பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியத்‌ தாவரவியல்‌ அளவாய்வு 215

இச்செயற்கைக்கோளில் தொண்ணூறு முதல் நூற்றுப்பத்து வாட் திறனுள்ள நிக்கல் கேட்மியம் மின்கலங்கள் அமைந்திருக்கும். இவற்றின் மொத்த மின் கொள்ளளவு பன்னிரண்டு ஆம்பியர் மணி களாகும். இவ்விண்வெளிக்கலம் 20 முதல் 50° செல்சியஸ் வரையிலான வெப்பநிலை வேறுபாட்டு டன் இயங்கும். தலைமைச் சட்டகம் 0° முதல் 40° செல்சியஸ் இதன் வெப்ப வேறுபாடுடையது. போக்கு, நோக்குக் கட்டுப்பாட்டு அமைப்புகள் மூன்று அடுக்குகளுக்கும் சுழல்வுக்கும் நிலைபடுத்தப் பட்டிருக்கும். இதில் ஹைட்ரசீன் என்ற தனி ஏவூர்தி எரிபொருள் பயன்படுத்தப்படும். இதில் கூம்பு வடிவ நிலக்கோள் உணரிகளும், காந்தமானிகளும், கதிரவ உணரிகளும் அமைந்து இருக்கும். இச்செயற்கைக் கோளில் விரைவு உயர்மான தீர்மானிப்புச் செய் முறை இது ஏஎஸ்எல்வியின் நான்காம் கட்டத் திறமையை ஆயும்) அதிர்ச்சி ஒளியியல், ஆய்வு செய் முறை (இது செயற்கைக் கோள் உள்ளே நிலவும் சூழ்நிலை விளைவை ஆயும்). காமா கதிர் வெடிப்பு ஆய்வு (விண்வெளி காமா கதிர் வெடிப்புகளின் ஆற்றல் இடைவெளியைக்கணிக்கும்), தடம் பின்பற்றும் செய்முறை (இது ஒளியியலாக செயற்கைக் கோளின் வழித்தடத்தைப் பின்பற்றும்) ஆகிய துணைச்சுமைகள் இதில் அமைந்திருக்கும். லேசர் வள இந்தியத் தொலைமுறை உணர் செயற்கைக் கோள் 'ஐ.ஆர்.எஸ்). இந்திய விண்வெளித் திட்டத்தின் ஒரு சிறப்புப் பணி, தொலை முறை உணர் செயற்கைக் கோளை உருவாக்கித் தேசிய இயற்கை மேலாண்மை அமைப்புக்குப் பயன்படுத்துவதும் செயற்கைக்கோளில் தொலை முறை உணர்தலுக்கான கருவிகளை வைத்து நிலக்கோளத்தைச் சுற்றி அதன் வட்டணையில் ஏவி நிலவளத்தை ஆய்வதும் சிக்கன மானதும், எளிமையானதும், விரைவானதும் ஆகும். ஒரு குறிப்பிட்ட நிலக்கோளப்பரப்பை வான னவூர்தி மூலம் ஒளி வரை எடுப்பதைவிடச்செயற்கைக்கோளில் இருந்து ஒளி வரை எடுப்பது எளிய செயல் ஆகும். நிலக்கோளம் சுற்றும் போது பல்வேறு பரப்புகளை ஒரே செயற்கைக் கோளில் உள்ள கருவிகளால் நில வரை எடுக்கலாம். வேளாண்மை, கான்வளம், நீர் வளம் ஆகியவற்றை ஆய இம்முறை பெரிதும் பயன் படுகின்றது. இத்துறைகளில் பயிர் வளர்ச்சி ஆராய வும், சிதைவைக் கொண்டு அறியவும் நிலப் பயன் ஆராயவும், மண் வளம் ஆராயவும், வெள்ளப் பெருக்கு நிலைமையைப் படம் பிடிக்கவும் மிக்க ஊற்று நீர் நுட்பமான தன்மை வளத்தை ஆராயவும் நில அரிப்பையும், கடற்கரை அரிப்பை யும், நகர்ப்புற நிலப் பயன்பாட்டை ஆராயவும், நிலப் படங்களைத் தயாரிக்கவும் இம்முறை பயன்படு கின் றது. பாட்டை இந்தியத் தொலைமுறை உணர்தல் செயற்கைக் இந்தியத் தாவரவியல் அளவாய்வு 215 கோள் திட்டம். இது வேளாண்மை, பாசனம், காட்டு வளம், சூழல் துறை, சுரங்கவியல் ஆகிய அமைச் சகங்களின் இயற்கை வள மேலாண்மை நிறுவனங் களுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. ஆரிய பட்டா, பாஸ்கரா, உரோகிணி, ஆப்பிள் ஆகிய செயற்கைக்கோள் திட்டங்களில் பெற்ற பட்டறி வின் மூலம் இந்திய நாட்டிலேயே தொள்ளாயிரம் கிலோ கிராம் எடை கொண்ட மூன்று அச்சு நிலைப் படுத்திய செயற்கைக்கோளைத் தொளாயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் தொலை முறை உணர் கருவி களுடன் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.ஆர். எஸ்-1 என்பது இத்தகைய வரிசைச் செயற்கைக் கோள்களில முதல் வகையாகும். இவ்வரிசைச் செயற்கைக் கோள்கள் ஒவ்வொன்றும் இரண்டு முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒன்றாக ஏவப்படும்.1985ஆம் ஆண்டில் இதன் வடிவமைப்பு இறுதிக் கட்டத்தை அடைந்தது. இது பலவித அதிர்வு ஆய்வுகளுக்கும், அதிர்ச்சி ஆய்வுகளுக்கும் ஆட்படுத்தப்பட்டது. ஐ.ஆர்.எஸ்-1 செயற்கைக் கோளுக்கான வடிவமைப்பும் கட்டுமானமும் ஆய்வுகளும் 1987 இல் முடிந்தன. சோவியத் நாட்டின் பைக்கானூர் விண்வெளி 1988 ஜனவரி இருபத்தெட்டாம் நாள் தனி வாடகை விமானத்தில் மாஸ்கோவுக்குக்கொண்டு செல்லப் பட்டுள்ளது. இதன் மொத்த எடை ஆயிரம் கி.கி. இந்தியாவின் பல பகுதிகளில் அமைந்த இதன் ஐந்து வட்டார நிலையங்களும் பதினெட்டு இயங்கு தடக் கட்டுப்பாட்டு நிலையங்களும் இச்செயற்கைக் கோளி லிருந்து வரும் செய்திகளைப் பெற்று ஆயும். இத் தகவல்கள் இந்தியாவின் இயற்கை வளங்களையும், ஆண்டு முழுதும் பயிர் விளைச்சலைக் கண்காணிப் பதற்கான செய்திகளையும் தரும். இந்தியத் தாவரவியல் அளவாய்வு -உலோ.செ இந்தியாவின் தாவர வளத்தினை அறியும் நோக்கில் 1890 ஆம் ஆண்டில் சர் ஜார்ஜ் கிங் என்பவரின் தலைமையின் கீழ் இந்தியத் தாவரவியல் அளவாய்வு தொடங்கப்பட்டது. இந்தியாவை முறையே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று நான்கு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியும் வட்டார இயக்கு நர்களைக் கொண்டு செயல்பட ஆரம்பித்தது. தத்தம் பகுதிகளில் தாவர இனங்களைச் சேகரித்துப் பதப்படுத்தி, தாவரத்தின் இனம் கண்டு, வகைப் படுத்தி, பதப்படுத்திய தாவரக் கூடங்களில் (lherbaria ) சேகரித்துவைத்து, மேலும் இந்தியத் தாவர வளம், வட்டாரத் தாவர வளம் ஆகியவற்றின் தொகுப்புகள்