பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய நாட்டு அறிவியல்‌, தொழில்‌ நுட்பக் கொள்கைகள்‌ 223

இந்திய . நுட்பக்கொள்கைகள் 223 மானத்தை நடைமுறைப்படுத்தவும், செயல்பாட்டிற் கான ஒரு திட்டத்தை வகுக்கவும் அறிவியல் செயல் முறையில் அடங்கிய அடிப்படைக் கூறுபாடுகளை இனம் காண வேண்டும். 1958 இல் அறிவியல் கொள் கைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசு அறிவியல் அறிஞர், கல்வியாளர் ஆகியோர் குழுமிய மாநாட்டை அறிவியல் ஆராய்ச்சிப் பண் பாட்டு நடவடிக்கை அமைச்சரவையில் நடத்தியது. இம்மாநாடு சம்பள விகிதம், வேலை நிலைமைகள், திறமையை ஊக்குவித்தல், ஆராய்ச்சிக்கான கூடுதல் உதவித்தொகை அளித்தல், ஆய்வுக் கருவிகளுக்கான கூடுதல் நிதி ஒதுக்குதல், மனிதப்பொருள் வளங் களுக்கிடையில் தக்கதொரு ஒருங்கிணைப்பை உரு வாக்கல் ஆகிய பல பிரச்சினைகள் பற்றிய முடிவு களை விவாதித்தது. இம்மாநாடு அறிவியல் அறிஞர் களுக்கிடையே உள்ள தேக்கத்தைத் தகர்த்தெறிந்து, பல்வேறு துறைகளுக்கும் அவர்கள் தேவைப்பட்ட போதெல்லாம் இடம் மாற்றம் செய்ய வழிவகை செய்யும் பரிந்துரையை நிறைவேற்றியது. புதிய கருவி களை உற்பத்தி செய்யத் தேவைப்படும் வசதிகளை உருவாக்கவும், அறிவியல் செய்திகளைத் திரட்டித் தேக்கிப் பரப்பவும், அறிவியல் சிந்தனை முறையை உருவாக்கவும் வழிவகை செய்ய வேண்டுமெனப் பரிந் துரை செய்தது. அறிவியல் கொள்கைத் தீர்மானத்தை நிறை வேற்றுவதில் உள்ள புதிய தடங்கல்களை ஆராய 1963 இல் அறிவியல் அறிஞர், கல்வியாளர் ஆகியோர் குழுமிய இரண்டாவது மாநாட்டைக் கூட்டியது. இந்த மாநாடு நல்லதொரு சம்பள விகிதத்தையும், வாழ்க்கை நலன்களையும், வேலை செய்யும் நிலைமை களையும், திறமையை ஊக்குவிப்பதையும் வற்பு றுத்தியது. இம்மாநாடுகளின் மூலம் ஆராய்ச்சிக்குக் கூடுதல் நிதி உதவியும் பிற வசதிகளும் ஏற்படுத் தப்பட்டன. பிரதம மந்திரி தலைமையின் கீழ் 1967 இல் நடந்து வட்ட மேசை மாநாடு பல்வேறு பரிந்துரைகளைக்கூறியது. அவையாவன: பள்ளி, கல் லூரிக் கல்வியில் அறிவியல் அறிஞரின் பங்கு, அறி வியலை மக்களிடம் கொண்டு செல்வதில் அவர்களின் கடமை, பல்கலைக்கழகங்களிடையே ஒருங்கிணைப்பு, நாட்டுத் தேவைக்கேற்ப ஆராய்ச்சியைத் திட்டமிடு தல், அறிவியல் தொழில் நுட்பத்திற்கான தேசியக் குழுவை உருவாக்கல் என்பனவாகும். அறிவியல் தொழில்நுட்பக் குழுவால் 1970 இல் அறிவியல் அறி ஞர், தொழில் நுட்ப அறிஞர், கல்வியாளர் ஆகி யோர் அடங்கிய மூன்றாம் மாநாடு நடத்தப்பட்டது. அறிவியல் கொள்கைத் தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்,அதை நடை முறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களையும் குறைபாடுகளையும் நீக்குவதற்கான வழிவகைகள், புதிய அறிவியல் கொள்கைத் தீர்மானத்தை உரு வாக்க வேண்டிய தேவை, அப்படித் தேவைப்பட் . டால் அதற்கான புதிய உருவரை ஆகியவற்றை உள் நோக்கங்களாகக் கொண்டு இம்மாநாடு நடத்தப் பட்டது. இம்மாநாடு, அறிவியல் கொள்கைத் தீர் மானத்தை நிறைவேற்றுவதில் உள்ள தடங்கல்களை எடுத்துக் கூறியது. இது, நாட்டின் திட்டத்தைத் தயாரிக்கும்போதே அறிவியல் தொழில்நுட்பத் திட்டத்தையும் அதனுடைய ஒருபகுதியாகத் தயாரிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. பல்வேறு கல்விக் கழகங்களை ஒருங்கிணைத்துத் தேசியக் கல்விக் கழ கத்தை உருவாக்க வேண்டும் எனவும் பரிந்துரைத் தது. தொழில் நுட்ப இறக்குமதிக் கொள்கையை மனித வளத் திட்டத்துடன் உள்நாட்டு ஆராய்ச்சி, புதுப் பொருளாக்க நிலைமையுடன் உறவுபடுத்தியே வகுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. தொழில் நுட்பக் கொள்கை அறிக்கை. மூன்று பத்தாண்டுகளாகத் திட்டங்களின் வாயிலாக 1958 ஆம் ஆண்டின் அறிவியல் கொள்கைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியதால் இந்தியா வளரும் நாடு களில் சிறந்ததொரு வேளாண்மைத் தொழில் நுட்ப நாடாகவும், தரத்திலும், திறமையிலும், எண்ணிக்கை யிலும் உயர் நிலை வாய்ந்த அறிவியல் மனித வளம் உடைய நாடாகவும் உயர்ந்தது. தக்க நோக்கங் களை உருவாக்கி ஒத்துழைப்பு அளிக்கும் போது, அறிவியல் தரும் நலங்களும் அதன் சிக்கலைத் தீர்க் கும் திறமையும் வெளிப்பட்டன. மேற்கூறிய வளர்ச்சியில் உடனடியாகத் தொழில் நுட்பம் பற்றிய தெளிவான அறிக்கை உருவாக்க வேண்டிய நிலைமை எழுந்தது. நாட்டின் பொருளா தாரச் சமூகப் பண்பாட்டுக் கூறுபாடுகளை உள்ள டக்கிய தொழில் நுட்பம் பின்வரும் செய்திகளைக் கருதவேண்டும். அவை தக்க தொழில் நுட்பத்தைத் தேர்ந்தெடுத்தல், உள்நாட்டு வளர்ச்சியை உருவாக கல், வளர்ச்சியில்லாத துறைகளில் வெளிநாட்டுத் தொழில் நுட்ப அறிவைப் பெற்று இந்திய நாட்டைத் தகவமைத்துப் பயன்படுத்தல், அனைத்துலக மட்டத் தில் தேவையான துறைகளில் போட்டியிடுதல், தொழில் நுட்பம் உருவாக்குவதில் உள்ள பல்வேறு உட்கூறுகளை ஒருங்கிணைத்தல், நாட்டுப் பொருளா தாரத்திற்குத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தல், தொழில் நுட்பம் வளர்க்கத் தேவையான நிதியைப் பெறும் மூல நிறுவனங்களைத் தீர்மானித்தல் என் பனவாகும். மேற்கூறிய, சிக்கலான பன்முக நிலைமைகளை உள்ளடக்கிய தொழில் நுட்பக் கொள்கை அறிக்கையை இந்திய அரசு 1983ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிவித்தது. இந்திய அரசின் தொழில் நுட்பக் கொள்கை யின் அடிப்படைக் கூறுபாடுகள் நாட்டுக்குத் தொழில் நுட்ப வளர்ச்சியை ஊக்குவித்தலும், தேவைப்படும்