224 இந்திய நிலஇயல் கட்டமைப்பு
224 இந்திய நிலஇயல் கட்டமைப்பு துறைகளில் வெளிநாட்டு உதவியைப் பெற்று அதை இந்திய நாட்டுக்கு ஏற்ப மாற்றியமைத்தலும் ஆகும். இந்தியத் தொழில் நுட்பக் கொள்கையில் பின்வரும் இலக்குகள் அடங்கியுள்ளன. தொழில் நுட்பத்தில் திறமை, தன்னிறைவு, இடர் தவிர்த்தல் ஆகிய வளமைகளைப் போட்டி உள்ள துறைகளில் உருவாக்கவேண்டும். இதற்கு நாட்டக் வளங்களைப் பேரளவில் பயன்படுத்தலாம். சமூகத் தின் பல அடுக்குகளிடையே உள்ள மனித வளத்திற்கு நிறைவு தரத் தக்க வகையில் பயன்மிக்க வேலையை உருவாக்கவேண்டும். இதில் பெண்களுக்கும், மெலிந்த பிரிவுகளுக்கும் முன்னுரிமை தரவேண்டும். மேலும், மரபு வழித் திறமைகளை வணிக இயலாகப் போட்டியிடவல்ல முறையில் மாற்றி அமைத்தல், பேரளவு உற்பத்திக்கும் மனித முயற்சி உற்பத்திக்கும் இடையில் தக்கதொரு விகிதத்தை நடைமுறைப் படுத்தல், நாட்சென்ற தொழில் நுட்ப உதவி ஏற் பட்டுக் கருவி மற்றும் தொழில் நுட்ப வளத்தைப் புதுமைப்படுத்தல், ஏற்றுமதி வாய்ப்புள்ள தொழில் நுட்பத்தை அனைத்துலகச் சந்தையைச் சந்திக்க வல்ல திறமையுடன் வளர்த்தல், தனி மனிதத் திறமையை வளர்ப்பதன் மூலம் உற்பத்தியை வளர்த் தல், நிலவும் வசதிகளை முழுமையாகப் பயன் படுத்தல், செயல்திறமையையும் வெளியீட்டையும் தரமுடன் நம்பகமாக உயர்த்தல், ஆற்றலின் தேவை யைக் குறைத்தல், சூழ்நிலைச் சமநிலையைப் பாது காத்து வாழுமிடத்தின் தரத்தை வளர்த்தல், கழிவுப் பொருள்களை மீளப் பயன்படுத்தி விளைபொருள் களை முழுமையாகப் பயன்படுத்தல் ஆகிய நோக் கங்கள் தொழில் நுட்பக் கொள்கையின் உட்கூறு களாக வரையறுக்கப்பட்டன. இந்திய நிலஇயல் கட்டமைப்பு உலோ.செ. இந்தியா மூன்று தெளிவான புறவியல்பு வட்டாரங் களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பண்பைப் பெற்றுள்ளது. இவற்றில் முதன் மையாக அமைவது முந்நீரகம் (penninsula) அல்லது முந்நீரகக் காப்பு (penninsular shield). இக்காப்பு மிகப்பழமையான நிலையான கட்டமைப்பைக் கொண்ட புவி மேலோடு. இதில் அசாம், வங்காளம், பீகார், உத்தரப்பிரதேசம். பஞ்சாப், மேற்குப் பகுதி யில் சிந்து வரை உள்ள பகுதிகள் அடங்கும். புற முந்நீரகம் என்பது மூன்றாவதாகக் காணப்படுவது. இதில் உயர்ந்த இமயமலைப் பகுதியும், இதன் தொடர்ச்சியில் ஒரு பகுதி பலுசிஸ்தானில் இருந்தும், மற்றுமொரு பகுதி பர்மா, அரக்கான் வரையிலும் காணப்படும். இம்முன்று பிரிவுகளும் தெளிவான நிலவரையியல், அடுக்குப்பாறை இயல், கட்டமைப்பு இயல் போன்ற கூறுகளைக் காட்டுகின்றன. நிலவரையியல், முந்நீரகம் ஒரு பழைய மேட்டுப் பகுதியான நிலம். இது நீண்ட கால அரிமானத் திற்குட்பட்டுச் சமவெளி நிலயை அடைந்து காணப் படுகிறது. கடினமான பாறைகள், மிகுந்த பல உயர்ந்த மலைத்தொடர்களைக் கொண்டது. எனவே தன் நிலைவரையியல் கட்டமைப்புக் கூறுபாடுகள் உண்மையான கட்டமைப்பை ஒத்திருப்பதில்லை. இப்பகுதி நதிகளால் ஏற்படும் அரிமானம் பெரும் பாலும் தட்டையான நிலப்பரப்புகளையும், குறைந்த அளவு பக்கச் சரிவுடைய அகன்ற ஆழமில்லாப் பள்ளத்தாக்குகளையும் உருவாக்குகின்றது. இதற்கு நேர்மாறாகப் புற முந்நீரகம் பல மடிப்பு மலைகளை யும் பெயர்ச்சிப் பிளவுகளையும் தொடர்மலை அடுக்கு களையும் ஒன்றின் மேல் ஒன்று அழுத்திய முறுக்கிய மலைத் தொடர்களையும் அண்மையில் உருவாக் கியுள்ளது. இப்பகுதியில் இளநிலையைப் பெற்றுள்ள ஆறுகளும், அவற்றின் ஓட்டத்தால் அடிக்கடி மாறும் ஆழமான செங்குத்துப் பக்கங்களையுடைய பள்ளத் தாக்குகளும் தோன்றியுள்ளன. இவ்விரண்டு நிலப் பகுதிகளுக்கும் இடையில் சிந்து - கங்கைச் சமவெளி உள்ளது. இச்சமவெளி அகன்ற பரப்பையும் மிகுந்த அண்மைக்காலப் படிவுகளையும் தன் மேற்பரப்பில் பெற்றுள்ளது. அடுக்குப்பாறைஇயல். இம்முந்நீரகம் ஒரு காப் புப் பகுதியாகும். இக்காப்புப் பகுதி, பழமை யான பாறைகளால் பல காலங்களுக்குத் தொகுக்கப் பட்ட, பல உருமாற்றத்திற்கு உட்பட்ட, பலவகைத் தோற்றத்தைக் கொண்ட பாறைகளால் ஆனது. இப்பழமையான பாறைகளில் ஆர்க்கேயன் படிவு கிடைநிலையில் படிந்துள்ள பாறைக் குழம்பின் படி வுகள், தக்காணப் பீடபூமிக் கடற்கரைப் பகுதி களில் காணப்படும் அண்மைக்கால மிசோசோயிக், டெர்ஷியரி படிவுகள் முதலியவை அடங்கும். புற முந்நீரகப் பகுதியில் மிகப் பழங்காலப் பாறைகள் காணப்பட்ட போதும் ஆழ்நிலைச் சரிவுகளில் படிந்துள்ள கேம்பிரியன் முதல் டெர்ஷியரி வரை யுள்ள காலக்கட்டப் பாறைப் படிவுகள் அடியில் கரும்பகுதியாக அமைந்துள்ளன. மேலும் இவ் வகைப் படிவுப் பாறைகள் மடிப்பு மலை ஆக்கத் திற்கு அழுத்தப்பட்டு மடிப்பு மலையாகவும், பாறை ஒன்றின் மேல் ஒன்று அழுத்தப்பட்டு முறை பட்ட மடிப்பு மலையாகவும் உயர்த்தப்பட்டுள்ளன. மிசோசோயிக் காலம் வரை வறண்ட நிலமாகக் காணப்பட்டு, பின் பனிமலைகளாகக் காணப்படு கின்றன. இம்மலையின் உட்கூறில் டெர்ஷியரிக் காவக் கிரானைட்டுப் பாறைகள் ஊடுருவிய வகை யில் காணப்படுகின்றன. இதன் தென்புறம் சிந்து மாறு