பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியச்‌ செயற்கைக்கோள்கள்‌ 211

என்னும் துணி நெய்ய மிக மிருதுவான உரோமம் தரும் வெள்ளாட்டிற்கு அங்கோரா ஆடு என்று பெயர். பிறநாட்டு ஆட்டினங்களும் இந்தியாவில் வளர்க்கப்படுகின்றன. நியூபியன் ஆடு, எகிப்தைச் சேர்ந்த நியூபியா விலும், அபிசீனியாவிலும் இதைக் காணலாம். இதற் குக் கொம்புகள் இல்லை. கீழ்த்தாடைகள் சற்று நீண்டிருக்கும். காதுகள் நீண்டு தொங்கிக் கொண் டிருக்கும். சிவப்பு அல்லது கறுப்பு நிறமாக இருக் கும். பாலுக்கு ஏற்றது. மால்ட்டா ஆடு. இது மால்ட்டா தீவைச் சேர்ந்த தது. ஏறத்தாழ 75 செ.மீ. உயரமிருக்கும். இதற்குக் கொம்புகள் இல்லை. இதன் நிறம் வெண்மை. காதுகள் நீண்டு தொங்காமல் பக்கவாட்டில் தூக்கி நிற்கும். பாலுக்கு ஏற்றது. ஜாதி சுவிட்சர்லாந்து நாட்டில் பாலுக்குச் சிறந்த சில ஆடுகளிலிருக்கின்றன. அவற்றுள் முக்கிய மானவை: டாகென்பர்கு ஆடு. இது சாதாரணமாகச் சிவப்பு நிறம். இதன் கால்களும், காதுகளும் வெண்ணிறம். இதற்கு முகத்திலும் தலைப்பாகத்திலும் இரண்டு வெண்ணிற முள்ள கோடுகள் உண்டு. கொம்பு களில்லை. சானே ஆடு. இது வெண்ணிறமானது. பால் அதிகமாகக் கொடுக்கும். ஆல்பைன் ஆடு. து ஆல்ப்ஸ் மலைப் பிர தேசத்தைச் சேர்ந்தது. பாலுக்கு உகந்தது. ஜமன்பாரி ஆடு. இது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தது. உடல் பருத்தது. மூக்கு வில் போல் வளைந்திருக்கும். ஏறத்தாழ 70 செ.மீ. நீளமுள்ள தொங்குகின்ற காதுகளுடையது. சிவப்பும் கறுப்பும் கலந்த நிறம் கொண்டது பாலுக்கும் ஊனுக்கும் உகந்தது. சூரத் ஆடு. இது சூரத் பிரதேசத்தைச் சுற்றி இடங்களில் யுள்ள காணப்படும். மட்டமானது; வெண்ணிறம் கொண்டது; கொம்பற்றது; பால் அதிகமாகக் கொடுக்கும். இதன் கடாவுக்குத் தாடி யுண்டு. தலைச்சேரி அல்லது மலையான ஆடு. பலநாள் களாக வளர்க்கப்பட்டு வரும் இக்கலப்பு இன ஆடு, சூரத்,நியூபியன் முதலிய ஆடுகளுக்கும் உள்நாட்டு ஆடுகளுக்கும் பிறந்தது. வெண்மையும் கறுப்பும் கலந்த நிறம் கொண்டது. நாள் ஒன்றுக்கு 2-3 லிட்டர் பால் கொடுக்கும். பீடால் ஆடு, பாரிபாரி ஆடு, கட்ச் ஆடு போன்றவை தென்னாட்டில் இன்னும் பரவவில்லை. -ஆர். வெங்கடகிருட்டிணன் இந்தியச் செயற்கைக்கோள்கள் 211 இந்தியச் செயற்கைக்கோள்கள் சென்னையில் 1792 ஆம் ஆண்டில் ஒரு வான்காட்சி யகம் நிறுவப்பட்டதை இந்திய விண்வெளி ஆராய்ச் சியின் திருப்புமுனை எனலாம். கொடைக்கானலில் 1898 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு வான்காட்சி யகம் மேலும் சிறப்பு அளித்தது. பம்பாயில் 1823 இல் நிறுவப்பட்ட இந்திய வானிலை அளவியல் துறையும், கொலாபாவில் நிறுவப்பட்ட வான்காட்சி யகமும், 1926 இல் கல்கத்தாவில் செய்யப்பட்ட வளி மண்டலத்தின் மின்னணுமண்டல ஆராய்ச்சியும் இந்திய விண்வெளி பற்றிய தெளிந்த அறிவைப்பெறப் பயன்பட்டன. பின்னர் நிகழ்ந்த தொடர் தொழில் நுட்ப வளர்ச்சியும், பலதுறை அறிவியல் அறிவும் இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச் சிக்குப் பயன்பட்டன. 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் நாள்திருவனந்தபுரத்திற்கு அருகில் அமைந்த தும்பா என்ற மீன்பிடி தொழில் நிறைந்த கிராமத்தில் அமைக்கப்பட்ட ஏவூர்தி செலுத்தும் நிலையம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய தொரு கட்டமாகும். தும்பா நிலநடுவரை ஏவூர்தி செலுத்தும் நிலையம், முதன் முதலில் ஏவூர்திகளை விண்வெளியில் செலுத்துவதற்கான ஆய்வுகளைப் பல்வேறு மேலை, கீழை நாடுகளுடன் இணைந்து செய்தது. சோவியத் நாடு, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் முதலிய நாடுகள் இந்திய விண் வெளி ஆராய்ச்சிக்குத் துணைபுரிந்த நாடுகளாகும். விண் இந்திய அரசு அமைதியான பொருளாதார வளர்ச்சித் தேவைகளுக்காகப் பயன்படும் வெளித் திட்டங்களை வரையறுக்குமாறு அணு ஆற்றல் துறையை 1961 இல் கேட்டுக் கொண்டது. இந்திய ய அரசு 1962 ஆம் ஆண்டில் ஏற்படுத்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழு இந்திய விண் வெளித் திட்டங்களை வகுத்து அறிவுரை கூறியது. 1969 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் விண் வெளித் தொடர்பான தொழில்நுட்பத் திட்டங் களைச் செயற்படுத்த முனைந்தது. 1972 இல் ஒரு விண்வெளி ஆணையத்தை இந்திய அரசு ஏற்படுத் தியது. விண்வெளி அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை து ஊக்குவிக்கும் முறைகளையும், அதற் கான கொள்கைகளையும் வரவு செலவுத் திட்டத்தையும் இவ் வாணையம் பொறுப்பேற்று நிர்வகித்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களை நடை முறைப்படுத்தும் அதிகாரம் பெற்றிருந்தது. இதன் தலைமையகம் பெங்களுரில் அமைந்தது. இது இந்தியாவில் உள்ள அனைத்து விண்வெளி மையங் களையும் ஒருங்கிணைத்தது. அகமதாபாத்தில் அமைந்த இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வுக்கூடம் விண் அ.க.4-14அ