்டு உரோமம் கொடுக் கும். ஊனும் அதிகமாகத் தரும். இந்த ஆடுகளைக் கொண்டு ஏனைய சாதாரண ஆடுகளை விருத்தி செய்யப் பல்வேறு திட்டங்கள் இந்திய நாட்டில் செயல்பட்டு வருகின்றன. லோஹி ஆடு. இது பஞ்சாபில் உள்ள மிகு பயன் கொண்ட ஆடு; து கொம்பற்றது. பல்லாரி ஆடு. இது தென்னாட்டில் பல்லாரி மாவட்டத்தில் நீண்ட காலமாக உரோமத்திற்காகவும் ஊனுக்காகவும் வளர்க்கப்பட்டு வருகிறது. இதுகருநிற மும் வெண்ணிறமும் கொண்டது. இதற்குக் கொம்பு களுண்டு. நாட்டுக் கம்பளங்கள் செய்ய இதன் உரோமம் மிகுதியும் பயன்படுகிறது. குரிகுப்பி என்னு மிடத்தில் அரசு ஓர் ஆட்டுப்பண்ணையை அமைத்து, இனத்தை விருத்தி செய்து வருகிறது. தக்கான் ஆடு. இது மகாராஷ்டிரத்தின் தென் பாகங்களிலும் ஹைதராபாத்திலுமுள்ளது. பெரும் பாலும் இது பல்லாரி ஆட்டைப் போலிருக்கும். கோயம்புத்தூர் ஆடு, செங்கம் ஆடு. இவற்றின் உரோமம் வெகு மட்டமான கம்பளிகள் செய்யப் பயன்படுகிறது. பால்கி அல்லது ஹஸ்தனகிரி ஆடு. பாகிஸ்தானைச் சேர்ந்த வட மேற்கு மாகாணத்திலும் ஆப்கானிஸ் தானத்திலும் இவை காணப்படுகின்றன. இதன் வாலில் கொழுப்புச் சேர்ந்து முட்டை போலிருக்கும். இது உரோமத்திற்கும் இறைச்சிக்கும் ஏற்றது. நெல்லூர் ஆடு, மண்டியா ஆடு, ஹாசன் ஆடு, மைலம்பாடி ஆடு, மேச்சேரி ஆடு, மைலவரம் ஆடு போன்றவை ஊனுக்கேற்ற ஆடுகளாகும். வெள்ளாடுகள் இவை பாலுக்காக மிகுதியாக வளர்க்கப்படு கின்றன. ஆயினும், உரோமத்திற்காக வளர்க்கப்படும் வெள்ளாடும் உண்டு. உலகப் புகழ் பெற்ற மொகேர்